சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

சில டீலர்ஷிப்களில் Citroen C3 Aircross ஆட்டோமெட்டிக் வேரியன்ட்டுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது

சிட்ரோய்ன் aircross க்காக ஜனவரி 16, 2024 03:57 pm அன்று shreyash ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

சிட்ரோன் C3 ஏர்கிராஸ் ஆட்டோமெட்டிக் வேரியன்ட் வெளியீடு ஜனவரி இறுதிக்குள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

  • சிட்ரோன் C3 ஏர்கிராஸ் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் ஆப்ஷனை பெற வாய்ப்புள்ளது.

  • சிட்ரோன் நிறுவனத்தின் காம்பாக்ட் எஸ்யூவி 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் (110 PS / 190 Nm) மட்டுமே வருகிறது.

  • தற்போது இது 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே வழங்கப்படுகிறது.

  • C3 ஏர்கிராஸ் -ன் ஆட்டோமெட்டிக் வேரியன்ட்கள், தொடர்புடைய மேனுவல் டிரான்ஸ்மிஷன் வேரியன்ட்களை விட ரூ.1.3 லட்சம் வரை கூடுதல் விலையுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிட்ரோன் C3 ஏர்கிராஸ் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்ட 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் - செப்டம்பர் 2023 -ல் இந்தியாவில் ஒரே ஒரு பவர்டிரெய்னுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது 2024 ஆண்டில், சிட்ரோன் நிறுவனம் இறுதியாக C3 ஏர்கிராஸிற்கான ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனை அறிமுகப்படுத்தவுள்ளது. மூன்று வரிசை காம்பாக்ட் எஸ்யூவி -யை வாங்க நீங்கள் ஆர்வமாக இருந்தால், இப்போது ஆஃப்லைனிலும், சில சிட்ரோன் டீலர்ஷிப்களிலும் முன்பதிவு செய்யலாம்.

ஆட்டோமெட்டிக் வேரியன்ட்

வெவ்வேறு உலகளாவிய சந்தைகளில் வெவ்வேறு ஆப்ஷன்களை பெறும் C3 ஏர்கிராஸ் உடன் வழங்கப் போகும் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் வேரியன்ட்டை சிட்ரோன் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், ஊகங்களின் அடிப்படையில், C3 ஏர்கிராஸ் அதன் 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் (110 PS / 190 Nm) 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டரை பெறும். தற்போது, ​​இந்த இன்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே வழங்கப்படுகிறது.

இதையும் பார்க்கவும்: ஃபேஸ்லிப்டட் Kia Sonet HTK வேரியன்ட்டை படங்களில் விரிவாக இங்கே பாருங்கள்

அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு

ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் சிட்ரோன் C3 ஏர்கிராஸின் அம்சப் பட்டியலில் எந்த மாற்றமும் இருக்காது என நாங்கள் நினைக்கின்றோம். தற்போது, ​​இது வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேவை ஆதரிக்கும் 10.2-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஸ்யூவி -யானது டிரைவருக்கான 7-இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே, ஸ்டீயரிங் மவுண்டட் ஆடியோ கன்ட்ரோல்கள் மற்றும் மூன்றாவது வரிசையில் பிரத்யேக வென்ட்களுடன் கூடிய மேனுவல் ஏசி ஆகியவற்றைப் பெறுகிறது. பாதுகாப்பைப் பொறுத்தவரை, இது டூயல் முன் ஏர்பேக்குகள், ஹில்-ஹோல்ட் அசிஸ்ட், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ரியர் வியூ கேமரா மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) ஆகியவற்றுடன் வருகிறது.

இதையும் பார்க்கவும்: எக்ஸ்க்ளூசிவ்: Tata Punch EV -யின் பேட்டரி மற்றும் செயல்திறன் விவரங்கள் அறிமுகத்திற்கு முன்னதாக வெளியாகியுள்ளன

எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்

சிட்ரோன் C3 ஏர்கிராஸ் -ன் ஆட்டோமெட்டிக் வேரியன்ட்கள் அதனுடன் தொடர்புடைய மேனுவல் வேரியன்ட்களை விட ரூ. 1.3 லட்சம் வரை கூடுதல் விலையில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, ​​C3 ஏர்கிராஸின் விலை ரூ.9.99 லட்சம் முதல் ரூ.12.75 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பான் இந்தியா) வரை உள்ளது. ஹோண்டா எலிவேட், ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக், மற்றும் எம்ஜி ஆஸ்டர் ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

மேலும் படிக்க: சிட்ரோன் C3 ஏர்கிராஸ் ஆன் ரோடு விலை

Share via

Write your Comment on Citroen aircross

R
rk chauhan
Jan 22, 2024, 2:56:37 PM

How much price of automatic c3 Air cross

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புதிய வேரியன்ட்
Rs.2.84 - 3.12 சிஆர்*
புதிய வேரியன்ட்
பேஸ்லிப்ட்
Rs.1.03 சிஆர்*
புதிய வேரியன்ட்
Rs.11.11 - 20.50 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.13.99 - 24.89 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை