• English
  • Login / Register

Tata Punch EV Empowered Plus S Medium Range மற்றும் Tata Tigor EV XZ Plus Lux: எந்த EV -யை வாங்குவது சிறந்தது?

published on மார்ச் 27, 2024 07:01 pm by shreyash for டாடா பன்ச் EV

  • 20 Views
  • ஒரு கருத்தை எழுதுக

இங்குள்ள டிகோர் EV -யை விட டாடா பன்ச் EV ஆனது அதிக செயல்திறன் கொண்டதாக இருந்தாலும் இரண்டு EV -களும் கிளைம்டு ரேஞ்ச் என வரும்போது கிட்டத்தட்ட நெருக்கமாக உள்ளது.

Tata Punch EV vs Tata Tigor EV

ஜனவரி 2024 -ல் டாடா பன்ச் EV விற்பனைக்கு வந்தது. டாடா -வின் ஆல் எலக்ட்ரிக் வரிசையில்  மேலும் இது மிக சமீபத்திய கூடுதலாகும். பன்ச் EV மீடியம் ரேஞ்ச் (MR) மற்றும் லாங் ரேஞ்ச் (LR) ஆகிய வேரியன்ட்களுடன் வருகிறது. சுவாரஸ்யமாக அதன் டாப்-ஸ்பெக் MR வேரியன்ட் டாப்-ஸ்பெக் XZ பிளஸ் லக்ஸ் வேரியன்ட்க்கு நெருக்கமாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டாடா டிகோர் EV. பேப்பரில் உள்ள விவரங்கள் மற்றும் வசதிகளின் அடிப்படையில் அவற்றை ஒப்பிடுவோம்.

மேலும் விவரங்களை பார்க்கும் முன் முதலில் அவற்றின் விலை விவரங்கள் இங்கே:

விலை

டாடா பன்ச் EV எம்பவர்டு பிளஸ் எஸ் மீடியம் ரேஞ்ச்

டாடா டிகோர் EV XZ பிளஸ் லக்ஸ்

ரூ.13.79 லட்சம்

ரூ.13.75 லட்சம்

அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் (டெல்லி) -க்கான விலை ஆகும்

டிகோர் EV -யின் டாப்-ஸ்பெக் வேரியன்ட்டை விட பன்ச் EV -யின் டாப்-ஸ்பெக் மீடியம் ரேஞ்ச் வேரியன்ட் ரூ.4000 அதிகம்.

அளவுகள்

 

டாடா பன்ச் EV

டாடா டிகோர் EV

நீளம்

3857 மி.மீ

3993 மி.மீ

அகலம்

1742 மி.மீ

1677 மி.மீ

உயரம்

1633 மி.மீ

1532 மி.மீ

வீல்பேஸ்

2445 மி.மீ

2450 மி.மீ

பூட் ஸ்பேஸ்

366 லிட்டர் (+14 லிட்டர் ஃப்ரங்க் ஸ்டோரேஜ்)

316 லிட்டர்

Tata Tigor EV

  • இரண்டு EV கார்களுக்கும் இடையில் ஒட்டுமொத்த நீளத்திற்கு வரும்போது இது ஒரு சிறிய நன்மையைக் கொண்ட செடான் ஆகும். இருப்பினும் அதன் எஸ்யூவி பாடி டைப் ஆக இருக்கின்றது.  டிகோர் EV -யை விட பன்ச் EV அகலமாகவும் உயரமாகவும் உள்ளது.

  • டிகோர் EV இன் வீல்பேஸ் பன்ச் EV -யை விட வெறும் 5 மிமீ அதிகம்.

  • பன்ச் EV ஆனது டிகோர் EV -க்கு மேல் 50 லிட்டர் கூடுதல் பூட் ஸ்பேஸை வழங்குவது மட்டுமின்றி முன்புறத்தில் 14 லிட்டர் கூடுதல் ஃப்ரங்க் ஸ்டோரேஜையும் பெறுகிறது.

மேலும் பார்க்க: Volkswagen Virtus GT பிளஸ் Sport vs Hyundai Verna Turbo: படங்களில் ஒப்பீடு

Tata Punch EV Boot Space

  • பன்ச் EV ஆனது டிகோர் EV -க்கு மேல் 50 லிட்டர் பூட் ஸ்பேஸ் வழங்குவது மட்டுமல்லாமல் முன்புறத்தில் கூடுதலாக 14 லிட்டர் ஃப்ரங்க் ஸ்டோரேஜையும் பெறுகிறது.

பவர்டிரெயின்கள்

விவரங்கள்

டாடா பன்ச் EV மீடியம் ரேஞ்ச்

டாடா டிகோர் EV

பேட்டரி பேக்

25 kWh

26 kWh

பவர்

82 PS

75 PS

டார்க்

114 Nm

170 Nm

கிளைம் கோரப்பட்ட ரேஞ்ச்

315 கிமீ (MIDC)

315 கிமீ (ARAI)

  • இங்குள்ள இரண்டு டாடா EV -க்களும் ஒரே அளவிலான பேட்டரி பேக்குகளையே கொண்டுள்ளன. இரண்டும் 315 கிமீ வரை கிளைம்டு ரேஞ்சை வழங்குகின்றன.

  • பன்ச் EV தான் இங்கு அதிக பவர்புல்லான EV ஆகும். டிகோர் EV ஆனது பன்ச் EV -யை விட 56 Nm அதிக டார்க்கை வழங்குகிறது.

சார்ஜிங் விவரங்கள்

சார்ஜர்

சார்ஜிங் நேரம்

டாடா பன்ச் EV மீடியம் ரேஞ்ச்

டாடா டிகோர் EV

50 kW DC ஃபாஸ்ட் சார்ஜர் (10-80 சதவீதம்)

56 நிமிடங்கள்

59 நிமிடங்கள்

7.2 kW AC (10-100 சதவீதம்)

விவரம் கிடைக்கவில்லை

விவரம் கிடைக்கவில்லை

3.3kW AC/ 15A போர்ட்டபிள் சார்ஜர் (10-100 சதவீதம்)

9.4 மணிநேரம்

9.4 மணி நேரம்

  • 50 kW DC ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தும் போது ​​இரண்டு EV -களும் சுமார் ஒரு மணி நேரத்தில் 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் ஆகும்.

  • ஹோம் வால் பாக்ஸ் AC சார்ஜர் மூலம் பன்ச் EV மற்றும் டிகோர் EV இரண்டும் 10 முதல் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 9.4 மணிநேரம் வரை ஆகும்.

வசதிகள்

வசதிகள்

டாடா பன்ச் EV எம்பவர்டு பிளஸ் S மீடியம் ரேஞ்ச் (MR)

டாடா டிகோர் EV XZ பிளஸ் லக்ஸ்

வெளிப்புறம்

  • LED DRL -களுடன் ஆட்டோ-LED புரொஜெக்டர் ஹெட்லைட்கள்

  • டிஆர்எல்களுடன் வெல்கம் மற்றும் குட்பை அனிமேஷன்

  • DRL -களில் ஸ்மார்ட் சார்ஜிங் இண்டிகேட்டர்

  • சீக்வென்ஷியல் எபெக்ட் ஆன் டேர்ன் இண்டிகேட்டர்ஸ் 

  • LED முன் ஃபாக் லைட்ஸ்

  • ஷார்க்-ஃபின் ஆண்டெனா

  • ரூஃப் ரெயில்ஸ்

  • 16-இன்ச் அலாய் வீல்கள்

  • LED DRLகள் கொண்ட ஆட்டோ-ஹலோஜன் புரொஜெக்டர் ஹெட்லைட்கள்

  • முன் ஃபாக் லைட்ஸ்

  • LED டெயில் விளக்குகள்

  • ஷார்க்-ஃபின் ஆண்டெனா

  • 14-இன்ச் ஸ்டீல் வீல்ஸ் மற்றும் கவர்கள்

உட்புறம்

  • லெதரைட் சீட் அப்ஹோல்ஸ்டரி 

  • இல்லுமினேட்டட் டாடா லோகோவுடன் 2-ஸ்போக் ஸ்டீயரிங் சுற்றியிருக்கும் லெதரெட்

  • பின்புற ஆர்ம்ரெஸ்ட்

  • லெதரைட் சீட் அப்ஹோல்ஸ்டரி 

  • லெதரைட் சுற்றப்பட்ட ஸ்டீயரிங்

  • பின்புற ஆர்ம்ரெஸ்ட்

  • முன் மற்றும் பின்புறம் 12V பவர் அவுட்லெட்

கம்ஃபோர்ட் & வசதி

  • ஆட்டோமெட்டிக் ஏசி

  • உயரத்தை அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வகையிலான ஓட்டுநர் இருக்கை

  • கூல்டு க்ளோவ் பாக்ஸ்

  • வென்டிலேட்டட் முன் இருக்கைகள்

  • சன்ரூஃப்

  • AQI டிஸ்ப்ளே கொண்ட ஏர் ஃபியூரிபையர்

  • நான்கு பவர் விண்டோஸ்

  • மல்டிமோட் ரீஜெனரேஷன் பிரேக்கிங்

  • பிரேக்கிங் ரீஜென் முறைகளுக்கான பேடில் ஷிஃப்டர்

  • டிரைவிங் மோட்கள் (சிட்டி & ஸ்போர்ட்)

  • க்ரூஸ் கன்ட்ரோல்

  • புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப்

  • எலக்ட்ரிக்கலி அட்ஜஸ்ட்டபிள் ஆட்டோ-ஃபோல்டிங் ORVMS

  • ஆட்டோ டிம்மிங் IRVM

  • USB Type-C ஃபாஸ்ட் சார்ஜிங் போர்ட்

  • வயர்லெஸ் ஃபோன் சார்ஜர்

  • ஆம்பியன்ட் லைட்ஸ்

  • 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே

  • ஆட்டோமெட்டிக் ஏசி

  • நான்கு பவர் விண்டோஸ்

  • உயரத்தை அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வகையிலான ஓட்டுநர் இருக்கை

  • கூல்டு க்ளோவ் பாக்ஸ்

  • மல்டிமோட் ரீஜெனரேஷன் பிரேக்கிங்

  • டிரைவிங் மோட்கள் (சிட்டி & ஸ்போர்ட்)

  • ஸ்டீயரிங் பொருத்தப்பட்ட கன்ட்ரோல்கள்

  • க்ரூஸ் கன்ட்ரோல்

  • புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப்

  • எலக்ட்ரிக்கலி அட்ஜஸ்ட்டபிள் ஆட்டோ-ஃபோல்டிங் ORVMS

  • டே/நைட் ஐஆர்விஎம்

  • செமி டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே

இன்ஃபோடெயின்மென்ட்

  • 10.25-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

  • வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே

  • Arcade.ev ஆப்ஸ் தொகுப்பு

  • 6-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம்

  • 7-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட்

  • வயர்டு ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே

  • 8-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம்

பாதுகாப்பு

  • 6 ஏர்பேக்ஸ்

  • பிளைண்ட் வியூ மானிட்டர் கொண்ட 360 டிகிரி கேமரா

  • எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் 

  • ஹில் ஹோல்ட் அசிஸ்ட்

  • EBD உடன் ABS

  • டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம்

  • ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள்

  • பின்புற பார்க்கிங் சென்சார்கள்

  • ரெயின் சென்ஸிங் ரியர் வைப்பர் மற்றும் ஆட்டோ டிஃபோகர்

  • முன்பக்க டூயல் ஏர்பேக்ஸ்

  • EBD உடன் ABS

  • டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம்

  • பின்புற பார்க்கிங் கேமரா

  • பின்புற பார்க்கிங் சென்சார்கள்

  • ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள்

  • ரெயின் சென்ஸிங் வைப்பர் 

  • பின்புற வைப்பர் மற்றும் வாஷர்

  • பின்புற டிஃபோகர்

  • டாடா பன்ச் EV ஆனது டிகோர் EV -யை விட அதிக பிரீமியம் கேபின் அனுபவத்தை வழங்குவது மட்டுமல்லாமல் டாடாவின் எலக்ட்ரிக் செடானுடன் ஒப்பிடும்போது கூடுதல் அம்சங்களையும் வழங்குகிறது இவை அனைத்தும் வெறும் ரூ.4000 விலை வித்தியாசத்தில் கிடைக்கும்.

  • பன்ச் EV இன் 10.25-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் டிகோர் EVயின் 7-இன்ச் டச்ஸ்கிரீன் யூனிட்டை விட பெரியது மட்டுமல்ல இது வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே இணைப்பு சப்போர்ட்டையும் வழங்குகிறது.

  • பன்ச் EV -ன் டாப்-ஸ்பெக் எம்பவர்டு பிளஸ் எஸ் வேரியன்ட் Arcade.ev ஆப்ஸ் தொகுப்பையும் கொண்டுள்ளது. இந்த அம்சத்தின் மூலம் நீங்கள் பல OTT நிகழ்ச்சிகளை அணுகுவது மட்டுமல்லாமல் இன்ஃபோடெயின்மென்ட் திரையில் நேரடியாக பல்வேறு கேம்களையும் விளையாடலாம். கார் நிலையாக இருக்கும்போது மட்டுமே இந்த வசதி செயல்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

  • இருப்பினும் டிகோர் EV ஆனது 8-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டமை பெறுகிறது. அதே நேரத்தில் பன்ச் EV ஆனது 6-ஸ்பீக்கர் செட்டப்பை மட்டுமே கொண்டுள்ளது.

  • இரண்டு EV -களும் ஆட்டோமெட்டிக் ஏசியை பெறுகின்றன. ஆனால் பன்ச் EV ஆனது வென்டிலேட்டட் முன் இருக்கைகளையும் கொண்டுள்ளது.

  • இரண்டு EV -களும் பல பிரேக்கிங் ரீஜெனரேஷன் மோட்களுடன் வந்தாலும் பன்ச் EV ஆனது பல்வேறு அளவிலான ரீஜெனரேஷன் இடையே மாறுவதற்கு பேடில் ஷிஃப்டர்களை பெறுகிறது.

  • பாதுகாப்பிற்கு வரும்போது ​​6 ஏர்பேக்குகள் மற்றும் பிளைண்ட் ஸ்பாட் கண்காணிப்புடன் கூடிய 360 டிகிரி கேமராவைப் பெறுவதால் பன்ச் EV மீண்டும் ஒரு சிறந்த தொகுப்பாக உள்ளது. இவை இரண்டும் டிகோர் EV -யின் டாப்-ஸ்பெக் வேரியன்ட்டில் இல்லை.

மேலும் பார்க்க: டாடா நெக்ஸான் சிஎன்ஜி மாருதி பிரெஸ்ஸா சிஎன்ஜியில் இந்த 5 விஷயங்களை வழங்கலாம்

முக்கியமான விவரங்கள்

டாடா பன்ச் EV எம்பவர்டு பிளஸ் S MR (மீடியம் ரேஞ்ச்) மற்றும் டாடா டிகோர் EV XZ பிளஸ் Lux ஆகிய இரண்டும் நிறைய வசதிகளுடன் வந்தாலும் கூட டிகோர் EV -ஐ விட வெறும் ரூ.4000 மட்டுமே கூடுதலாக உள்ளது. இவை அனைத்தும் எஸ்யூவி பாடி ஸ்டைலில் தொகுக்கப்பட்டுள்ளன. இருப்பினும் நீங்கள் இன்னும் ஒரு EV -யில் செடான் பாடி ஸ்டைலை விரும்பினால் நீங்கள் டாடா டிகோர் EV-ஐ தேர்வு செய்யலாம். இது 7-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 8-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், ஆட்டோ ஏசி, டூயல் முன் ஏர்பேக்குகள் மற்றும் பின்புற பார்க்கிங் கேமரா  போன்ற வசதிகளை கொண்டுள்ளது. மேலும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு EV -களின் வேரியன்ட்களும் ஒரே மாதிரியான க்ளைம் ரேஞ்ச் எண்ணிக்கையுடன் ஒரே மாதிரியான பேட்டரி பேக்கை கொண்டுள்ளன என்பதும் முக்கியமான விஷயம்.

மேலும் படிக்க: பன்ச் EV ஆட்டோமெட்டிக்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Tata பன்ச் EV

Read Full News

explore similar கார்கள்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
  • ஜீப் அவென்ஞ்ஜர்
    ஜீப் அவென்ஞ்ஜர்
    Rs.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2025
  • டாடா harrier ev
    டாடா harrier ev
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2025
  • மாருதி இவிஎக்ஸ்
    மாருதி இவிஎக்ஸ்
    Rs.22 - 25 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2025
  • க்யா ev6 2025
    க்யா ev6 2025
    Rs.63 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2025
  • ஹூண்டாய் கிரெட்டா ev
    ஹூண்டாய் கிரெட்டா ev
    Rs.20 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2025
×
We need your சிட்டி to customize your experience