• English
    • Login / Register

    Skoda Kushaq மற்றும் Skoda Slavia கார்களின் விலையில் மாற்றம்

    ஸ்கோடா குஷாக் க்காக மார்ச் 24, 2025 04:20 pm அன்று dipan ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 16 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    மொத்த கலர் ஆப்ஷன்களின் எண்ணிக்கை அப்படியே இருக்கின்றன. ஆனால் சில ஷேடுகள் இப்போது கூடுதல் ஆப்ஷன்களாக மாற்றப்பட்டுவிட்டன. இதை பெற ரூ. 10,000 கூடுதல் செலவு ஆகும்.

    இந்த மாத தொடக்கத்தில் ஸ்கோடா குஷாக் மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா என இரண்டு கார்களுக்கும் மாடல் இயர் அப்டேட் 2025 (MY25) கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இப்போது வேரியன்ட் வாரியான வண்ண ஆப்ஷன்கள் இப்போது மாற்றப்பட்டுள்ளன. புதிய வண்ணங்கள் எதுவும் சேர்க்கப்படவில்லை என்றாலும், சில வண்ணங்கள் இப்போது விருப்பமான கூடுதல் ஆப்ஷன்களாக மட்டுமே கிடைக்கும். இதன் மூலம் குறிப்பிட்ட நிறம் வேண்டும் என்றால் விலை ரூ. 10,000 வரை கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும். இரண்டு ஸ்கோடா கார்களின் வேரியன்ட் வாரியான கலர் ஆப்ஷன்கள் மற்றும் அவற்றின் விலை விவரங்களை இங்கே பார்க்கலாம்:

    வேரியன்ட் வாரியான நிறங்கள்

    Skoda Kylaq

    வேரியன்ட்

    ஸ்டாண்டர்டான கலர்களுக்கான விலை வரம்பு

    கலர் ஆப்ஷன்கள்

    ஸ்கோடா குஷாக்

    ஸ்கோடா ஸ்லாவியா

    ஸ்டாண்டர்டான கலர்கள்

    கலர் ஆப்ஷன்கள்*

    கிளாசிக்

    ரூ.10.99 லட்சம்

    ரூ.10.34 லட்சம்

    கேண்டி ஒயிட், ப்ரில்லியன்ட் சில்வர், டொர்னாடோ ரெட், கார்பன் ஸ்டீல், டீப் பிளாக்

    லாவா ப்ளூ

    ஓனிக்ஸ்

    ரூ.13.59 லட்சம்

    கிடைக்கவில்லை

    கேண்டி ஒயிட், ப்ரில்லியன்ட் சில்வர், டொர்னாடோ ரெட், கார்பன் ஸ்டீல்

    லாவா ப்ளூ, டார்க் பிளாக்

    சிக்னேச்சர்

    ரூ.14.88 லட்சம் முதல் ரூ.15.98 லட்சம்

    ரூ.13.59 லட்சம் முதல் ரூ.14.69 லட்சம்

    கேண்டி ஒயிட், ப்ரில்லியன்ட் சில்வர், டொர்னாடோ ரெட், கார்பன் ஸ்டீல்

    லாவா ப்ளூ, டீப் பிளாக், கார்பன் ஸ்டீல் மேட்

    ஸ்போர்ட்லைன்

    ரூ.14.91 லட்சம் முதல் ரூ.17.61 லட்சம்

    ரூ.13.69 லட்சம் முதல் ரூ.16.39 லட்சம்

    கேண்டி ஒயிட், ப்ரில்லியன்ட் சில்வர், டொர்னாடோ ரெட், கார்பன் ஸ்டீல்

    லாவா ப்ளூ, டீப் பிளாக், கார்பன் ஸ்டீல் மேட், கேண்டி ஒயிட் டூயல் டோன், டொர்னாடோ ரெட் டூயல் டோன், ப்ரில்லியண்ட் சில்வர் டூயல் டோன், லாவா ப்ளூ டூயல் டோன்

    மான்டே கார்லோ

    ரூ.16.12 லட்சம் முதல் ரூ.18.82 லட்சம்

    ரூ.15.34 லட்சம் முதல் ரூ.18.04 லட்சம்

    கேண்டி ஒயிட், ப்ரில்லியன்ட் சில்வர், டொர்னாடோ ரெட், கார்பன் ஸ்டீல், லாவா ப்ளூ, டீப் பிளாக், கேண்டி ஒயிட் டூயல் டோன், டோர்னாடோ ரெட் டூயல் டோன்

    கார்பன் ஸ்டீல் மேட், ப்ரில்லியண்ட் சில்வர் டூயல் டோன், லாவா ப்ளூ டூயல் டோன்

    பிரெஸ்டீஜ்

    ரூ.16.31 லட்சம் முதல் ரூ.19.01 லட்சம்

    ரூ.15.54 லட்சம் முதல் ரூ.18.24 லட்சம் 

    கேண்டி ஒயிட், ப்ரில்லியன்ட் சில்வர், டொர்னாடோ ரெட், கார்பன் ஸ்டீல், லாவா ப்ளூ, டீப் பிளாக், கேண்டி ஒயிட் டூயல் டோன், டோர்னாடோ ரெட் டூயல் டோன்

    கார்பன் ஸ்டீல் மேட், ப்ரில்லியண்ட் சில்வர் டூயல் டோன், லாவா ப்ளூ டூயல் டோன்

    அனைத்து விலை விவரங்களும் எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா -வுக்கானவை

    *ஆப்ஷனல் நிறங்கள் வேண்டும் என்றால் ஸ்டாண்டர்டான வேரியன்ட்களை விட கூடுதலாக ரூ.10,000 செலுத்த வேண்டியிருக்கும். இருப்பினும், ஸ்டாண்டர்ட்டன வேரியன்ட்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை முன்பு.

    மேலும் படிக்க: 2025 ஏப்ரலில் விலை உயர்வை அறிவித்த அனைத்து கார் பிராண்டுகளின் விவரங்கள்

    பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்

    Skoda Slavia

    ஸ்கோடா குஷாக் மற்றும் ஸ்லாவியா இரண்டும் ஒரே இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகின்றன. அவற்றின் விரிவான விவரங்கள் இங்கே:

    இன்ஜின்

    1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின்

    1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின்

    பவர்

    115 PS

    150 PS

    டார்க்

    178 Nm

    250 Nm

    டிரான்ஸ்மிஷன்

    6-ஸ்பீடு MT / 6-ஸ்பீடு AT*

    7-ஸ்பீடு DCT^

    *AT = டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்

    ^DCT = டூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்

    போட்டியாளர்கள்

    ஸ்கோடா குஷாக் ஆனது ஹூண்டாய் கிரெட்டா, மாருதி கிராண்ட் விட்டாரா, கியா செல்டோஸ், டொயோட்டா ஹைரைடர், எம்ஜி ஆஸ்டர் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன்  போன்ற கார்களுக்கு போட்டியாக இருக்கிறது. மறுபுறம், ஸ்கோடா ஸ்லாவியா ஆனது ஃபோக்ஸ்வேகன் விர்ட்டஸ், ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா, மற்றும் மாருதி சியாஸ் ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.

    ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

    was this article helpful ?

    Write your Comment on Skoda குஷாக்

    explore similar கார்கள்

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience