• English
    • Login / Register

    Tata Nexon Facelift எக்ஸ்டீரியர் மறைக்கப்படாமல் படம் பிடிக்கப்பட்டுள்ளது

    டாடா நிக்சன் க்காக ஆகஸ்ட் 29, 2023 04:22 pm அன்று rohit ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 42 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்டின் முன்புறம் மற்றும் பின்புற தோற்றம் கவர்ச்சியானதாக மாறுகிறது, இப்போது ஸ்லீக்கர் மற்றும் டாப்பர் LED லைட்டிங் செட்டப்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

    Tata Nexon facelift seen undisguised

    • செப்டம்பர் 14 ஆம் தேதி அன்று ஃபேஸ்லிஃப்டட் நெக்ஸானை டாடா அறிமுகப்படுத்தவுள்ளது.

    • புதிய புகைப்படங்கள் TVC படப்பிடிப்பின் போது எஸ்யூவி -யை எந்த மறைப்பும் இல்லாமல் காட்டுகின்றன.

    • கேபின் அப்டேட்களில் புதிய ஸ்டீயரிங் வீல் மற்றும் முழு டிரைவருக்கான டிஜிட்டல் டிஸ்ப்ளே ஆகியவை அடங்கும்.

    • 360 டிகிரி கேமரா, 10.25 இன்ச் டச்ஸ்கிரீன் மற்றும் ஆறு ஏர்பேக்குகள் வரை கிடைக்கும்.

    • டாடா டர்போ-பெட்ரோல், டீசல் மற்றும் EV பவர் ட்ரெய்ன்களுடன் இதைத் தொடர்ந்து வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுறது.

    • தற்போதுள்ள நெக்ஸான் (எக்ஸ்-ஷோரூம் டெல்லியின் விலை ரூ. 8 லட்சம்) விட பிரீமியம் கூடுதலாக இருக்கும்.

    டாடா நெக்ஸான் மற்றும் நெக்ஸான் EV ஃபேஸ்லிஃப்ட் அறிமுக தேதி சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது. அதன் விலை அறிவிப்பிற்கு இன்னும் சில வாரங்கள் உள்ள நிலையில், புதுப்பிக்கப்பட்ட எஸ்யூவி தொலைக்காட்சி விளம்பரத்தின் (TVC) படப்பிடிப்பின் போது, ​​மறைப்பு இல்லாமல் காணப்பட்டது.

    கவர்ச்சிகரமான முன்பக்கம்

    டாடா புதிய நெக்ஸானுக்கு மிகவும் கவர்ச்சிகரமான முகப்புத் தோற்றத்தை ஃபேசியாவை வழங்கியுள்ளது, மேலும் ஒரு மெலிதான கிரில் திருத்தப்பட்ட LED DRL கள் பக்கவாட்டில் கொடுக்கப்பட்டுள்ளன. இது மாற்றியமைக்கப்பட்ட பம்பர் வடிவமைப்பை கொண்டுள்ளது, இது இப்போது செங்குத்தாக அடுக்கப்பட்ட LED ஹெட்லைட்கள் மற்றும் கீழ் பாதியில் உள்ள அலங்கார வடிவத்தை கொண்டுள்ளது.

    பின்புறத்தில் ஏதேனும் மாற்றங்கள் உள்ளதா?

    Tata Nexon facelift rear seen undisguised

    எஸ்யூவி -யின் பின்புற தோற்றத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது ஒரு நேர்த்தியான LED டெயில்லைட் அமைப்பை கொண்டுள்ளது (இப்போது லைட்டிங் ஸ்ட்ரிப் மூலம் இணைக்கப்பட்டுள்ளது), ரீடோன் டெயில்கேட் இன்னும் 'நெக்ஸான்' பேட்ஜிங்கை கொண்டுள்ளது மற்றும் ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட்டுடன் கூடிய சங்கியர் பம்பர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பின்பக்க ரெஃப்ளக்டார்களைக் கொண்ட பளபளப்பான வீல் ஆர்ச்கள் உயரமானவை மற்றும் மிகவும் கவனிக்கத்தக்கவை.

    புதிதாக வடிவமைக்கப்பட்ட அலாய் வீல்களை பெற்றிருப்பதுதான் எஸ்யூவி -யின் பக்கவாட்டுப் பகுதிகளில்  உள்ள ஒரே பெரிய திருத்தம். இந்த மாற்றங்கள் அனைத்தும் நெக்ஸான் EV -யில் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம், நிச்சயமாக EV -க்கான தனிப்பட்ட  ப்ளூ ஹைலைட்ஸ் மற்றும் மூடப்பட்ட பேனல்கள் போன்றவையும் இடம்பெறும்.

    மேலும் படிக்க: இந்திய-கார்களை கிராஷ் டெஸ்டிங் செய்யும் அதிகாரத்தை பாரத் NCAP அமைப்பிடம் 2024 -ம் ஆண்டு குளோபல் NCAP ஒப்படைக்கும்

    உட்புறத்திலும் மாற்றங்கள் இருக்கின்றன

    Tata Nexon facelift cabin
    எஸ்யூவி -யின் உட்புறத்தில் செய்யப்பட்ட பல்வேறு புதுப்பிப்புகளில், மிகவும் கவனிக்கத்தக்கவை புதிய டேஷ்போர்டு லே அவுட் மற்றும் டாடா கர்வ் போன்ற 2-ஸ்போக் ஸ்டீயரிங் ஆகியவை அடங்கும். SUV யின் கேபினில் செய்யப்பட்ட அனைத்து புதுப்பிப்புகளையும் கண்டறிய எங்கள் விரிவான கட்டுரையை நீங்கள் பார்க்கலாம்.

    தொழில்நுட்பம் நிறைந்தது

    Tata Nexon EV Max 10.25-inch touchscreen

    நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் முழு டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS), முன்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் 360 டிகிரி கேமரா போன்ற வடிவங்களில் புதிய தொழில்நுட்பத்தைப் பெறும். போர்டில் உள்ள அம்சங்கள் 10.25-இன்ச் டச்ஸ்கிரீன், வென்டிலேட்டட் முன்புற இருக்கைகள், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் ஆகியவற்றை கொண்டிருக்கும்.

    பாதுகாப்பை பொருத்தவரை அதிகபட்சம் ஆறு ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ISOFIX  சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் மற்றும் ரிவர்சிங் கேமரா ஆகியவை அடங்கும்.

    மேலும் படிக்க: பல்வேறு வகையான NCAPகள்: உலகம் முழுவதும் வாகனப் பாதுகாப்பு எப்படி சோதிக்கப்படுகிறது

    பவர்டிரெய்ன் விவரங்கள்

    தற்போதுள்ள மாடலின் 1.5-லிட்டர் டீசல் இன்ஜினுடன் (115PS/160Nm) 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 6-ஸ்பீடு AMT உடன் இணைக்கப்பட்ட புதிய நெக்ஸானை டாடா வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம்.  புதுப்பிக்கப்பட்ட எஸ்யூவி ஆனது, புதிய DCT (டூயல்-கிளட்ச் டிரான்ஸ்மிஷன்) ஆப்ஷனுடன் டாடாவின் புதிய 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினையும் (125PS/225Nm) பெறலாம். நெக்ஸான் EV ஃபேஸ்லிஃப்ட் பவர்டிரெய்ன்களில் மாற்றங்கள் சாத்தியமில்லை. இது பிரைம் மற்றும் மேக்ஸ் என்ற இரு இட்டரேஷன்களில் பல்வேறு பேட்டரி அளவுகளுடன் தொடர்ந்து வழங்கப்படும்.

    போட்டி மற்றும் விலை விவரம்

    டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்டை தற்போதுள்ள மாடலை விட கூடுதல் பிரீமியத்தில் விலை நிர்ணயம் செய்யலாம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லியின் விலை ரூ. 8 லட்சம்). மாருதி ஃபிரான்க்ஸ் மற்றும் சிட்ரோன் C3 போன்ற கிராஸ்ஓவர் மாடல்களுடன், கியா சோனெட், ஹூண்டாய் வென்யூ ,மாருதி பிரெஸ்ஸா, ரெனால்ட் கைகர், நிஸான் மேக்னைட் மற்றும் மஹிந்திராXUV300 ஆகியவற்றுக்கு எதிராக ஃபேஸ்லிஃப்டட் SUV வரும் .

    மேலும் படிக்க: நெக்ஸான் AMT

    was this article helpful ?

    Write your Comment on Tata நிக்சன்

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience