• English
  • Login / Register

2 ஆண்டுகளை நிறைவு செய்த டாடா பன்ச்: இதுவரை கடந்து வந்த பயணத்தை பாருங்கள்

published on அக்டோபர் 19, 2023 06:38 pm by ansh for டாடா பன்ச்

  • 108 Views
  • ஒரு கருத்தை எழுதுக

டாடா பன்ச் காரின் விலை அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து ரூ.50,000 வரை உயர்ந்துள்ளது.

Tata Punch: 2 Year Recap

2021 அக்டோபர் 18 ஆம் தேதி  அன்று, டாடா பன்ச் நாட்டின் முதல் மைக்ரோ எஸ்யூவி -யாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது, இது ஹேட்ச்பேக் விகிதங்களில் எஸ்யூவி வடிவக் காரணியின் ஈர்ப்பை  மிகவும் அணுகக்கூடியதாக மாற்றியது. குளோபல் NCAP -யின் பழைய கிராஷ் சோதனைகளில் 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைக் கொண்டு பன்ச் காரானது ஆரம்பத்திலேயே வலுவான ஈர்ப்பை ஏற்படுத்தியது, சிறிய காருக்கு இந்த மதிப்பீடு கிடைத்தது இதுவே முதல் முறையாகும். அதன் இரண்டாவது பிறந்தநாளைக் கொண்டாடும் டாடா  பன்ச் கார் தொடர்பாக கடந்த ஆண்டில் நடந்த  அனைத்தையும் நினைவு கூர்வோம்.

விலை ஏற்றங்கள்

Tata Punch

அறிமுகத்தின் போது, பன்ச் ரூ.5.49 லட்சம் முதல் ரூ.9.39 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் இருந்தது. அதன் பின்னர் , இந்த மைக்ரோ எஸ்யூவி 4 தடவைகள் விலை உயர்வை சந்தித்தது, அதிகபட்சம் ரூ.50,000 வரை இருந்தது.


1.2-லிட்டர் பெட்ரோல் மேனுவல்

வேரியன்ட்கள்
   

அறிமுக  விலை
 

தற்போதைய விலை

 
ப்யூர்

 
ரூ. 5.49 லட்சம்

 
ரூ. 6 லட்சம்

 
ப்யூர் + ரிதம் பேக்

 
ரூ. 5.85 லட்சம்

 
ரூ. 6.35 லட்சம்

 
அட்வென்ச்சர்

 
ரூ. 6.39 லட்சம்

 
ரூ. 6.90 லட்சம்

 
அட்வென்ச்சர் கேமோ

 

 
ரூ. 7 லட்சம்

 
அட்வென்ச்சர் + ரிதம் பேக்

 
ரூ. 6.74 லட்சம்

 
ரூ. 7.25 லட்சம்

 
அட்வென்ச்சர் கேமோ + ரிதம் பேக்

 

 
ரூ. 7.35 லட்சம்

 
அக்கம்ப்ளிஸ்டு

 
ரூ. 7.29 லட்சம்

 
ரூ. 7.75 லட்சம்

 
அக்கம்ப்ளிஸ்டு கேமோ

 

 
ரூ. 7.80 லட்சம்

 
அக்கம்ப்ளிஸ்டு + டேசில் பேக்

 
ரூ. 7.74 லட்சம்

 
ரூ. 8.15 லட்சம்

 
அக்கம்ப்ளிஸ்டு கேமோ + டேசில் பேக்

 

 
ரூ. 8.18 லட்சம்

 
அக்கம்ப்ளிஸ்டு சன்ரூஃப்

 

 
ரூ. 8.25 லட்சம்

 
அக்கம்ப்ளிஸ்டு சன்ரூஃப் + டேசில் பேக்

 

 
ரூ. 8.65 லட்சம்

 
கிரியேட்டிவ் DT

 
ரூ. 8.49 லட்சம்

 
ரூ. 8.75 லட்சம்

 
கிரியேட்டிவ் DT சன்ரூஃப்

 

 
ரூ. 9.20 லட்சம்

 
கிரியேட்டிவ் DT + I-RA பேக்

 
ரூ. 8.79 லட்சம்

 

 
கிரியேட்டிவ் DT ஃபிளாக்ஷிப்

 

 
ரூ. 9.50 லட்சம்

 
1.2-லிட்டர் பெட்ரோல் AMT

 
அட்வென்ச்சர்

 
ரூ. 6.99 லட்சம்

 
ரூ. 7.50 லட்சம்

 
அட்வென்ச்சர் கேமோ

 

 
ரூ. 7.60 லட்சம்

 
அட்வென்ச்சர் + ரிதம் பேக்

 
ரூ. 7.34 லட்சம்

 
ரூ. 7.85 லட்சம்

 
அட்வென்ச்சர் கேமோ + ரிதம் பேக்

 

 
ரூ. 7.95 லட்சம்

 
அக்கம்ப்ளிஸ்டு

 
ரூ. 7.89 லட்சம்

 
ரூ. 8.35 லட்சம்

 
அக்கம்ப்ளிஸ்டு கேமோ

 

 
ரூ. 8.40 லட்சம்

 
அக்கம்ப்ளிஸ்டு + டேசில் பேக்

 
ரூ. 8.34 லட்சம்

 
ரூ. 8.75 லட்சம்

 
அக்கம்ப்ளிஸ்டு கேமோ + டேசில் பேக்

 

 
ரூ. 8.78 லட்சம்

 
அக்கம்ப்ளிஸ்டு சன்ரூஃப்

 

 
ரூ. 8.85 லட்சம்

 
அக்கம்ப்ளிஸ்டு சன்ரூஃப் + டேசில் பேக்

 

 
ரூ. 9.25 லட்சம்

 
கிரியேட்டிவ் DT

 
ரூ. 9.09 லட்சம்

 
ரூ. 9.35 லட்சம்

 
கிரியேட்டிவ் DT சன்ரூஃப்

 

 
ரூ. 9.80 லட்சம்

 
கிரியேட்டிவ் DT + I-RA பேக்

 
ரூ. 9.39 லட்சம்

 

 
கிரியேட்டிவ் ஃபிளாக்ஷிப் DT

 

 
ரூ. 10.10 லட்சம்

டாடா சில புதிய வேரியன்ட்களையும் பன்ச் -காரில் சேர்த்தது, விலை உயர்வுக்கு அதுவும் பங்களித்தது .

பவர்டிரெயின் அப்கிரேட்கள் - இப்போது CNG -யுடன்!

Tata Punch Engine

தொடக்கத்தில், டாடா பன்ச் கார் 86PS மற்றும் 115Nm அவுட்புட்டை கொடுக்கும் 1.2 லிட்டர்  நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் உடன் மட்டுமே கிடைத்தது. இந்த இன்ஜின், 5 வேக மேனுவல் டிரான்ஸ்மிஷன்உடனோ அல்லது 5 வேக AMT உடனோ இணைக்கப்பட்டிருக்கும்.

மேலும் படிக்க: காணுங்கள்: டாடா ஹாரியர் மற்றும் டாடா சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் மாடல்களில் காணப்படும் அனைத்து மாற்றங்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்

இது இன்னும் அதே இன்ஜினை பெறுகிறது, ஆனால் இப்போது 88PS மற்றும் 115Nm என மதிப்பிடப்பட்டது, BS6.2 மாசு உமிழ்வு விதிகள் அமல்படுத்தப்பட்டதிலிருந்து செயல்திறனில் ஏற்றம் ஏற்பட்டுள்ளது. கோரப்படும் எரிபொருள் செயல்திறனும் சற்று மேம்பட்டுள்ளது.

Tata Punch CNG

2023 பிப்ரவரி ஆட்டோ எக்ஸ்போவில் அதன் ப்ரீ-புரொடக்ஷன் கண்காட்சியைத் தொடர்ந்து, டாடா பன்ச் இப்போது CNG பதிப்பிலும் கிடைக்கிறது. இது ஆகஸ்ட் மாதத்தில் ரூ .7.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் வந்தது, இது சந்தையில் உள்ள பெரும்பாலான CNG  வேரியன்ட்களை போலல்லாமல்  இரட்டை சிலிண்டர் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது, அதனால் அது பயன்படுத்தக்கூடிய அளவு பூட் இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள அனுமதித்தது.

மேலும் படிக்க: டாடா ஹாரியர் மற்றும் டாடா சஃபாரி கார்கள், விற்பனையில் உள்ள இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மிகவும் பாதுகாப்பான கார்களாக மாறியுள்ளன

இந்த CNG பவர்டிரெயின் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் வருகிறது, 73.5PS மற்றும் 103Nm குறைந்த அவுட்புட்டை கொண்டுள்ளது, மேலும் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே  இணைக்கப்பட்டுள்ளது. 26.99km/kgக்கு  மைலேஜ் கிடைக்கும் என டாடா கூறுகிறது. பன்ச் CNG கார்- ப்யூர், அட்வென்ச்சர் மற்றும் அக்கம்ப்ளிஸ்டு என 3 வேரியன்ட்களில் கிடைக்கிறது, இதன் விலை ரூ.7.10 லட்சம் முதல் ரூ.9.68 லட்சம் வரை (எக்ஸ்ஷோரூம்) வரை இருக்கும்.

அம்சங்கள்

Tata Punch Sunroof

அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ஆண்டில் பன்ச் சில அம்ச மேம்படுத்தல்களைப் பெற்றது, மேலும் இது கடந்த 12 மாதங்களில் மேலும் சிலவற்றைப் பெற்றுள்ளது. மிகவும் பிரபலமான கூடுதல் அம்சமாக  குரலால் இயக்கப்பட்ட சன்ரூஃப் உள்ளது, அதே நேரத்தில் டைப்-C சார்ஜிங் போர்ட் மற்றும் முன்பக்க ஆர்ம்ரெஸ்ட் ஆகியவை இப்போது கிடைக்கின்றன.

Tata Punch Cabin

டாடா பன்ச் காரில், 7 இன்ச் டச் ஸ்க்ரீன் உடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 7 இன்ச் செமி டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல், டூயல் ஃப்ரண்ட் ஏர்பேக்குகள், EBD உடன் கூடிய ABS , ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ISOFIX  சைல்டு சீட் ஆங்கர்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒரு புதிய போட்டியாளரை சந்தித்த பன்ச் 

Tata Punch vs Hyundai Exter

அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து இந்த வருடம் ஜூலை மாதம்  வரை டாடா பன்ச் காருக்கு நேரடி போட்டி இல்லை. ஆனால், மைக்ரோ எஸ்யூவி தளத்தில் இரண்டாவது மாடலாக எக்ஸ்டரை ஹூண்டாய்  அறிமுகம் செய்தது. இரண்டு எஸ்யூவிகளும் ஒரே மாதிரியான விலை, அளவுகள் மற்றும் பெட்டி போன்ற வடிவமைப்பை கொண்டுள்ளன, ஆனால் பல விதங்களில் அவை வேறுபட்டவை. ஹூண்டாய் எக்ஸ்டர், ஒரு புதிய மாடலாக இருப்பதால், அது மிகவும் நவீன தோற்றத்தைக் கொண்டுள்ளது, மேலும் அதிக பிரீமியம் அம்சங்களை வழங்குகிறது. ஆனால் குறிப்பிடத்தக்க வகையில், பன்ச் இன்னும் 5 நட்சத்திர குளோபல் NCAP பாதுகாப்பு மதிப்பீட்டைக் கொண்டுள்ளது.

விற்பனையில் ஒரு மைல்கல்!

Tata Punch 2 Lakh Milestone

டாடா பன்ச், தனது முதல் வருட விற்பனையில் 1 லட்சம் யூனிட்கள் என்ற மைல்கல்லை நிறைவு செய்த பின்னர், அதன் 2 ஆண்டுகள் நிறைவடைவதற்குள், 2 லட்சம் யூனிட்டுகளின் உற்பத்தி மைல்கல்லை எட்டியது. அதன் எஸ்யூவி கவர்ச்சி மற்றும் குறைவான விலை காரணமாக பன்ச் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக மாறியது.

இப்போதும் கூட, 6 மாத சராசரி விற்பனையான 12,000 யூனிட்டுகள் உடன் பன்ச் ஒவ்வொரு மாதமும் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியலில் தனது இடத்தைக் பிடிக்கிறது.

காருக்கு ஏதாவது அப்டேட்கள் கிடைக்குமா?

Tata Tigor EV battery pack

டாடா, தற்போது  டிகோர் EV மற்றும் நெக்ஸான் EV -க்கு இடையில் இருக்கும் பன்ச் EV -யை உருவாக்கும் பணியில்  ஈடுபட்டுள்ளது. பன்ச் -காரின் எலக்ட்ரிக் வெர்ஷன் பல முறை சாலையில் படம் பிடிக்கப்பட்டுள்ளது பார்க்கப்பட்டுள்ளது, மேலும் 350 கி.மீ வரை பயணம் செல்லக்கூடிய இரண்டு பேட்டரி பேக்குகளை வழங்கும். டியாகோ அல்லது டைகோர் காரின் எலெக்ட்ரிக் எடிஷனில் காணப்படுவதைப் போன்ற EV -க்கான குறிப்பிட்ட வடிவமைப்பு மாற்றங்களுடன் இது வரும். பன்ச் EV 2024 ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன்னதாகவே வரவுள்ளது.

புதிய நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்டை போன்ற நவீன வடிவமைப்பை வழங்கக்கூடிய ஃபேஸ்லிஃப்ட் உடன் பன்சை டாடா புதுப்பிக்கலாம், ஆனால் புதுப்பிக்கப்பட்ட மைக்ரோ எஸ்யூவி  பற்றிய விவரங்கள் குறைவாகவே உள்ளன. இருப்பினும், இந்த சிறிய எஸ்யூவி -யின் பிரபலத்தால், குறிப்பிட்ட காலத்தில் பெரிய அப்டேட்களை பெறலாம்.

மேலும் தெரிந்து கொள்ள: பன்ச் AMT

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Tata பன்ச்

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience