Citroen C3 Aircross: என்ன வசதிகள் கிடைக்கும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்
modified on ஆகஸ்ட் 03, 2023 06:30 pm by tarun for சிட்ரோய்ன் aircross
- 24 Views
- ஒரு கருத்தை எழுதுக
புதிதாக வரவிருக்கும் சிட்ரோன் C3 ஏர்கிராஸ் காரின் விலை தவிர தொழில்நுட்ப விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்கள் உள்ளிட்ட பெரும்பாலான விவரங்கள் வெளியாகியுள்ளன.
-
C3 Aircross ஐந்து மற்றும் ஏழு இருக்கை கட்டமைப்புகளில் பல வேரியன்ட்களை பெறுகிறது.
-
இது நீக்கக்கூடிய மூன்றாவது வரிசை இருக்கைகள் மற்றும் இரண்டாவது வரிசை இருக்கைகளுக்கு 60:40 ஸ்பிளிட்செட்டப்பை பெறுகிறது.
-
10.2-இன்ச் டச் ஸ்கிரீன் சிஸ்டம், டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, டூயல் ஏர்பேக்குகள், டிபிஎம்எஸ் மற்றும் பின்புற கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
-
6 -ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் 110PS 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது
-
9 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) விலை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடுமையான போட்டி நிறைந்ததாக இருக்கும் எஸ்யூவி பிரிவில் பிரெஞ்சு கார் தயாரிப்பாளரால் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நான்காவது கார் சிட்ரோன் C3 ஏர்கிராஸ் ஆகும். சிட்ரோன் தற்போது இந்த எஸ்யூவி -யின் தொழில்நுட்ப மற்றும் இதர வசதிகளைப் பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளது.
கிடைக்கும் வசதிகள்
எக்ஸ்டீரியர் |
இன்டீரியர் |
சவாரி தரம் மற்றும் வசதி |
இன்ஃபோடெயின்மென்ட் | பாதுகாப்பு |
|
|
|
|
|
C3 ஏர்கிராஸ் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 10.2 இன்ச் டச்ஸ்கிரீன் சிஸ்டம், 7 இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, மேனுவல் ஏசி, ரூஃப்-மவுண்டட் ஏசி வென்ட்கள், கீலெஸ் என்ட்ரி, எலக்ட்ரிக்கல் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ORVMகள் மற்றும் அனைத்து வரிசையிலும் USB சார்ஜிங் போர்ட்கள் ஆகியவை பாதுகாப்பைப் பொறுத்தவரை, இது இரட்டை முன் ஏர்பேக்குகள், ESP, ஹில் ஹோல்ட் அசிஸ்ட், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் மற்றும் பின்புற பார்க்கிங் கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இருக்கை கட்டமைப்புகள்
அதன் மூன்று வரிசையை பொறுத்தவரையில், C3 ஏர்கிராஸ் அகற்றக்கூடிய மூன்றாம் வரிசை இருக்கைகளைக் கொண்டுள்ளது, இது பயனர்களுக்கு தாராளமான பூட் ஸ்பேசை வழங்குகிறது. இதன் ஐந்து சீட்டர் மாடலில் 511 லிட்டர் வரை பூட் திறன் உள்ளது. மேலும் பயன்படுத்தக்கூடிய இடத்திற்காக, இரண்டாவது வரிசை இருக்கைகளை 60:40 என்ற விகிதத்தில் பிரித்து மடக்கலாம், மேலும் மூன்று வரிசை வெர்ஷனில் அவற்றை சாய்க்க முடியும். சிங்கிள் ஃபுல்-ஸ்பெக்டு ட்ரிம், பிரீமியம் கேபின் அனுபவத்திற்காக செமி லெதர்ட் சீட் அப்ஹோல்ஸ்டரியுடன் வருகிறது.
மேலும் படிக்கவும்: ஹோண்டா எலிவேட் Vs ஹூண்டாய் க்ரெட்டா Vs கியா செல்டோஸ் Vs மாருதி கிராண்ட் விட்டாரா Vs டொயோட்டா ஹைரைடர் : விவரக்குறிப்புகள் ஒப்பீடு
பவர்டிரெயின்கள்
C3 ஏர்கிராஸ் மாடலின் ஹுட்டின் கீழ் 110PS மற்றும் 190Nm ஐ வெளியிடும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இது இப்போதைக்கு 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனைப் பெறுகிறது, ஆனால் ஆட்டோமேட்டிக் ஆப்ஷன் பின்னர் அறிமுகப்படுத்தப்படக் கூடும் என்று எதிர்பார்க்கிறோம்.
மேலும் படிக்கவும்: சிட்ரோன் C3 மற்றும் அதன் போட்டியாளர்கள்:மைலேஜ் ஒப்பீடு
C3 ஏர்கிராஸின் விலை சுமார் ரூ.9 லட்சத்தில் இருக்கும் (எக்ஸ்-ஷோரூம்) என எதிர்பார்க்கிறோம். ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக், எம்ஜி ஆஸ்டர், மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் மற்றும் ஹோண்டா எலிவேட் உள்ளிட்ட அதன் காம்பாக்ட் எஸ்யூவி போட்டியாளர்களின் கூடுதல் வசதிகளை கொண்ட கார்களை விட இது குறைவாக விலை நிர்ணயம் செய்யப்படலாம்.
மேலும் படிக்கவும்: சிட்ரோன் C3 ஆன் ரோடு விலை
0 out of 0 found this helpful