Tata Nexon EV -யிடம் இருந்து இந்த 10 விஷயங்களை Tata Curvv பெறக்கூடும்
published on ஜூலை 18, 2024 03:00 pm by samarth for டாடா கர்வ் இவி
- 44 Views
- ஒரு கருத்தை எழுதுக
நெக்ஸான் EV -யிடம் இருந்து கர்வ்வ் EV -யில் பெறக்கூடிய சில வசதிகளில் லெவல் 2 ADAS, ஒரு பனோரமிக் சன்ரூஃப் மற்றும் டூயல்-சோன் ஏசி ஆகியவை இருக்கும்.
டாடா கர்வ்வ் இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின் (ICE) மற்றும் எலக்ட்ரிக் கார் (EV) ஆகிய இரண்டு பதிப்புகளிலும் ஜூலை 19 அன்று வெளியிடப்பட உள்ளது. இது நெக்ஸான் இவி -க்கு மேலே விற்பனைக்கு கொண்டு வரப்படும். ஆகவே கர்வ்வ் ஆனது அதன் சப்-4m எலக்ட்ரிக் எஸ்யூவி உடன்பிறப்பிடம் இருந்து சில வசதிகளை கடன் வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் சில கூடுதல் வசதிகள் பிற்காலத்தில் சேர்க்கப்படலாம். நெக்ஸான் EV -யிலிருந்து கர்வ்வ் கடன் வாங்கக்கூடிய 5 முக்கிய விஷயங்கள் மற்றும் 5 புதிய வசதிகள் ஆகியவை பற்றிய விவரங்கள் இங்கே உள்ளன.
360 டிகிரி கேமரா
இது ஒரு கூடுதல் பாதுகாப்பு வசதியாகும். இது டிரைவருக்கு கார் மற்றும் அதன் சுற்றுப்புறத்தின் பார்வையையும் வழங்குகிறது. பிளைண்ட் ஸ்பாட்களை தெரிந்து கொள்ள உதவுகிறது. குறிப்பாக குறுகலான இடங்களில் பார்க் செய்யும் போது அல்லது அதிக போக்குவரத்து நெரிசலில் பயணிக்கும் போது. இது ஏற்கனவே நெக்ஸான் EV -யில் கிடைக்கிறது. கர்வ்வ் இவி -யில் இந்த வசதி சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வென்டிலேட்டட் இருக்கைகள்
இந்தியாவைப் போன்ற வெப்பமண்டல காலநிலையில் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் வென்டிலேட்டட் இருக்கைகள் சமீபத்திய ஆண்டுகளில் நிறைய கார்களில் மிகவும் பொதுவானதாகிவிட்டன. நெக்ஸான் EV ஆனது அதன் ஹையர்-ஸ்பெக் வேரியன்ட்களில் முன்பக்க வென்டிலேட்டட் இருக்கைகளுடன் வருகிறது. மேலும் கர்வ்வ் EV-க்கும் இந்த வசதி வசதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆல் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்பிளே
நெக்ஸான் EV ஆனது 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது, இதை கர்வ்வ் EV -யும் ஏற்றுக்கொள்ளலாம். பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவின் போது இந்த வசதியை ஏற்கனவே பார்க்க முடிந்தது. இந்த டிஜிட்டல் க்ளஸ்டர் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் உடன் சேர்ந்து பயன்படுத்த முடியும். ஆண்ட்ராய்டு ஆட்டோ அல்லது ஆப்பிள் கார்ப்ளேயை பயன்படுத்தி க்ளஸ்டரில் நேரடியாக மேப்பை பார்த்தபடி டிரைவ் செய்ய உதவுகிறது.
12.3-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்
2023 ஆம் ஆண்டில் டாடா ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட நெக்ஸான் EV-யை அறிமுகப்படுத்தியபோது மேம்படுத்தப்பட்ட முக்கிய வசதிகளில் ஒன்று. பெரிய 12.3-இன்ச் டச் ஸ்கிரீன் யூனிட் ஆகும். முன்பு வழங்கப்பட்ட 7-இன்ச் யூனிட்டுடன் ஒப்பிடும்போது இது தெளிவான மற்றும் வேகமான UI உடன் வந்தது. அதே டிஸ்பிளே இப்போது கர்வ்வ் EV யிலும் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை Arcade.ev மோடு உடன் வழங்குகிறது. இது பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார், யூடியூப் மற்றும் கேம்கள் போன்ற பொழுதுபோக்கு ஆப்களை டவுன்லோடு செய்ய உதவும் ஆப் ஸ்டோர் ஆகும்.
முன் பார்க்கிங் சென்சார்கள்
இறுக்கமான பார்க்கிங் இடங்கள் மற்றும் நகர போக்குவரத்துக்கு உதவும் மற்றொரு பாதுகாப்பு வசதி முன் பார்க்கிங் சென்சார்கள் ஆகும்.
லெவல் 2 ADAS
அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்ஸ் (ADAS) என்பது நெக்ஸான் EV -யில் இல்லாத கர்வ்வ் எஸ்யூவி-கூபே -வின் எலக்ட்ரிக் எடிஷனில் கிடைக்கலாம் என எதிர்பார்க்கக்கூடிய வசதிகளில் ஒன்றாகும். லேன் கீப் அசிஸ்ட், அட்டானமஸ் பிரேக்கிங் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற வசதிகளை எதிர்பார்க்கலாம்.
டூயல் ஜோன் ஏசி
இது ஒரு கூடுதல் கம்ஃபோர்ட் மற்றும் வசதியை கொடுக்கக்கூடியது. இது முன் இரண்டு பயணிகளுக்கான கேபின் டெம்பரேச்சரை தனித்தனியாக அட்ஜஸ்ட் செய்து கொள்ள அனுமதிக்கிறது. இது தற்போது டாடாவின் பெரிய எஸ்யூவி -களில் கிடைக்கிறது, அதாவது ஹாரியர் மற்றும் சஃபாரி கர்வ்வ் EV இந்த பிரீமியம் வசதியுடன் இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
பனோரமிக் சன்ரூஃப்
சமீபத்திய ஆண்டுகளில் மிகவும் பிரபலமான வசதிகளில் ஒன்று சன்ரூஃப் மற்றும் பெரிய பனோரமிக் யூனிட் ஆகும். கர்வ்வ் இன் கூரையின் சமீபத்திய ஸ்பை ஷாட் சிறிய நெக்ஸான் EV -யில் இல்லாத பனோரமிக் சன்ரூஃப் இருப்பதை உறுதிப்படுத்தியது.
பவர்டு ஓட்டுனர் இருக்கை
டாடா கர்வ்வ் நிச்சயமாக வசதி மற்றும் வசதியின் அடிப்படையில் பல வசதிகளை பெருமைப்படுத்தும் வகையில் இருக்கும். இதில் எலக்ட்ரிக்கலி அட்ஜஸ்ட்டபிள் டிரைவர் சீட் வழங்கப்படுகிறது. இது ஓட்டுநருக்கு மிகவும் வசதியான இருக்கை நிலையை எளிதாகக் கண்டறிய உதவும்.
ஃப்ளஷ் டைப் டோர் ஹேண்டில்கள்
நாம் ஏற்கனவே பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் டாடா கர்வ்வை ஒரு கான்செப்ட் ஆக பார்த்திருந்தோம், அங்கு டாடா பிரீமியமாக தோற்றமளிக்கும் ஃப்ளஷ் வேரியன்ட் டோர் ஹேண்டில்களுக்கு ஆதரவாக வழக்கமான டோர் ஹேண்டில்களை அகற்றப் போகிறது என்று தெரிய வந்தது. இந்த வசதி மற்றும் ஸ்டைலான வசதி டாடா காரில் வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இந்த விஷயங்கள் கிடைக்கும் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும் நெக்ஸான் EV -க்கு மேல் கர்வ்வ் இந்த பிரீமியம் வசதிகளை வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம். கர்வ்வ் EV -யில் எந்த வசதியை பார்க்க நீங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளீர்கள்? கமென்ட் பகுதியில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
லேட்டஸ்ட் கார் அப்டேட்களுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்து கொள்ளவும்
மேலும் படிக்க: நெக்ஸான் AMT