சோதனையின் போது தென்பட்ட Tata Altroz Facelift கார், புதிய வடிவமைப்பு விவரங்கள் தெரிய வருகின்றன
டாடா ஆல்டரோஸ் க்காக மார்ச் 25, 2025 08:08 pm அன்று dipan ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 7 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஃப்ளஷ் டைப் டோர் ஹேண்டில்கள், டூயல்-பாட் ஹெட்லைட் டிஸைன் மற்றும் புதிய அலாய் வீல் வடிவமைப்பு ஆகியவற்றை ஸ்பை ஷாட்களில் பார்க்க முடிகிறது.
-
ஸ்பை ஷாட்களில் புதிய வடிவிலான ஃபாக் லைட்ஸ் ஹவுஸிங்குகள் மற்றும் புதிய முன்பக்க பம்பரை பார்க்க முடிகிறது.
-
உட்புற விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால் பன்ச் மற்றும் நெக்ஸானிலிருந்து சில விஷயங்களை பெறலாம்.
-
10.25-இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் சிங்கிள்-பேன் சன்ரூஃப் உள்ளிட்ட வசதிகள் தற்போதைய-ஸ்பெக் மாடலை போலவே இருக்கும்.
-
பாதுகாப்புத் தொகுப்பில் 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), 360-டிகிரி கேமரா மற்றும் TPMS ஆகியவை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
தற்போதைய-ஸ்பெக் மாடலை சற்று அதிக விலையில் வரக்கூடும் எதிர்பார்க்கப்படுகிறது.
2020 -ஆம் ஆண்டிலேயே அறிமுகப்படுத்தப்பட்டு விட்ட டாடா ஆல்ட்ரோஸ் -க்கு இன்னும் சரியான மிட்லைஃப் அப்டேட் கொடுக்கப்படவில்லை. இப்போது டாடா நிறுவனம் காருக்கு ஒரு அப்டேட்டை கொடுக்க தயாராகியுள்ளது. ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஆல்ட்ரோஸ் போன்று தோற்றமளிக்கும் ஒரு சோதனை கார் சமீபத்தில் சாலையில் தென்பட்டுள்ளது. முழுவதுமாக மறைக்கப்பட்டிருந்தாலும் இதை தற்போதைய-ஸ்பெக் மாடலுடன் ஒப்பிடும்போது சில முக்கிய வடிவமைப்பு மாற்றங்கள் இருப்பதை பார்க்க முடிகிறது. சோதனை காரில் கவனிக்கப்பட்ட மாற்றங்களின் விவரங்கள் இங்கே.
என்ன பார்க்க முடிந்தது?
மேம்படுத்தப்பட்ட டாடா ஆல்ட்ரோஸ் ஆனது சிறிய வடிவமைப்பு மாற்றங்களைப் பெறும் என்பதை ஸ்பை ஷாட்கள் காட்டுகின்றன. இது முன் கதவுகளில் பொருத்தப்பட்ட செக்மென்ட்-ஃபர்ஸ்ட் ஃப்ளஷ் டைப் டோர் ஹேண்டில்களுடன் வரும். பின்புற டோர் ஹேண்டில்கள் இன்னும் சி-பில்லரிலேயே உள்ளன.
ஹெட்லைட்களின் வடிவமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது தற்போதைய ஸ்பெக் மாடலில் உள்ள ப்ரொஜெக்டர் யூனிட்களுடன் ஒப்பிடும் போது டூயல்-பாட் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இந்த ஹெட்லைட்களுக்கு மேல் ஐப்ரோ வடிவ எல்இடி டிஆர்எல் யூனிட்டையும் பார்க்க முடிகிறது.
முன்பக்க பம்பரில் ஃபாக் லைட்ஸ் மற்றும் புதிய வடிவிலான ஏர் இன்லெட் சேனல்களுக்கான புதிய ஹவுஸிங்கும் உள்ளது. ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மாடல் புதிய 5-ஸ்போக் அலாய் வீல் வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்பதையும் படங்கள் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.
உட்புறம் இன்னும் படம் பிடிக்கப்படவில்லை என்றாலும் கூட புதிய ஆல்ட்ரோஸ் ஆனது டாடா பன்ச் மற்றும் டாடா நெக்ஸான் கார்களை போலவே நவீன தோற்றமுடைய கேபினை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
மேலும் படிக்க: ஃபுல்லி லோடட் பேஸ் வேரியன்ட் உடன் வரும் ரூ.25 லட்சத்திற்கும் குறைவான டாப் 8 கார்கள்
எதிர்பார்க்கப்படும் வசதிகள் மற்றும் பாதுகாப்பு தொகுப்பு
10.25-இன்ச் டச் ஸ்கிரீன், 7-இன்ச் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், சிங்கிள் பேன் சன்ரூஃப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், பின்புற வென்ட்கள் கொண்ட ஆட்டோ ஏசி மற்றும் 8-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் ஆகியவ வசதிகளுடன் தற்போதைய-ஸ்பெக் மாடலை போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் டாடா போட்டியாளர்களை விட முன்னால் இருப்பதற்காக கூடுதலாக சில வசதிகளை வழங்குவதன் மூலம் நம்மை ஆச்சரியப்படுத்தலாம்.
6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), 360 டிகிரி கேமரா, ISOFIX சைல்டு சீட் ஆங்கர்கள் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்ட வசதிகளுடன் அதன் பாதுகாப்புத் தொகுப்பும் தற்போதைய மாடலை போலவே இருக்கும்.
எதிர்பார்க்கப்படும் பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஆல்ட்ரோஸில் தற்போதைய-ஸ்பெக் மாடலின் அதே இன்ஜின் ஆப்ஷன்கள் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் விவரங்கள் இங்கே:
இன்ஜின் |
1.2 லிட்டர் நேச்சுரல் அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் |
1.2 லிட்டர் பெட்ரோல்+CNG |
1.5 லிட்டர் டீசல் எஞ்சின் |
பவர் |
88 PS |
73.5 PS |
90 PS |
டார்க் |
115 Nm |
103 Nm |
200 Nm |
டிரான்ஸ்மிஷன் |
5 ஸ்பீடு MT / 6 ஸ்பீடு DCT |
5-ஸ்பீடு MT |
5-ஸ்பீடு MT |
டாடா ஆல்ட்ரோஸ் ரேசர் தற்போது 120 PS டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் கிடைக்கிறது. இது ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மாடலிலும் கொடுக்கப்படலாம்.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
6.65 லட்சம் முதல் 11.30 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) விலையில் கிடைக்கும் தற்போதைய-ஸ்பெக் மாடலை விட ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட டாடா ஆல்ட்ரோஸ் சற்று கூடுதல் விலையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஹூண்டாய் ஐ20, மாருதி பலேனோ, மற்றும் டொயோட்டா கிளான்ஸா போட்டியாக இருக்கும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.