Tata Punch இந்தியாவில் அறிமுகமானதில் இருந்து 4 லட்சம் யூனிட்களின் விற்பனையைத் தாண்டி வெற்றிகரமாக பயணிக்கிறது
published on ஆகஸ்ட் 05, 2024 06:00 pm by shreyash for டாடா பன்ச்
- 136 Views
- ஒரு கருத்தை எழுதுக
டாடா பன்ச் தொடர்ந்து மிகவும் விரும்பப்படும் கார்களில் ஒன்றாக இருந்து வருகிறது. எலெக்ட்ரிக் வேரியன்ட் உட்பட அதன் பல்வேறு பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் இதற்கு காரணமாக இருக்கலாம்.
2021 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட டாடா பன்ச் மைக்ரோ-எஸ்யூவி பிரிவில் முன்னோடியாக இருந்தது மற்றும் வேகமாக பிரபலமடைந்தது. 2024 ஆம் ஆண்டின் சமீபத்திய மாதங்களில் பன்ச் EV உட்பட, நாட்டில் அதிகம் விற்பனையாகும் கார்களில் இதுவும் ஒன்றாகும். இப்போது இந்த மைக்ரோ-எஸ்யூவி இந்தியாவில் 4 லட்சம் யூனிட்கள் என்ற குறிப்பிடத்தக்க விற்பனை மைல்கல்லை எட்டியுள்ளது. பன்ச் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து அதன் விற்பனை பயணத்தை பற்றி அறிந்துகொள்வோம்:
வருடம் |
விற்பனை |
அக்டோபர் 2021 |
அறிமுகம் |
ஆகஸ்ட் 2022 |
1 லட்சம் |
மே 2023 |
2 லட்சம் |
டிசம்பர் 2023 |
3 லட்சம் |
ஜூலை 2024 |
4 லட்சம் |
டாடா பன்ச் அதன் முதல் 1 லட்சம் யூனிட்களின் விற்பனை மைல்கல்லை 10 மாதங்களில் எட்டியது மற்றும் தோராயமாக 9 மாதங்களில் 2 லட்சம் ஒட்டுமொத்த விற்பனையை எட்டியது. இருப்பினும் மே 2023-க்குப் பிறகு விற்பனை அதிகரித்தது, 2023 டிசம்பரில் வெறும் 7 மாதங்களில் பன்ச் மேலும் 1 லட்சம் யூனிட்களைச் சேர்த்து மொத்த எண்ணிக்கையை 3 லட்சம் யூனிட்டுகளாகக் கொண்டு வந்தது. இறுதி 1 லட்சம் விற்பனையும் வெறும் 7 மாதங்களுக்குள் எட்டியது.
டாடா பன்ச் பற்றி கூடுதல் விவரங்கள்
டாடா பன்ச்சின் ICE (இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின்) வேரியன்ட் பெட்ரோல் மற்றும் CNG பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் வருகிறது. அதன் விரிவான விவரங்கள் பின்வருமாறு:
|
|
|
|
|
73.5 PS |
|
|
103 Nm |
|
|
5-ஸ்பீட் MT |
டாடா பன்ச் ஆனது 7-இன்ச் டச்ஸ்கிரீன், வயர்டு ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, 7-இன்ச் செமி-டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, ஆட்டோமேட்டிக் ஏசி, சிங்கிள்-பேன் சன்ரூஃப் மற்றும் கூல்டு க்ளோவ் பாக்ஸ் உள்ளிட்ட அம்சங்களுடன் நிரம்பியுள்ளது. பாதுகாப்பிற்காக, இது டூயல் முன் ஏர்பேக்குகள், EBD உடன் ABS, டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) மற்றும் ரியர் பார்க்கிங் கேமரா போன்றவற்றை கொண்டுள்ளது.
டாடா பன்ச் ஆல்-எலக்ட்ரிக் வெர்ஷன்களிலும் கிடைக்கிறது. இது முன்னதாக 2024 -ல் அறிமுகப்படுத்தப்பட்டது. பேட்டரி பேக் மற்றும் மோட்டார் பற்றிய விவரங்கள் இதோ:
|
மீடியம் ரேஞ்ச் |
லாங் ரேஞ்ச் |
பேட்டரி பேக் |
25 கிலோவாட் |
35 கிலோவாட் |
பவர் |
82 PS |
122 PS |
டார்க் |
114 Nm |
190 Nm |
கிளைம் செய்யப்படும் ரேஞ்ச் (MIDC) |
315 கி.மீ |
421 கி.மீ |
பன்ச் EV ஆனது பன்ச் ICE -லிருந்து தனித்து நிற்கும் பல பிரீமியம் வசதிகளுடன் வருகிறது. வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய பெரிய 10.25 இன்ச் டச்ஸ்கிரீன், 10.25 இன்ச் ஆல் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, வென்டிலேட்டட் முன் சீட்கள் மற்றும் ஏர் ப்யூரிஃயர் ஆகியவை இதில் அடங்கும். பயணிகளின் பாதுகாப்பிற்காக 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் 360 டிகிரி கேமராவுடன் பன்ச் EV வருகிறது.
மேலும் பார்க்க: Tata Punch EV லாங் ரேஞ்ச் : அனைத்து டிரைவ் மோட்களிலும் அதன் முழு செயல்திறனும் சோதிக்கப்பட்டது
விலை & போட்டியாளர்கள்
டாடா பன்ச் ICE |
டாடா பன்ச் EV |
ரூ. 6.13 லட்சம் முதல் ரூ. 10.20 லட்சம் வரை |
ரூ. 10.99 லட்சம் முதல் ரூ. 15.49 லட்சம் வரை |
விலை அனைத்தும் டெல்லி எக்ஸ்-ஷோரூம்-க்கானவை
பன்ச் ICE ஹூண்டாய் எக்ஸ்டருடன் போட்டியிடுகிறது மற்றும் மாருதி ஃபிரான்க்ஸ் மற்றும் டொயோட்டா டெய்சர் சப்-4m க்ராஸ் ஓவர்களுக்கு மாற்றாக செயல்படுகிறது. இதற்கிடையில், பன்ச் EV ஆனது சிட்ரோன் eC3-க்கு எதிராக எதிர்கொள்கிறது மற்றும் டாடா டியாகோ EV மற்றும் MG காமெட் EV ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது பிரீமியம் ஆப்ஷனாக தன்னை நிலைநிறுத்துகிறது.
புதிய கார்கள் தொடர்பான அப்டேட்களுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க: பன்ச் AMT
0 out of 0 found this helpful