Citroen C3 Aircross : இது ஆஃப் ரோடுக்கு ஏற்றதாக இருக்குமா?
published on ஆகஸ்ட் 09, 2023 05:15 pm by tarun for சிட்ரோய்ன் aircross
- 18 Views
- ஒரு கருத்தை எழுதுக
தார் அல்லது ஸ்கார்பியோ N போன்று இது நிச்சயமாக ஹார்ட்கோர் கிடையாது, ஆனால் C3 ஏர்கிராஸ் சில டிரெயில்களை பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை.
காம்பேக்ட் எஸ்யூவி சந்தையில் இணையும் ஒன்பதாவது மாடலாக சிட்ரோன் C3 ஏர்கிராஸ் இருக்கும். சிட்ரோன் இதன் முன்பதிவு மற்றும் டெலிவரியை செப்டம்பர் முதல் தொடங்க திட்டமிட்டுள்ளது, அதே மாதத்தில், விலையை பற்றிய விவரங்கள் நமக்கு கிடைக்கும்.
C3 ஏர்கிராஸ் ‘எஸ்யூவி’ பெயரை கொண்டுள்ளது, ஆனால் அனைத்து எஸ்யூவிகளும் நகரம் மற்றும் நெடுஞ்சாலை பயன்பாட்டை விட மற்ற இடங்களுக்கு ஏற்றதாக இருப்பதில்லை. எனவே, சிட்ரோனின் ஆஃப்-தி-ரோடு ஆற்றலை சரிபார்க்கவும், அது போன்ற சூழ்நிலைகளில் அதை எப்படி கையாள முடிகிறது என்பதைப் பார்க்கவும் நாங்கள் முடிவு செய்தோம். இந்த ரீலைப் பாருங்கள்:
அது எப்படி செயல்பட்டது?
முதலில், C3 ஏர்கிராஸ் எளிதாக கடந்து செல்லும் கிரவுண்ட் கிளியரன்ஸ் சோதனையை செய்ய முடிவு செய்தோம், இதில் 200மிமீ அடிப்பகுதி இருக்கிறது . இதன் மூலம், அதன் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் அம்சத்தையும் சோதிக்க முடியும். இந்த எஸ்யூவியின் திறனை சோதிக்க சைடு டில்டு மற்றும் வாட்டர் வேடிங் சோதனைகளும் செய்யப்பட்டது.
சாலையைத் தாண்டிய பயணத்திற்கு சக்கரங்களின் இசைவு என்பது முக்கிய சோதனைகளில் ஒன்றாகும், இதனை மீண்டும், C3 ஏர்கிராஸ் சிரமமின்றி கடந்துவிட்டதாகத் தெரிகிறது. இறுதியாக, தட்டையான கீழ்ப்பாகம் இருப்பதால் எஸ்யூவியை பாறைகள் நிறைந்த டெஸ்ட் பேட்ச்சிலிருந்து பாதுகாப்பாக இருக்கிறது. இருப்பினும், இந்த அனைத்து சோதனைகள் மூலம், C3 இன்னும் ஆஃப்-ரோடராக இருப்பதற்கான தகுதியை பெறவில்லை, ஆனால் மழைக்காலத்தை போலவே லேசான சாகசங்கள் மற்றும் சில நேரங்களில் மோசமான நகர சாலைகளிலும் ஒரு சாஃப்ட்-ரோடராக இருக்கக் கூடும்.
மேலும் படிக்கவும்: Citroen C3 Aircross: என்ன வசதிகள் கிடைக்கும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்
C3 ஏர்கிராஸ்: பானெட்டின் கீழ் என்ன இருக்கிறது
6- வேக மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ள 110PS 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினுடன் C3 ஏர்கிராஸ் வருகிறது. அதே போன்ற ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனை இறுதி செய்யும் பணியில் சிட்ரோன் ஈடுபட்டுள்ளது, அது 2024 -க்குள் எஸ்யூவியில் கொடுக்கப்படலாம்.
அம்சங்கள் மற்றும் போட்டியாளர்கள்
மேலும் படிக்க: ஹோண்டா எலிவேட் Vs ஹூண்டாய் கிரெட்டா Vs கியா செல்டோஸ் Vs மாருதி கிராண்ட் விட்டாரா Vs டொயோட்டா ஹைரைடர் - விவரக்குறிப்புகள் ஒப்பீடு
இது 10.2 இன்ச் டச் ஸ்கிரீன் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே, 7 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, டூயல் ஃப்ரண்ட் ஏர்பேக்குகள், பின்புற பார்க்கிங் கேமரா மற்றும் ஹில் ஹோல்ட் அசிஸ்ட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக், MG ஆஸ்டர், மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் மற்றும் ஹோண்டா எலிவேட் ஆகிய கார்களுடன் C3 ஏர்கிராஸ் போட்டியிடும் மற்றும் அதன் விலை ரூ.9 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) -லிருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .
மேலும் படிக்கவும்: சிட்ரோன் C3 ஆன் ரோடு விலை