Tata Nexon EV லாங் ரேஞ்ச் மற்றும் Tata Punch EV லாங் ரேஞ்ச்: ரியர் வேர்ல்டு செயல்திறன் சோதனை
published on ஜூலை 30, 2024 08:39 pm by shreyash for டாடா நெக்ஸன் இவி
- 30 Views
- ஒரு கருத்தை எழுதுக
டாடா நெக்ஸான் EV LR (லாங் ரேஞ்ச்) 40.5 kWh பேட்டரி பேக்குடன் வருகிறது. அதே நேரத்தில் பன்ச் EV LR ஆனது 35 kWh பேட்டரி பேக்கை கொண்டுள்ளது.
நீங்கள் ஒரு எலக்ட்ரிக் SUV -யில் ஆர்வம் கொண்டவராக இருந்தால் குறிப்பாக டாடாவிடமிருந்து, இரண்டு பிரபலமான ஆப்ஷன்கள் உங்களுக்காக உள்ளன: டாடா நெக்ஸான் EV மற்றும் டாடா பன்ச் EV. இந்த இரண்டு எலக்ட்ரிக் கார்களின் லாங் ரேஞ்ச் வேரியன்ட்களும் 400 கி.மீ -க்கும் அதிகமான ரேஞ்சை வழங்குகின்றன. மேலும் நெக்ஸான் EV ஆனது பன்ச் EV -யின் பெரிய பேட்டரி பேக் காரணமாக அதிக ரேஞ்சை வழங்குகிறது. நிஜ உலக செயல்திறனின் அடிப்படையில் இந்த இரண்டு கார்களும் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை இங்கே பார்ப்போம்.
முதலில் அவற்றின் விவரங்களைப் பார்ப்போம்:
டாடா நெக்ஸான் EV LR |
டாடா பன்ச் EV LR |
|
பேட்டரி பேக் |
40.5 kWh |
35 kWh |
கிளைம்டு ரேஞ்ச் (MIDC) |
465 கி.மீ |
421 கி.மீ |
பவர் |
143 PS |
122 PS |
டார்க் |
215 Nm |
190 Nm |
இங்குள்ள நெக்ஸான் EV LR ஆனது பன்ச் EV-ஐ விட 21 PS அதிக பவரையும் 25 Nm அதிக டார்க்கையும் கொண்டுள்ளது.
ஆக்சிலரேஷன் சோதனை
சோதனைகள் |
டாடா நெக்ஸான் EV LR |
டாடா பன்ச் EV LR |
மணிக்கு 0-100 கி.மீ |
8.75 வினாடிகள் |
9.05 வினாடிகள் |
கிக் டவுன் (20-80 கி.மீ/மணி) |
5.09 வினாடிகள் |
4.94 வினாடிகள் |
கால் மைல் |
138.11 கி.மீ வேகத்தில் 16.58 வினாடிகள் |
132.24 கி.மீ வேகத்தில் 16.74 வினாடிகள் |
0-100 கி.மீ/மணி வேகத்தில் டாடா நெக்ஸான் LR ஆனது டாடா பன்ச் EV LR -யை விட வேகமாக இருந்தது. ஆனால் வித்தியாசம் வெறும் 0.3 வினாடிகள் மட்டுமே. உண்மையில் மணிக்கு 20 கி.மீ முதல் 80 கி.மீ வேகம் வரையிலான வேகத்தில், டாடா பன்ச் EV ஆனது, நெக்ஸான் EV-யை விட 0.13 வினாடிகள் முன்னிலையில் இருந்தது. டாடாவின் எலெக்ட்ரிக் மைக்ரோ எஸ்யூவி -யும் கால் மைல் போட்டியில் நெக்ஸான் இவி -க்கு எதிராக நெருக்கமாக இருந்தது, இருப்பினும் நெக்ஸான் சற்று அதிக வேகத்தில் முந்தியது.
பிரேக்கிங் சோதனை
சோதனைகள் |
டாடா நெக்ஸான் EV LR |
டாடா பன்ச் EV LR (ஈரமான) |
மணிக்கு 100-0 கி.மீ |
40.87 மீட்டர் |
44.66 மீட்டர் |
மணிக்கு 80-0 கி.மீ |
25.56 மீட்டர் |
27.52 மீட்டர் |
மணிக்கு 100 கி.மீ வேகத்தில் பிரேக்கை அப்ளை செய்யும் போது டாடா நெக்ஸான் EV ஆனது டாடா பன்ச் EV-ஐ விட கிட்டத்தட்ட 4 மீட்டர் குறைவான தூரத்தை கடந்தது. 80 கி.மீ முதல் 0 கி.மீ வரை பிரேக் செய்யும் போது இந்த வேறுபாடு 2 மீட்டராக குறைந்தது; இருப்பினும் நெக்ஸான் EV இன்னும் விரைவாக முழுமையாக நிறுத்தப்பட்டது. நெக்ஸான் EV LR ஆனது 16-இன்ச் அலாய் வீல்களுடன் 215/60 டயர்களை கொண்டுள்ளது, அதே சமயம் பன்ச் EV ஆனது 190-பிரிவு டயர்கள் மற்றும் அதே 16-இன்ச் அலாய் வீல்களை கொண்டுள்ளது.
மேலும் பார்க்க: Tata Nexon EV -யிடம் இருந்து இந்த 10 விஷயங்களை Tata Curvv பெறக்கூடும்
முக்கிய விவரங்கள்
டாடா பன்ச் EV LR ஆனது நெக்ஸான் EV-ஐ விட குறைவான சக்தி வாய்ந்த மின்சார மோட்டாருடன் வந்தாலும், முடுக்கம் சோதனைகளில் நெக்ஸான் EV-க்கு இன்னும் நெருக்கமான சண்டையை கொடுக்கிறது. பிரேக்கிங்கை பொறுத்தவரை, பன்ச் EV ஈரமான சாலை நிலைகளில் சோதிக்கப்பட்டது, இது பன்ச் EV இன் பிரேக்கிங் செயல்திறனைப் பாதித்திருக்கலாம்.
பொறுப்பு துறப்பு: ஓட்டுநர், சாலை நிலைமைகள், வாகனங்களின் நிலைமை மற்றும் வானிலை ஆகியவற்றை பொறுத்து நிஜ உலக செயல்திறனில் மாற்றம் இருக்கலாம்.
விலை
டாடா நெக்ஸான் EV LR |
டாடா பன்ச் EV LR |
ரூ.16.99 லட்சம் முதல் ரூ.19.49 லட்சம் |
ரூ.12.99 லட்சம் முதல் ரூ.15.49 லட்சம் |
விலை விவரங்கள் அனைத்தும் டெல்லி எக்ஸ்-ஷோரூம்-க்கானவை ஆகும்
டாடா நெக்ஸான் EV -யின் லாங் ரேஞ்ச் வேரியன்ட் 16.99 லட்சத்தில் தொடங்குகிறது. இது பன்ச் EV -யின் டாப்-ஸ்பெக் எம்பவர்டு லாங் ரேஞ்ச் வேரியன்ட்டை விட ரூ.1.5 லட்சம் அதிகம்.
நெக்ஸான் EV ஆனது மஹிந்திரா XUV400 EV -க்கு போட்டியாக கருதப்படலாம். பன்ச் EV ஆனது சிட்ரோன் eC3 உடன் போட்டியிடும்.
லேட்டஸ்ட் கார் அப்டேட்களுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்து கொள்ளவும்
மேலும் படிக்க: நெக்ஸான் EV ஆட்டோமெட்டிக்