இந்தியாவில் புதிய Aston Martin Vanquish அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
ஆஸ்டன் மார்டின் வான்க்யூஸ் க்காக மார்ச் 22, 2025 07:44 pm அன்று dipan ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 12 Views
- ஒரு கருத்தை எழுதுக
புதிய ஆஸ்டின் மார்ட்டின் வான்கிஷ் அதிகபட்சமாக 345 கி.மீ வேகத்தில் செல்லும். இதுவரை வெளியான ஆஸ்டின் மார்டினின் சீரிஸ் கார்களிலேயே அதிகபட்சம் ஆகும்.
-
சுற்றிலும் எல்இடி லைட்ஸ், பெரிய கிரில், 21-இன்ச் அலாய் வீல்கள் மற்றும் குவாட் எக்ஸாஸ்ட் அமைப்பு ஆகியவற்றை கொண்டுள்ளது.
-
உள்ளே இது டூயல்-தொனி டேஷ்போர்டு, 2 ஸ்போர்ட்டியர் சீட்கள் மற்றும் நிறைய கார்பன் ஃபைபர் எலமென்ட்கள் உடன் வருகிறது.
-
டூயல் 10.25-இன்ச் ஸ்கிரீன்கள், டூயல் ஜோன் ஆட்டோ ஏசி மற்றும் பனோரமிக் கண்ணாடி ரூஃப் ஆகியவையும் இதில் உள்ளன.
-
பாதுகாப்புக்காக பல ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் ADAS தொகுப்பு ஆகியவை அடங்கும்.
-
835 PS மற்றும் 1000 Nm பவர் அவுட்புட்டை கொடுக்கும் 5.2 லிட்டர் ட்வின்-டர்போ வி12 இன்ஜின் இதில் உள்ளது.
இந்தியாவில் ஆஸ்டின் மார்ட்டினின் மிகவும் பிரீமியம் கிராண்ட் டூரராக 2025 ஆஸ்டன் மார்ட்டின் வான்கிஷ் இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 8.85 கோடி (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்போது அதன் மூன்றாம் தலைமுறையில், புதிய வான்கிஷ் அசல் தோற்றத்தின் வெளிப்புற தோற்றத்தை அப்படியே வைத்துள்ளது. ஆனால் நிறைய நவீன மற்றும் ஸ்போர்ட்டியர் டிசைன் டச்கள் கொடுக்கப்பட்டுள்ளனன. இதுவரை வெளியான ஆஸ்டின் மார்ட்டின் சீரிஸ்களிலேயே அதிகபட்ச செயல்திறனை வழங்கும் டூய,-டர்போ V12 இன்ஜின் இதில் உள்ளது. புதிய வான்கிஷ் பற்றி இங்கே பார்க்கலாம்.
வெளிப்புறம்
முன்புறத்தில், ஆஸ்டன் மார்ட்டின் வான்கிஷ் அந்நிறுவனத்தின் மற்ற மாடல்களை போலவே ஷார்ப்பான தோற்றமுடைய ஹெட்லைட்கள் மற்றும் V12 இன்ஜினுக்கு கொடுக்கும் வெர்டிகல் எலமென்ட்களுடன் கூடிய பெரிய கிரில்லை கொண்டுள்ளது. பானட்டில் கார்பன்-ஃபைபர் ஏர் இன்டேக்ஸ் ஆகியவையும் உள்ளன. மேலும் பம்பரில் கூடுதலான ஆக்ரோஷமான தோற்றத்திற்காக கார்பன்-ஃபைபர் ஸ்ப்ளிட்டர் கொடுக்கப்பட்டுள்ளது.


ஸ்வான் டைப் டோர்கள், 21-இன்ச் போலியான அலாய் வீல்கள் மற்றும் 'ஆஸ்டன் மார்ட்டின் வி12' பேட்ஜை கொண்ட கார்பன்-ஃபைபர் டிரிம் ஆகியவற்றுடன் அதன் பக்கவாட்டு தோற்றம் தெளிவாக உள்ளது.
பின்புறத்தில் வெர்டிகலான LED டெயில் லைட்ஸ் மற்றும் அவற்றை இணைக்கும் ஒரு கிளாஸி பிளாக் எலமென்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக காருக்கு ஒரு ஆக்ரோஷமான வடிவமைப்பைப் கிடைக்கிறது. டெயில்கேட்டில் நிறையவே கார்பன் ஃபைபர் எலமென்ட்கள் உள்ளன. பம்பரில் குவாட் எக்ஸாஸ்ட் சிஸ்டம் மற்றும் மிரட்டலான டிஃப்பியூசர் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளன. இது காருக்கு ஒரு ஸ்போர்ட்டி தோற்றத்தை அளிக்கிறது.
இன்ட்டீரியர்
இது ஒரு 2-சீட்டர் காராகும். டூயல்-டோன் டேஷ்போர்டை இது கொண்டுள்ளது. இது அதன் ஸ்போர்ட்டி தன்மையை காட்டும் வகையில் சில கார்பன் ஃபைபர் எலமென்ட்களுடன் கூடிய பிரீமியம் லெதரெட் பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. டேஷ்போர்டில் இரண்டு டிஜிட்டல் ஸ்கிரீன்கள் மற்றும் 3-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் மற்றும் டூயல் டோன் தீம் உள்ளது.
இது ஸ்போர்ட்டியரான சீட்களை பெறுகிறது. இவை இரண்டும் லெதரெட் குஷனில் உள்ளன. இருக்கைகளுக்குப் பின்னால் சில லக்கேஜ் ஸ்டோரேஜ் பகுதிகளும் உள்ளன. மேலும் இந்த பகுதி டாஷ்போர்டு வடிவமைப்புடன் பொருந்தக்கூடிய கார்பன்-ஃபைபர் டிரிம்களையும் கொண்டுள்ளது.
புஷ்-பட்டன் ஸ்டார்ட், சீட் வென்டிலேஷன் மற்றும் ஏசி வரை அனைத்தையும் கட்டுப்படுத்துவதற்கான பட்டன்கள் மற்றும் ரோட்டரி டயல்களுடன் சென்டர் கன்சோல் கொடுக்கப்பட்டுள்ளது. இது இரண்டு கப்ஹோல்டர்கள் மற்றும் முன் ஆர்ம்ரெஸ்டில் கூடுதல் ஸ்டோரேஜ் இடத்தையும் கொண்டுள்ளது.
மேலும் படிக்க: ஐபிஎல் 2025: டி20 போட்டியில் இதுவரை இடம்பெற்றுள்ள அனைத்து அதிகாரப்பூர்வ கார்களின் விவரங்கள்
வசதிகள் மற்றும் பாதுகாப்பு
ஆஸ்டன் மார்ட்டின் வான்கிஷ் 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, 10.25-இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் 15-ஸ்பீக்கர் போவர்ஸ் & வில்கின்ஸ் சவுண்ட் சிஸ்டம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது டூயல் ஜோன் ஆட்டோ ஏசி, வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், பனோரமிக் கண்ணாடி கிளாஸ், 16-வே எலக்ட்ரிக்கலி அட்ஜெஸ்ட்டபிள் சீட்கள், பவர் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஸ்டீயரிங் மற்றும் ஆட்டோமெட்டிக் ஹெட்லைட்கள் மற்றும் வைப்பர்கள் ஆகியவற்றுடன் வருகிறது. மேலும் இது ஒரு ஹீட்டட் ஸ்டீயரிங் மற்றும் வென்டிலேட்டட் சீட்களை ஆப்ஷனல் ஆக்ஸசரீஸ்களாக வழங்குகிறது.
இதன் பாதுகாப்புக்காக மல்டி ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் ஆகியவை உள்ளன. இது ஃபார்வர்டு கொலிஷன் வார்னிங் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்களுடன் கூடிய அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் -களின் முழுத் தொகுப்பையும் பெறுகிறது.
பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
ஆஸ்டன் மார்ட்டின் வான்கிஷ் காரில் 5.2 லிட்டர் ட்வின்-டர்போ V12 பெட்ரோல் இன்ஜின் உள்ளது. அதன் விவரங்கள் இங்கே:
இன்ஜின் |
5.2 லிட்டர் ட்வின் டர்போ V12 பெட்ரோல் இன்ஜின் |
பவர் |
835 PS |
டார்க் |
1000 Nm |
டிரான்ஸ்மிஷன் |
8-ஸ்பீடு AT |
டிரைவ்டிரெய்ன் |
ரியர்-வீல் டிரைவ் (RWD) |
இது 0-100 கி.மீ வேகத்தை 3.3 வினாடிகளில் எட்டும், மற்றும் அதிகபட்சமாக 345 கி.மீ வேகத்தில் செல்லும். இது ஆஸ்டின் மார்ட்டின் வெளியிட்ட கார்களிலேயே அதிக செயல்திறன் கொண்டதாகும்.
போட்டியாளர்கள்
இந்தியாவில் ஆஸ்டன் மார்ட்டின் வான்கிஷ் ஃபெராரி 12 சிலிண்ட்ரி உடன் போட்டியிடுகிறது.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.