2024 Maruti Swift CNG அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
published on செப் 13, 2024 08:06 am by rohit for மாருதி ஸ்விப்ட்
- 40 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஸ்விப்ட் CNG; Vxi, Vxi (O), மற்றும் Zxi போன்ற மூன்று வேரியன்ட்களில் கிடைக்கிறது. மேலும் அதனுடன் தொடர்புடைய பெட்ரோல்-மேனுவல் வேரியன்ட்களை விட ரூ. 90,000 கூடுதலாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
-
மாருதி மே 2024-இல் புதிய ஸ்விப்ட்டின் பெட்ரோல்-மட்டும் வேரியன்ட்களை அறிமுகப்படுத்தியது.
-
CNG வேரியன்ட்களுக்கான விலைகள் ரூ. 8.20 லட்சம் முதல் ரூ.9.20 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) உள்ளது.
-
CNG வேரியன்ட்கள் அதே 1.2-லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினைப் பயன்படுத்துகின்றன, ஆனால் இவை 69 PS மற்றும் 102 Nm-யை வழங்குகின்றன, மேலும் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே கிடைக்கும்.
-
ஸ்விப்ட் CNG-யில் 7 இன்ச் டச்ஸ்கிரீன், ஆட்டோ ஏர் கண்டிஷனிங் மற்றும் ஆறு ஏர்பேக்குகள் உள்ளன.
-
ஸ்விப்ட் விலை ரூ.6.49 லட்சம் முதல் ரூ.9.60 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நான்காவது தலைமுறை மாருதி ஸ்விப்ட் மே 2024-இல் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அதில் CNG ஆப்ஷன் வழங்கப்படவில்லை. மாருதி இதை நிவர்த்தி செய்து ஹேட்ச்பேக்கின் CNG வேரியன்ட்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனுடன் CNG கிட் ஆப்ஷனலாக மூன்று வேரியன்ட்களிலும் வழங்கப்படுகிறது, இதன் விலை பற்றிய விவரங்கள் பின்வருமாறு:
வேரியன்ட் |
பெட்ரோல் இன்ஜினின் விலை |
CNG இன்ஜினின் விலை |
வித்தியாசம் |
Vxi |
ரூ. 7.30 லட்சம் |
ரூ. 8.20 லட்சம் |
+ரூ. 90,000 |
Vxi (O) |
ரூ. 7.57 லட்சம் |
ரூ. 8.47 லட்சம் |
+ரூ. 90,000 |
Zxi |
ரூ. 8.30 லட்சம் |
ரூ. 9.20 லட்சம் |
+ரூ. 90,000 |
CNG வேரியன்ட்களுக்கு அவற்றின் தொடர்புடைய பெட்ரோல்-மேனுவல் வேரியன்ட்களை விட 90,000 ரூபாயை பிரீமியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஸ்விப்ட் CNG இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் பற்றிய விவரங்கள்
பின்வரும் இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் ஸ்விப்ட்டின் CNG வேரியன்ட்களை மாருதி வழங்கியுள்ளது:
விவரங்கள் |
ஸ்விப்ட் CNG |
இன்ஜின் |
1.2 லிட்டர் பெட்ரோல் + CNG |
பவர் |
69 PS |
டார்க் |
102 Nm |
டிரான்ஸ்மிஷன் |
5-ஸ்பீட் MT |
கிளைம் செய்யப்படும் மைலேஜ் |
24.8 கி.மீ/கிலோ |
அதே 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்ற வேரியன்ட்களிலும் கிடைக்கிறது. இது 82 PS மற்றும் 112 Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது. இது 5-ஸ்பீட் AMT விருப்பத்தையும் வழங்குகிறது.
ஸ்விப்ட் CNG-இன் சிறப்பம்சங்கள்
இயந்திர மாற்றங்களைத் தவிர ஸ்விப்ட் CNG அதன் அடிப்படையிலான வேரியன்ட்களின் அதே அம்சத்தை தக்கவைத்துக்கொள்கிறது. 7 இன்ச் டச்ஸ்கிரீன், ரியர் வென்ட்களுடன் கூடிய ஆட்டோ க்ளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்பம் ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாகும்.
மாருதி ஸ்விப்ட் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு இதில் ஆறு ஏர்பேக்குகள் (நிலையாக வழங்கப்படுகிறது), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP), ஹில்-ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் ரிவர்சிங் கேமரா ஆகியவற்றை வழங்குகிறது.
மாருதி ஸ்விப்டின் விலை மற்றும் போட்டியாளர்கள்
மாருதி ஸ்விப்ட் CNG-யின் ஒரே நேரடி போட்டியாளர் ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் CNG ஆகும். கூடுதலாக, ஸ்விஃப்ட் CNG இப்போது, டாடா பன்ச் மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டரின் CNG வேரியன்ட்களுடனும் போட்டியிடுகிறது.
புதிய கார்கள் தொடர்பான அப்டேட்களுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க: மாருதி ஸ்விப்ட் AMT
0 out of 0 found this helpful