MY2025 Skoda Slavia மற்றும் Skoda Kushaq அறிமுகப்படுத்த ப்பட்டுள்ளது
ஸ்கோடா ஸ்லாவியா க்காக மார்ச் 03, 2025 10:50 pm அன்று dipan ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 5 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்த அப்டேட் மூலமாக இரண்டு கார்களிலும் வேரியன்ட்டிலும் சில விஷயங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன மற்றும் ஸ்லாவியாவின் விலை 5,000 வரை குறைந்துள்ளது. அதே நேரத்தில் குஷாக்கின் விலை ரூ.69,000 வரை அதிகரித்துள்ளது.
ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் ஸ்கோடா குஷாக் கார்களுக்கு MY2025 அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஸ்லாவியா மற்றும் குஷாக் இரண்டின் வேரியன்ட் வாரியான வசதிகள் மற்றும் விலை ஆகியவற்றில் மாற்றங்கள் உள்ளன. இரண்டு கார்களின் புதிய விலை விவரங்கள் இங்கே:
ஸ்கோடா ஸ்லாவியா: விலை விவரங்கள்
வேரியன்ட் |
புதிய விலை |
பழைய விலை |
வித்தியாசம் |
1-லிட்டர் டர்போ-பெட்ரோல் MT |
|||
கிளாசிக் |
ரூ.10.34 லட்சம் |
ரூ.10.69 லட்சம் |
(- ரூ 35,000) |
சிக்னேச்சர் |
ரூ.13.59 லட்சம் |
ரூ.13.99 லட்சம் |
(- ரூ 40,000) |
ஸ்போர்ட்லைன் |
ரூ.13.69 லட்சம் |
ரூ.14.05 லட்சம் |
(- ரூ 36,000) |
மான்டே கார்லோ |
ரூ.15.34 லட்சம் |
ரூ.15.79 லட்சம் |
(- ரூ 45,000) |
பிரெஸ்டீஜ் |
ரூ.15.54 லட்சம் |
ரூ.15.99 லட்சம் |
(- ரூ 45,000) |
1-லிட்டர் டர்போ-பெட்ரோல் AT |
|||
சிக்னேச்சர் |
ரூ.14.69 லட்சம் |
ரூ.15.09 லட்சம் |
(- ரூ 40,000) |
ஸ்போர்ட்லைன் |
ரூ.14.79 லட்சம் |
ரூ.15.15 லட்சம் |
(- ரூ 36,000) |
மான்டே கார்லோ |
ரூ.16.44 லட்சம் |
ரூ.16.89 லட்சம் |
(- ரூ 45,000) |
பிரெஸ்டீஜ் |
ரூ.16.64 லட்சம் |
ரூ.17.09 லட்சம் |
(- ரூ 45,000) |
1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் டி.சி.டி |
|||
சிக்னேச்சர் |
– |
ரூ.16.69 லட்சம் |
நிறுத்தப்பட்டது |
ஸ்போர்ட்லைன் |
ரூ.16.39 லட்சம் |
ரூ.16.75 லட்சம் |
(- ரூ 36,000) |
மான்டே கார்லோ |
ரூ.18.04 லட்சம் |
ரூ.18.49 லட்சம் |
(- ரூ 45,000) |
பிரெஸ்டீஜ் |
ரூ.18.24 லட்சம் |
ரூ.18.69 லட்சம் |
(- ரூ 45,000) |
ஸ்கோடா ஸ்லாவியாவின் விலைகள் ரூ.45,000 வரை குறைக்கப்பட்டுள்ளதாக அட்டவணை தெரிவிக்கிறது. மேலும், 7-ஸ்பீடு DCT விருப்பத்துடன் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சினுடன் கிடைக்கும் சிக்னேச்சர் டிரிம் இப்போது நிறுத்தப்பட்டுள்ளது.
ஸ்கோடா குஷாக்: விலை
வேரியன்ட் |
புதிய விலை |
பழைய விலை |
வித்தியாசம் |
1-லிட்டர் டர்போ-பெட்ரோல் MT |
|||
கிளாசிக் |
ரூ.10.99 லட்சம் |
ரூ.10.89 லட்சம் |
+ ரூ 10,000 |
ஓனிக்ஸ் |
– |
ரூ.12.89 லட்சம் |
நிறுத்தப்பட்டது |
சிக்னேச்சர் |
ரூ.14.88 லட்சம் |
ரூ.14.19 லட்சம் |
+ ரூ 69,000 |
ஸ்போர்ட்லைன் |
ரூ.14.91 லட்சம் |
ரூ.14.70 லட்சம் |
+ ரூ 21,000 |
மான்டே கார்லோ |
ரூ.16.12 லட்சம் |
ரூ.15.90 லட்சம் |
+ ரூ 22,000 |
பிரெஸ்டீஜ் |
ரூ.16.31 லட்சம் |
ரூ.16.09 லட்சம் |
+ ரூ 22,000 |
1-லிட்டர் டர்போ-பெட்ரோல் AT |
|||
ஓனிக்ஸ் |
ரூ.13.59 லட்சம் |
ரூ.13.49 லட்சம் |
+ ரூ 10,000 |
சிக்னேச்சர் |
ரூ.15.98 லட்சம் |
ரூ.15.29 லட்சம் |
+ ரூ 69,000 |
ஸ்போர்ட்லைன் |
ரூ.16.01 லட்சம் |
ரூ.15.80 லட்சம் |
+ ரூ 21,000 |
மான்டே கார்லோ |
ரூ.17.22 லட்சம் |
ரூ.17 லட்சம் |
+ ரூ 22,000 |
பிரெஸ்டீஜ் |
ரூ.17.41 லட்சம் |
ரூ.17.19 லட்சம் |
+ ரூ 22,000 |
1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் DCT |
|||
ஸ்போர்ட்லைன் |
ரூ.17.61 லட்சம் |
ரூ.17.40 லட்சம் |
+ ரூ 21,000 |
மான்டே கார்லோ |
ரூ.18.82 லட்சம் |
ரூ.18.60 லட்சம் |
+ ரூ 22,000 |
பிரெஸ்டீஜ் |
ரூ.19.01 லட்சம் |
ரூ.18.79 லட்சம் |
+ ரூ 22,000 |
அனைத்து விலை விவரங்களும் எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா -வுக்கானவை
ஸ்லாவியா -வின் விலை குறைந்துள்ளது, குஷாக் விலை ரூ.69,000 வரை உயர்ந்துள்ளது. மேலும், 1-லிட்டர் டர்போ-பெட்ரோல்-மேனுவல் ஆப்ஷன் உடன் கூடிய ஓனிக்ஸ் வேரியன்ட் இப்போது நிறுத்தப்பட்டுள்ளது.
வித்தியாசமாக என்ன உள்ளது
இரண்டு கார்களின் வடிவமைப்பும் 2024 மாடல்களை போலவே உள்ளது. மேலும் வசதிகளிலும் எந்த மாற்றமும் இல்லை. மேலும் இரண்டு கார்களும் ஒரே மாதிரியான வசதிகள் மற்றும் பாதுகாப்பு விஷயங்களை தொடர்ந்து வழங்குகின்றன.
இருப்பினும் இப்போது ஸ்லாவியா மற்றும் குஷாக் இரண்டின் பேஸ்-ஸ்பெக் கிளாசிக் வேரியன்ட்கள் இப்போது வயர்டு ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே கனெக்ட்டிவிட்டி உடன் கிடைக்கின்றன. மேலும் இரண்டு கார்களும், அந்தந்த லோயர்-ஸ்பெக் சிக்னேச்சர் டிரிம்களில், இப்போது சிங்கிள்-பேன் சன்ரூஃப், எல்இடி டிஆர்எல்களுடன் கூடிய எல்இடி ஹெட்லைட்கள், ரியர்வியூ மிரர் (ஐஆர்விஎம்) உள்ளே ஆட்டோ டிம்மிங், ரெயின்-சென்சிங் வைப்பர்கள் மற்றும் பின்புற வென்ட்களுடன் கூடிய ஆட்டோ ஏசி உள்ளிட்ட வசதிகள் உள்ளன. குஷாக்கின் சிக்னேச்சர் வேரியன்ட் பின்புற ஃபாக் லைட்ஸ்களுடன் கிடைக்கிறது.
மேலும் குஷாக்கில் கிடைக்கும் பிரத்தியேகமான என்ட்ரி-லெவல் ஓனிக்ஸ் வேரியன்ட் இப்போது 16-இன்ச் அலாய் வீல்களுடன் கிடைக்கிறது. முன்பு ஸ்டீல் சக்கரங்கள் கொடுக்கப்பட்டிருந்தன.
ஸ்கோடா ஸ்லாவியா இப்போது 3 ஆண்டுகள் அல்லது 1 லட்சம் கி.மீ (எது முதலில் இருக்கிறதோ அது) நிலையான உத்தரவாதத்துடன் வருகிறது. மறுபுறம் குஷாக், 5 ஆண்டுகள் அல்லது 1.25 லட்சம் கி.மீ (எது முதலில் இருக்கிறதோ அது) உத்தரவாதத்தைக் கொண்டுள்ளது. முன்னர் இது 4 ஆண்டுகள் அல்லது 1 லட்சம் கி.மீ ஆக இருந்தது.
மேலும் படிக்க: இந்தியாவில் Skoda Kodiaq விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது
கம்ஃபோர்ட் & வசதி மற்றும் பாதுகாப்பு வசதிகள்
ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் குஷாக் ஆகியவை 8-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் 10-இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் 8-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டத்துடன் வருகின்றன. இரண்டு கார்களும் ஆட்டோ ஏசியுடன் பின்புற வென்ட்கள், வென்டிலேட்டட் முன் இருக்கைகள், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் சிங்கிள்-பேன் சன்ரூஃப் ஆகியவற்றுடன் வருகின்றன.
பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS), ஹில்-ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் பின்புற பார்க்கிங் கேமரா ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. இரண்டு கார்களிலும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) வசதிகள் இல்லை.
பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் ஸ்கோடா குஷாக் இரண்டும், MY2025 அப்டேட்டுக்கு பிறகும் கூட ஒரே மாதிரியான டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் தொடர்ந்து கிடைக்கும் அவற்றின் விவரங்கள் இங்கே:
இன்ஜின் |
1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் |
1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் |
பவர் |
115 PS |
150 PS |
டார்க் |
178 Nm |
250 Nm |
டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீடு MT / 6-ஸ்பீடு AT* |
7-ஸ்பீடு DCT^ |
*AT = டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்
^DCT = டூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்
மேலே குறிப்பிட்டுள்ளபடி இரண்டு ஸ்கோடா கார்களும் மேலே உள்ள இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகின்றன.
போட்டியாளர்கள்
ஸ்கோடா ஸ்லாவியா ஆனது ஃபோக்ஸ்வேகன் விர்ட்டஸ், ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டி மேலும் மாருதி சியாஸ் -க்கு போட்டியாக இருக்கும். மறுபுறம், ஸ்கோடா குஷாக் ஆனது ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், எம்ஜி ஆஸ்டர் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.