சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

பிரிட்டன் சந்தைக்கான 2024 Maruti Suzuki Swif காரின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.. இந்தியாவிலும் விரைவில் அறிமுகப்படுத்தப்படலாம்

rohit ஆல் மார்ச் 27, 2024 05:59 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
23 Views

UK-ஸ்பெக் நான்காம்-ஜென் ஸ்விஃப்ட் புதிய 1.2-லிட்டர் 3-சிலிண்டர் Z சீரிஸ் பெட்ரோல் இன்ஜினுடன் மேனுவல் மற்றும் CVT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் வருகிறது.

  • சுஸூகி நிறுவனம் 2024 ஏப்ரலில் புதிய ஸ்விஃப்ட்டை பிரிட்டனில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

  • இப்போது விற்பனை செய்யப்பட்டு வரும் இந்தியா-ஸ்பெக் மாடலை விட 15 மி.மீ நீளமானது. ஆனால் அதே அகலம் மற்றும் வீல்பேஸை கொண்டுள்ளது.

  • UK -வில் 2WD மற்றும் AWD ஆப்ஷன்கள் இரண்டிலும் கிடைக்கும்; இந்தியா-ஸ்பெக் மாடல் 2WD ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கும்.

  • 9-இன்ச் டச் ஸ்கிரீன், ஆட்டோ ஏசி ரிவர்சிங் கேமரா மற்றும் ADAS போன்ற வசதிகளை பெறுகிறது.

  • ஏப்ரல் 2024 -க்குள் இந்தியாவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விலை ரூ. 6 லட்சத்தில் இருந்து தொடங்க வாய்ப்புள்ளது (எக்ஸ்-ஷோரூம்).

நான்காவது தலைமுறை மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் விரைவில் இந்திய சந்தையில் நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஏற்கனவே அதன் சொந்த நாட்டில் (ஜப்பான்) அறிமுகப்படுத்தப்பட்டது. வரும் ஏப்ரல் மாதத்தில் இங்கிலாந்தில் விற்பனைக்கு வர உள்ளது. இப்போது ​​UK-ஸ்பெக் ஸ்விஃப்ட்டின் அளவுகள், பவர்டிரெய்ன் விவரங்கள், வேரியன்ட்கள் மற்றும் சில முக்கிய வசதிகள் உட்பட அனைத்து விவரங்களையும் சுஸூகி வெளியிட்டுள்ளது. அவற்றைப் இங்கே பார்ப்போம்:

புதிய ஸ்விஃப்ட்டின் அளவுகள்

அளவுகள்

யுகே-ஸ்பெக் ஸ்விஃப்ட்

தற்போதைய இந்தியா-ஸ்பெக் ஸ்விஃப்ட்

வித்தியாசம்

நீளம்

3860 மி.மீ

3845 மி.மீ

+15 மிமீ

அகலம்

1735 மி.மீ

1735 மி.மீ

எந்த வித்தியாசமும் இல்லை

உயரம்

1495 மிமீ (2WD)/ 1520 மிமீ (AWD)

1530 மி.மீ

-35 மிமீ/ -10 மிமீ

வீல்பேஸ்

2450 மி.மீ

2450 மி.மீ

எந்த வித்தியாசமும் இல்லை

யுகே-ஸ்பெக் புதிய ஸ்விஃப்ட் தற்போது விற்பனையில் உள்ள இந்தியா-ஸ்பெக் மாடலை விட 15 மிமீ நீளமானது. அதன் அகலம் மற்றும் வீல்பேஸ் இந்தியா-ஸ்பெக் ஸ்விஃப்ட் போலவே உள்ளது. யுகே-ஸ்பெக் மாடல் நம் நாட்டில் விற்பனையாகும் மாடலை விட 35 மிமீ வரை குறைவாக உள்ளது.

பவர்டிரெய்ன்கள்

ஜப்பான்-ஸ்பெக் ஹேட்ச்பேக்கில் காணப்படும் புதிய 1.2-லிட்டர் 3-சிலிண்டர் Z சீரிஸ் பெட்ரோல் இன்ஜினுடன் UK-ஸ்பெக் ஸ்விஃப்ட்டை சுஸூகி வழங்குகிறது. இதன் பவர் அவுட்புட் ஜப்பான்-ஸ்பெக் மாடலை போலவே இருந்தாலும் இது இன்னும் கொஞ்சம் கூடுதலான டார்க்கை உருவாக்குகிறது. இந்த இரண்டு சந்தைகளிலும் உள்ள வாடிக்கையாளர்கள் புதிய ஹேட்ச்பேக்கை 12V மைல்ட்-ஹைப்ரிட் சிஸ்டம் மற்றும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஆப்ஷன்களுடன் கொடுக்கலாம். ஜப்பான்-ஸ்பெக் மாடலை போலவே சுஸூகி இங்கிலாந்திலும் ஆல்-வீல் டிரைவ் (AWD) ஆப்ஷனுடன் ஸ்விஃப்டை தொடர்ந்து வழங்கும்.

புதிய ஸ்விஃப்ட் இந்தியாவிற்கு வரும்போது ​​அது அதே டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் , 2WD செட்டப் உடன் மட்டுமே வெளியாகும் என்று எதிர்பார்க்கிறோம்.

மேலும் படிக்க: ஃபியூல் பப்ம்பில் ஏற்பட்ட சிக்கல்: ரீகால் செய்யப்பட்ட Maruti Wagon R மற்றும் Baleno -வின் 16,000 யூனிட்கள்

காரிலுள்ள வசதிகள்

புதிய UK-ஸ்பெக் ஸ்விஃப்ட்டிற்கான புதுப்பிக்கப்பட்ட கேபின் மற்றும் வசதிகள் ஜப்பானிய மாடலை போலவே உள்ளன. இது 9 இன்ச் டச் ஸ்கிரீன் யூனிட், 16 இன்ச் அலாய் வீல்கள், ஆட்டோ ஏசி, எல்இடி ஹெட்லைட்கள் எலக்ட்ரிக்கலி அட்ஜஸ்ட்டபிள் ORVM -கள் மற்றும் கனெக்டட் கார் டெக்னாலஜி ஆகியவற்றுடன் வழங்கப்படும். பாதுகாப்புக்காக லேன் டிபார்ச்சர் வார்னிங் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ரிவர்சிங் கேமரா மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் போன்ற பல அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) -களுடன் இந்த கார் வரும்.

முழுமையான ADAS தொகுப்பு அல்லது ஹீட்டட் சீட்களை தவிர மேலே குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு வசதிகள் இந்தியா-ஸ்பெக் புதிய தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் காரில் கொடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

எதிர்பார்க்கப்படும் இந்திய வெளியீடு மற்றும் விலை

2024 மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் இந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ.6 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கலாம். இது ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் உடன் அதன் போட்டியை தொடரும். மேலும் ரெனால்ட் ட்ரைபர் சப்-4m கிராஸ்ஓவர் MPV -க்கு மாற்றாக இருக்கும்

மேலும் படிக்க: ஸ்விஃப்ட் AMT

Share via

Write your Comment on Maruti ஸ்விப்ட்

மேலும் ஆராயுங்கள் on மாருதி ஸ்விப்ட்

மாருதி ஸ்விப்ட்

4.5373 மதிப்பீடுகள்இந்த காரை ரேட்டிங் செய்ய
சிஎன்ஜி32.85 கிமீ / கிலோ
பெட்ரோல்24.8 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் ஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புதிய வேரியன்ட்
Rs.6.23 - 10.19 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.4.70 - 6.45 லட்சம்*
Rs.4.97 - 5.87 லட்சம்*
எலக்ட்ரிக்புதிய வேரியன்ட்
Rs.7 - 9.84 லட்சம்*
எலக்ட்ரிக்
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை