2023 Tata Nexon காரின் பின்புற வடிவமைப்பு ஸ்பை படங்கள் மூலமாக தெரிய வந்துள்ளது
டாடா நிக்சன் க்காக ஆகஸ்ட் 25, 2023 11:55 am அன்று ansh ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 73 Views
- ஒரு கருத்தை எழுதுக
பின்புறத்தின் ஒட்டுமொத்த தோற்றத்தில் பெரிய மாற்றம் இல்லை ஆனால் நவீனமாக, ஸ்போர்ட்டியாக உள்ளது.
-
நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் ஒரு TVC படப்பிடிப்பின் போது மூடப்படாமல் படம் பிடிக்கப்பட்டது.
-
புதிய நிறத்தில் இந்த கார் இருந்தது, இது புதிய பின்புற பம்பர் மற்றும் டெயில் லேம்ப் வடிவமைப்பை கொண்டிருக்கிறது.
-
இது புதுப்பிக்கப்பட்ட கேபினுடனும் வரக்கூடும்.
-
இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது: 1.5-லிட்டர் டீசல் மற்றும் 1.2-லிட்டர் டர்போ பெட்ரோல்.
-
அது இந்த ஆண்டின் பிற்பகுதியில் ரூ. 8 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் வெளிவரக்கூடும்.
ஃபேஸ்லிஃப்டட் டாடா நெக்ஸான் இன்னும் வரவில்லை, ஆனால் அதன் புகைப்படங்கள் அதன் வெளியீடு மிக அருகாமையில் உள்ளதை நமக்கு நினைவூட்டுகிறது. புதுப்பிக்கப்பட்ட சப்காம்பாக்ட் எஸ்யூவி -யை அதன் TVC படப்பிடிப்பின் நடுவில் எந்த மறைப்பும் இல்லாமல் பார்க்க முடிந்தது, இறுதியாக அதன் புதிய பின்புற தோற்றமும் தெரிந்தது.
நெக்ஸானின் புதிய பின்புற தோற்றம்
டாடா -வின் ஒட்டுமொத்த வடிவமானது, ரியர் ஸ்பாய்லர் மற்றும் ரிஃப்ளெக்டர் பேனல்கள் போன்ற ஒத்த கூறுகளைக் கொண்டிருந்தாலும், விவரங்கள் இப்போது மிகவும் நவீனமானவை மற்றும் அதிக ஆக்ரோஷமானவை. புதிய நெக்ஸானின் மிக முக்கியமான மாற்றம், நடுவில் கனெக்டட் ஆக கொடுக்கப்பட்டுள்ள புதிய நேர்த்தியான LED டெயில் லேம்ப் அமைப்பாகும்.
மேலும் படிக்க: Tata Punch EV: சார்ஜ் செய்யும் போது முதன் முறையாக கேமராவில் சிக்கியுள்ளது
அதற்குக் கீழே, பின்புற ஹான்ச்கள் மிகவும் கவர்ச்சிகரமாக இருப்பதால், பக்கங்களில் உள்ள ரிஃப்ளெக்டர் பாகங்கள் ஸ்போர்ட்டியர் தோற்றத்திற்காக இப்போது உயரமாக உள்ளன. பக்கங்களிலும் அதிக கூர்மையான மடிப்புகள் மற்றும் பம்பர் இப்போது திருத்தம் செய்யப்பட்ட பாகங்களுடன் பெரியதாக உள்ளது.
பிற வடிவமைப்பு மாற்றங்கள்
2023 நெக்ஸான் முற்றிலும் புதிய தோற்றத்தை பெறுகிறது. அதன் முன்பக்க தோற்றமும் சமீபத்தில் காணப்பட்டது,ஹாரியர் EV உள்ளதை போன்ற ஸ்டைலிங் மற்றும் பெரிய முன்புற கிரில்லைக் கொண்ட கீழே ஹெட்லேம்ப் பொருத்தப்பட்டுள்ளது தெரிய வருகிறது.
மேலும் படிக்க: 2023 ஆகஸ்ட் மாதத்தில் ஹூண்டாய் எக்ஸ்டரை விட டாடா பன்ச் எளிதாக கிடைக்கும்
உட்புறத்தில் கூட, வடிவமைப்பில் பெரிய மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2023 நெக்ஸான் புதிய டேஷ்போர்டு லேஅவுட், பெரிய டச் ஸ்கிரீன் டிஸ்பிளே, மறுவடிவமைப்பு செய்யப்பட்ட சென்டர் கன்சோல், புதிய ஸ்டீயரிங் மற்றும் மாறுபட்ட கேபின் கலர் ஸ்கீம் உடன் வரும்.
எதிர்பார்க்கப்படும் பவர்டிரெயின்கள்
புதுப்பிக்கப்பட்ட சப்காம்பாக்ட் எஸ்யூவி -யானது அதன் 1.5-லிட்டர் டீசல் இன்ஜினை (115PS/160Nm) 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 6-ஸ்பீடு AMT உடன் இணைக்கலாம். டாடா 2023 நெக்ஸானுக்கு அதன் புதிய 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல்
இன்ஜினை (125PS/225Nm) வழங்கலாம், இது DCT (டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன்) ஆப்ஷனுடன் வரலாம்.
அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு
இந்த ஃபேஸ்லிஃப்ட் மூலம், அதன் அம்சங்கள் பட்டியலில் பெரிய மாற்றங்களையும் எதிர்பார்க்கிறோம். ஃபேஸ்லிஃப்டட் நெக்ஸான் 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டிரைவருக்கான டிஜிட்டல் டிஸ்ப்ளே ஆகியவற்றை பெறலாம். வென்டிலேட்டட் முன்புற இருக்கைகள், அட்டானமஸ் கிளைமேட் கன்ட்ரோல், மின்சார சன்ரூஃப் மற்றும் வயர்லெஸ் சார்ஜர் போன்ற வசதிகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: டாடா அல்ட்ரோஸ் Vs மாருதி பலேனோ Vs டொயோட்டா கிளான்ஸா - CNG மைலேஜ் ஒப்பீடு
பாதுகாப்பை பொறுத்தவரையில் இது ஆறு ஏர்பேக்குகள் மற்றும் 360 டிகிரி கேமராவை பெறலாம். இது அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) அம்சங்களையும் பெறலாம் மற்றும் அவற்றைப் பெறும் முதல் சப்காம்பாக்ட் எஸ்யூவ ஆகவும் இது இருக்கும். இது எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் டயர் அழுத்த கண்காணிப்பு அமைப்புடன் வருகிறது.
அறிமுகம் மற்றும் விலை
நெக்ஸான் ஃபேஸ்லிஃப்டின் அறிமுகம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இதன் விலை ரூ. 8 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் இருக்கலாம். கியா சோனெட் , ஹீண்டாய் வென்யூ , மஹிந்திரா XUV300 மற்றும் மாருதி பிரெஸ்ஸா போன்றவற்றுக்கு 2023 நெக்ஸான் தொடர்ந்து போட்டியாக இருக்கும்.
படங்களின் ஆதாரம்
மேலும் படிக்க: நெக்ஸான் AMT