இந்த மாதம் ஹோண்டா கார்களுக்கு ரூ.76,100 வரை தள்ளுபடி கிடைக்கும்.
புதிய ஹோண்டா அமேஸ் கார்ப்பரேட் பலன்களை மட்டுமே பெறுகிறது. இது தவிர ஹோண்டா -வின் மற்ற அனைத்து கார்களும் கிட்டத்தட்ட அனைத்து வேரியன்ட்களிலும் தள்ளுபடியைப் பெறுகின்றன.
-
ஹோண்டா எலிவேட் -ல் 76,100 மதிப்புள்ள தள்ளுபடி கிடைக்கும். இது இந்த மாதத்தில் அதிகம் ஆகும்.
-
பழைய ஹோண்டா அமேஸ் பேஸ்-ஸ்பெக் எஸ் வேரியன்ட்டில் ரூ.57,200 வரை தள்ளுபடி கிடைக்கும்.
-
ஹோண்டா சிட்டி அதிகபட்சமாக ரூ.63,300 தள்ளுபடியும், ஹைப்ரிட் வேரியன்ட் ரூ.65,000 வரை தள்ளுபடியும் கிடைக்கும்.
-
அனைத்து சலுகைகளும் ஏப்ரல் 30, 2025 வரை கிடைக்கும்.
2025 ஏப்ரலில் அதன் மாடல்களுக்கான தள்ளுபடிகளை ஹோண்டா அறிவித்துள்ளது. முந்தைய மாதங்களை போலவே புதிய தலைமுறை ஹோண்டா அமேஸ் காரில் எந்த தள்ளுபடியும் கிடைக்காது. இருப்பினும் இரண்டாம் தலைமுறை ஹோண்டா அமேஸ், தற்போதைய ஹோண்டா எலிவேட், ஹோண்டா சிட்டி மற்றும் ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் மற்ற ஹோண்டா கார்களுக்கு
ரூ.76,100 வரை தள்ளுபடி கிடைக்கும். இந்த தள்ளுபடிகளை விரிவாகப் பார்ப்போம்:
பழைய ஹோண்டா அமேஸ் (2 -வது தலைமுறை)
சலுகை |
தொகை |
மொத்த பலன்கள் |
57,200 வரை |
-
மேலே உள்ள தள்ளுபடியானது பழைய ஹோண்டா அமேஸின் பேஸ்-ஸ்பெக் S வேரியன்ட்டிற்கு பொருந்தும்.
-
இரண்டாம் தலைமுறை அமேஸ் எஸ் மற்றும் விஎக்ஸ் வேரியன்ட்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.7.63 லட்சம் முதல் ரூ.9.86 லட்சம் வரை இருக்கும்.
-
2025 மார்ச் போல இல்லாமல் ஃபுல்லி லோடட் VX வேரியன்ட்டிற்கு இந்த மாதம் தள்ளுபடி கிடையாது.
ஹோண்டா எலிவேட்
சலுகை |
தொகை |
மொத்த பலன்கள் |
76,100 வரை |
-
2025 ஏப்ரலில் டாப்-ஸ்பெக் ZX வேரியன்ட்டில் மேற்கூறிய தள்ளுபடிகள் கிடைக்கும்.
-
மற்ற வேரியன்ட்களான எஸ்வி, வி மற்றும் விஎக்ஸ் ஆகியவை ரூ.56,100 வரை குறைவான தள்ளுபடியுடன் கிடைக்கும்.
-
அபெக்ஸ் பதிப்பில் ரூ.56,100 வரை தள்ளுபடி கிடைக்கும்.
-
ஹோண்டா எலிவேட்டின் விலை ரூ.11.91 லட்சம் முதல் ரூ.16.73 லட்சம் வரை இருக்கும்.
மேலும் படிக்க: இந்த ஏப்ரலில் மாருதி அரீனா மாடல்களில் ரூ.67,100 வரை தள்ளுபடி கிடைக்கும்
ஹோண்டா சிட்டி
சலுகை |
தொகை |
மொத்த பலன்கள் |
63,300 வரை |
-
ஹோண்டா சிட்டியின் அனைத்து வேரியன்ட்களும் மேற்கண்ட தள்ளுபடியுடன் வழங்கப்படுகின்றன.
-
ஹோண்டா சிட்டியின் விலை ரூ.12.28 லட்சம் முதல் ரூ.16.55 லட்சம் வரை இருக்கிறது.
ஹோண்டா சிட்டி ஹைப்ரிட்
சலுகை |
தொகை |
மொத்த பலன்கள் |
65,000 வரை |
-
பெட்ரோல்-பவர்டு ஹோண்டா சிட்டியை போலவே, சிட்டி ஹைப்ரிட் அனைத்து வேரியன்ட்களிலும் ரூ.65,000 வரை ஒரே மாதிரியான தள்ளுபடியைப் பெறுகிறது.
-
ஹோண்டா சிட்டி ஹைப்ரிட், ரூ.20.75 லட்சம் விலையில் ஃபுல்லி லோடட் ஒரே ஒரு ZX வேரியன்ட்டில் கிடைக்கிறது.
கவனிக்கவும்:
-
அனைத்து விலை விவரங்களும் எக்ஸ்-ஷோரூம், பான்-இந்திய -வுக்கானவை
-
தேர்ந்தெடுக்கப்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அனைத்து கார்களுக்கும் கூடுதல் கார்ப்பரேட் தள்ளுபடிகள் உடன் கிடைக்கின்றன ( புதிய ஹோண்டா அமேஸ் உட்பட).
-
தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியன்ட், நிறம், நகரம் மற்றும் மாநிலத்தின் அடிப்படையில் சலுகைகளில் மாற்றம் இருக்கலாம். சலுகைகளின் சரியான விவரங்களுக்கு, உங்கள் அருகிலுள்ள டீலரை தொடர்பு கொள்ளவும்.
-
அனைத்து சலுகைகளும் ஏப்ரல் 30, 2025 வரை மட்டுமே கிடைக்கும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.