• English
    • Login / Register

    Tata Punch EV லாங் ரேஞ்ச் : அனைத்து டிரைவ் மோட்களிலும் அதன் முழு செயல்திறனும் சோதிக்கப்பட்டது

    டாடா பன்ச் EV க்காக ஆகஸ்ட் 02, 2024 05:14 pm அன்று samarth ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 24 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    பன்ச் EV லாங் ரேஞ்ச் வேரியன்ட் மூன்று தனித்துவமான டிரைவ் மோட்களைக் கொண்டுள்ளது: ஈகோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட். எங்களின் ஆக்சிலரேஷன் டெஸ்ட்களின் போது ஈகோ மற்றும் சிட்டி மோட்களுக்கு இடையே சிறு வேறுபாடுகளை மட்டுமே நாங்கள் கவனித்தோம்.

    Tata Punch EV

    டாடா பன்ச் EV ஆனது 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகமானது, இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களை வழங்குகிறது: 25 கிலோவாட் (மீடியம் ரேஞ்ச்) மற்றும் 35 கிலோவாட் (லாங் ரேஞ்ச்). லாங் ரேஞ்ச் வேரியண்ட் மூன்று டிரைவ் மோடுகளைக் கொண்டுள்ளது: ஈகோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட். இந்த வெவ்வேறு மோட்களில் அதன் செயல்திறனை மதிப்பிடுவதற்காக, பன்ச் EV லாங் ரேஞ்சை அதன் வேகத்தின் மூலம் சமீபத்தில் சோதித்தோம். இதன் மூலம் நாங்கள் அறிந்துகொண்ட விவரங்கள் இதோ.

    பவர்டிரெய்ன்

    லாங் ரேஞ்ச் வேரியன்ட்டை நாங்கள் ஆய்வு செய்தபோது, ​​பவர்டிரெய்ன் விவரக்குறிப்புகளை ஆராய்வோம்:

     

    டாடா பன்ச் EV வேரியன்ட்கள்

     

    லாங் ரேஞ்ச்

     

    பேட்டரி பேக்

     

    35 கிலோவாட்

     

    எலக்ட்ரிக் மோட்டார் எண்ணிக்கை

     

    1

     

    பவர்

     

    122 PS

     

    டார்க்

     

    190 Nm

     

    கிளைம் செய்யப்படும் ரேஞ்ச் (MIDC)

     

    421 கி.மீ

    இந்த வேரியன்ட் வெறும் 9.5 வினாடிகளில் மணிக்கு 0 முதல் 100 கி.மீ வேகத்தை எட்டும் என்றும் மற்றும் மணிக்கு 140 கி.மீ வேகத்தில் (வரையறுக்கப்பட்டது) செல்லும் திறன் கொண்டது என டாடா தெரிவிக்கிறது.

    ஆக்சிலரேஷன் டெஸ்ட்

    Tata Punch EV Rear

     

    டெஸ்ட்

     

    டாடா பன்ச் EV LR

     

    0-100 கி.மீ/மணி

     

    9.05 வினாடிகள் (ஸ்போர்ட் மோடில்)

     

    க்வார்ட்டர் மைல் டெஸ்ட்

     

    16.74 வினாடிகளில் 132.24 கி.மீ/மணி

     

    கிக் டவுன் (20-80 கி.மீ/மணி)

     

    4.94 வினாடிகள்

    பெரிய பேட்டரி பேக் கொண்ட பன்ச் EV ஆனது வெறும் 9.05 வினாடிகளில் மணிக்கு 0 முதல் 100 கி.மீ வேகத்தை அடைந்தது. ஆகவே கிளைம் செய்யப்பட்ட நேரத்தை விட சிறப்பாக செயல்பட்டது. க்வார்ட்டர் மைல் டெஸ்டில் சிறிது நேரம் எடுத்துக்கொண்டாலும் கிக் டவுன் செயல்திறன் 20 முதல் 80 கி.மீ/மணி வரை 5 வினாடிகளுக்குள் எட்டப்பட்டது.

    இப்போது, ​​பன்ச் EV அதன் வெவ்வேறு டிரைவ் மோட்களில் 0 முதல் 100 கி.மீ/மணி வரை வேகமெடுக்கும் போது எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆராய்வோம்.

     

    டிரைவ் மோட்

     

    எடுத்துக் கொண்ட நேரம் (0-100 கி.மீ/மணி)

     

    ஸ்போர்ட்

     

    9.05 வினாடிகள்

     

    சிட்டி

     

    13.10 வினாடிகள்

     

    ஈகோ

     

    13.31 வினாடிகள்

    ஸ்போர்ட் மோடுக்கு எதிராக சிட்டி மற்றும் ஈகோ மோடுகளில் EV ஆனது மணிக்கு 0 முதல் 100 கி.மீ வேகத்தில் செல்ல எடுக்கும் நேரத்தை ஒப்பிடும்போது, ​​சிட்டி மோட் 4.05 வினாடிகள் மெதுவாகவும், ஈகோ மோட் 4.26 வினாடிகள் மெதுவாகவும் இருக்கும். சிட்டி மற்றும் ஈகோ மோடுகளுக்கு இடையே உள்ள வேறுபாடு ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தாலும், குய்க்கெஸ்ட் மோடுக்கும் மற்றவற்றுக்கும் இடையே குறிப்பிடத்தக்க செயல்திறன் இடைவெளியை இது எடுத்துக்காட்டுகிறது.

    பொறுப்புத் துறப்பு: டிரைவர், சாலை நிலைமைகள், காரின் மற்றும் பேட்டரியின் ஆரோக்கியத்தைப் பொறுத்து EV-இன் செயல்திறன் மாறுபடலாம்.

    மேலும் பார்க்க: Tata Nexon EV லாங் ரேஞ்ச் மற்றும் Tata Punch EV லாங் ரேஞ்ச்: ரியர் வேர்ல்டு செயல்திறன் சோதனை

    பிரேக்கிங் டெஸ்ட்

    Tata Punch EV Front

     

    டெஸ்ட்கள்

     

    எடுத்துக்கொண்ட தூரம்

     

    100-0 கி.மீ/மணி

     

    44.66 மீ (ஈரமான)

     

    80-0 கி.மீ/மணி

     

    27.52 மீ (ஈரமான)

    பன்ச் EV-யின் லாங் ரேஞ்ச் வெர்ஷன் ஆல்-வீல் டிஸ்க் பிரேக்குகளுடன் பொருத்தப்பட்டுள்ளது மற்றும் 16-இன்ச் அலாய் வீல்களுடன் வருகிறது. ஈரமான சாலைகளில் எங்கள் பிரேக் டெஸ்ட்களில், மணிக்கு 100 கி.மீ வேகத்தில் நிறுத்த 44.66 மீட்டரும், மணிக்கு 80 கி.மீ வேகத்தில் நிறுத்த 27.52 மீட்டரும் ஆனது. 

    குறிப்பு: பன்ச் EV-க்கான பிரேக்கிங் டெஸ்டில் ஈரமான சாலைகளில் டெஸ்ட் செய்யப்பட்டது, இதன் காரணமாக பிரேக்கிங் செயல்திறன் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

    விலை மற்றும் போட்டியாளர்கள்

    டாடா பன்ச் EV-யின் விலை ரூ.10.98 லட்சம் முதல் ரூ.15.48 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா). அதன் முதன்மை போட்டியாளர் சிட்ரோன் eC3 ஆகும், அதே சமயம் இது MG காமெட் EV, டாடா டியாகோ EV மற்றும் டாடா டைகோர் EV ஆகியவற்றுக்கு பிரீமியம் மாற்றாக இருக்கிறது.

    லேட்டஸ்ட் ஆட்டோமோட்டிவ் அப்டேட்டுகளுக்கு கார்தேகோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்

    மேலும் படிக்க: டாடா பன்ச் EV ஆட்டோமேட்டிக்

    was this article helpful ?

    Write your Comment on Tata பன்ச் EV

    explore மேலும் on டாடா பன்ச் இவி

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எலக்ட்ரிக் கார்கள்

    • பிரபலமானவை
    • உபகமிங்
    ×
    We need your சிட்டி to customize your experience