சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

Tata Nexon EV லாங் ரேஞ்ச் மற்றும் Tata Punch EV லாங் ரேஞ்ச்: ரியர் வேர்ல்டு செயல்திறன் சோதனை

டாடா நெக்ஸன் இவி க்காக ஜூலை 30, 2024 08:39 pm அன்று shreyash ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

டாடா நெக்ஸான் EV LR (லாங் ரேஞ்ச்) 40.5 kWh பேட்டரி பேக்குடன் வருகிறது. அதே நேரத்தில் பன்ச் EV LR ஆனது 35 kWh பேட்டரி பேக்கை கொண்டுள்ளது.

நீங்கள் ஒரு எலக்ட்ரிக் SUV -யில் ஆர்வம் கொண்டவராக இருந்தால் குறிப்பாக டாடாவிடமிருந்து, இரண்டு பிரபலமான ஆப்ஷன்கள் உங்களுக்காக உள்ளன: டாடா நெக்ஸான் EV மற்றும் டாடா பன்ச் EV. இந்த இரண்டு எலக்ட்ரிக் கார்களின் லாங் ரேஞ்ச் வேரியன்ட்களும் 400 கி.மீ -க்கும் அதிகமான ரேஞ்சை வழங்குகின்றன. மேலும் நெக்ஸான் EV ஆனது பன்ச் EV -யின் பெரிய பேட்டரி பேக் காரணமாக அதிக ரேஞ்சை வழங்குகிறது. நிஜ உலக செயல்திறனின் அடிப்படையில் இந்த இரண்டு கார்களும் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை இங்கே பார்ப்போம்.

முதலில் அவற்றின் விவரங்களைப் பார்ப்போம்:

டாடா நெக்ஸான் EV LR

டாடா பன்ச் EV LR

பேட்டரி பேக்

40.5 kWh

35 kWh

கிளைம்டு ரேஞ்ச் (MIDC)

465 கி.மீ

421 கி.மீ

பவர்

143 PS

122 PS

டார்க்

215 Nm

190 Nm

இங்குள்ள நெக்ஸான் EV LR ஆனது பன்ச் EV-ஐ விட 21 PS அதிக பவரையும் 25 Nm அதிக டார்க்கையும் கொண்டுள்ளது.

ஆக்சிலரேஷன் சோதனை

சோதனைகள்

டாடா நெக்ஸான் EV LR

டாடா பன்ச் EV LR

மணிக்கு 0-100 கி.மீ

8.75 வினாடிகள்

9.05 வினாடிகள்

கிக் டவுன் (20-80 கி.மீ/மணி)

5.09 வினாடிகள்

4.94 வினாடிகள்

கால் மைல்

138.11 கி.மீ வேகத்தில் 16.58 வினாடிகள்

132.24 கி.மீ வேகத்தில் 16.74 வினாடிகள்

0-100 கி.மீ/மணி வேகத்தில் டாடா நெக்ஸான் LR ஆனது டாடா பன்ச் EV LR -யை விட வேகமாக இருந்தது. ஆனால் வித்தியாசம் வெறும் 0.3 வினாடிகள் மட்டுமே. உண்மையில் மணிக்கு 20 கி.மீ முதல் 80 கி.மீ வேகம் வரையிலான வேகத்தில், டாடா பன்ச் EV ஆனது, நெக்ஸான் EV-யை விட 0.13 வினாடிகள் முன்னிலையில் இருந்தது. டாடாவின் எலெக்ட்ரிக் மைக்ரோ எஸ்யூவி -யும் கால் மைல் போட்டியில் நெக்ஸான் இவி -க்கு எதிராக நெருக்கமாக இருந்தது, இருப்பினும் நெக்ஸான் சற்று அதிக வேகத்தில் முந்தியது.

பிரேக்கிங் சோதனை

சோதனைகள்

டாடா நெக்ஸான் EV LR

டாடா பன்ச் EV LR (ஈரமான)

மணிக்கு 100-0 கி.மீ

40.87 மீட்டர்

44.66 மீட்டர்

மணிக்கு 80-0 கி.மீ

25.56 மீட்டர்

27.52 மீட்டர்

மணிக்கு 100 கி.மீ வேகத்தில் பிரேக்கை அப்ளை செய்யும் போது ​​டாடா நெக்ஸான் EV ஆனது டாடா பன்ச் EV-ஐ விட கிட்டத்தட்ட 4 மீட்டர் குறைவான தூரத்தை கடந்தது. 80 கி.மீ முதல் 0 கி.மீ வரை பிரேக் செய்யும் போது இந்த வேறுபாடு 2 மீட்டராக குறைந்தது; இருப்பினும் நெக்ஸான் EV இன்னும் விரைவாக முழுமையாக நிறுத்தப்பட்டது. நெக்ஸான் EV LR ஆனது 16-இன்ச் அலாய் வீல்களுடன் 215/60 டயர்களை கொண்டுள்ளது, அதே சமயம் பன்ச் EV ஆனது 190-பிரிவு டயர்கள் மற்றும் அதே 16-இன்ச் அலாய் வீல்களை கொண்டுள்ளது.

மேலும் பார்க்க: Tata Nexon EV -யிடம் இருந்து இந்த 10 விஷயங்களை Tata Curvv பெறக்கூடும்

முக்கிய விவரங்கள்

டாடா பன்ச் EV LR ஆனது நெக்ஸான் EV-ஐ விட குறைவான சக்தி வாய்ந்த மின்சார மோட்டாருடன் வந்தாலும், முடுக்கம் சோதனைகளில் நெக்ஸான் EV-க்கு இன்னும் நெருக்கமான சண்டையை கொடுக்கிறது. பிரேக்கிங்கை பொறுத்தவரை, பன்ச் EV ஈரமான சாலை நிலைகளில் சோதிக்கப்பட்டது, இது பன்ச் EV இன் பிரேக்கிங் செயல்திறனைப் பாதித்திருக்கலாம்.

பொறுப்பு துறப்பு: ஓட்டுநர், சாலை நிலைமைகள், வாகனங்களின் நிலைமை மற்றும் வானிலை ஆகியவற்றை பொறுத்து நிஜ உலக செயல்திறனில் மாற்றம் இருக்கலாம்.

விலை

டாடா நெக்ஸான் EV LR

டாடா பன்ச் EV LR

ரூ.16.99 லட்சம் முதல் ரூ.19.49 லட்சம்

ரூ.12.99 லட்சம் முதல் ரூ.15.49 லட்சம்

விலை விவரங்கள் அனைத்தும் டெல்லி எக்ஸ்-ஷோரூம்-க்கானவை ஆகும்

டாடா நெக்ஸான் EV -யின் லாங் ரேஞ்ச் வேரியன்ட் 16.99 லட்சத்தில் தொடங்குகிறது. இது பன்ச் EV -யின் டாப்-ஸ்பெக் எம்பவர்டு லாங் ரேஞ்ச் வேரியன்ட்டை விட ரூ.1.5 லட்சம் அதிகம்.

நெக்ஸான் EV ஆனது மஹிந்திரா XUV400 EV -க்கு போட்டியாக கருதப்படலாம். பன்ச் EV ஆனது சிட்ரோன் eC3 உடன் போட்டியிடும்.

லேட்டஸ்ட் கார் அப்டேட்களுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்து கொள்ளவும்

மேலும் படிக்க: நெக்ஸான் EV ஆட்டோமெட்டிக்

Share via

Write your Comment on Tata நெக்ஸன் இவி

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
Rs.18.90 - 26.90 லட்சம்*
Rs.7 - 9.84 லட்சம்*
Rs.17.49 - 21.99 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை