Kushaq மற்றும் Slavia கார்களை அசெம்பிள் செய்ய வியட்நாமில் புதிய தொழிற்சாலையை அமைக்கும் ஸ்கோடா
ஸ்கோடா குஷாக் க்காக மார்ச் 27, 2025 07:57 pm அன்று kartik ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 12 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஸ்கோடா இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஸ்லாவியா மற்றும் குஷாக் ஆகிய கார்களை வியட்நாமிற்கு கம்ப்ளீட்லி நாக்டு டவுன் (CKD) யூனிட்களாக அனுப்பும். இந்த இரண்டு புதிய ஸ்கோடா சலுகைகளை அசெம்பிள் செய்யும் ஒரே நாடாக வியட்நாம் இருக்கும்.
-
ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் குஷாக் ஆகியவற்றின் CKD பாகங்களை இணைக்க இந்த புதிய தொழிற்சாலை பயன்படுத்தப்படும்.
-
இந்த வசதி பெயிண்ட் ஷாப், வெல்டிங் ஷாப் மற்றும் கிட்டத்தட்ட 2 கிலோமீட்டர் தூரத்திற்கு சோதனை தடம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
-
இந்தியா-ஸ்பெக் மாடல்களுடன் ஒப்பிடுகையில் இரண்டு கார்களும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், பிளைண்ட் ஸ்பாட் டிடெக்ஷன் மற்றும் செயற்கை லெதர் அப்ஹோல்ஸ்டரி போன்ற கூடுதல் வசதிகளை பெறுகின்றன.
ஸ்கோடா நிறுவனம் இந்தியாவில் தயரிக்கப்பட்ட குஷாக் மற்றும் ஸ்லாவியா ஆகியவற்றின் பாகங்களை அசெம்பிள் செய்ய வியட்நாமில் ஒரு புதிய தொழிற்சாலையை திறந்துள்ளது. இதற்காக வியட்நாம் தலைநகர் ஹனோய் -க்கு அருகில் உள்ள குவாங் நின் மாகாணத்தில் ஆலையைத் திறக்க ஸ்கோடா அதன் உள்ளூர் கூட்டாளியான தான் காங் குழுமத்துடன் இணைந்துள்ளது. குஷாக்கிற்கான உள்ளூர் அசெம்பிளி ஏற்கனவே நடந்து வருவதாகவும் அடுத்ததாக ஸ்லாவியா -வின் தயாரிப்பு விரைவில் தொடங்கும் என்றும் ஸ்கோடா தெரிவித்துள்ளது.
வியட்நாமில் ஸ்கோடாவின் தற்போதைய வரிசையில் கரோக் மற்றும் இரண்டாம் தலைமுறை கோடியாக் ஆகியவை உள்ளன. இவை இரண்டும் தற்போது ஐரோப்பாவிலிருந்து முழுமையாக கட்டமைக்கப்பட்ட அலகுகளாக (CBU) வியட்நாமுக்கு அனுப்பப்படுகின்றன.
புதிய ஆலையின் விவரங்கள்
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சிகேடி மாடல்களை அசெம்பிள் செய்யும் நோக்கத்திற்காக இந்த புதிய ஆலை கட்டப்பட்டதாகவும் வெல்டிங் ஷாப், பெயிண்ட் ஷாப், இறுதி அசெம்பிளி லைன் மற்றும் கிட்டத்தட்ட 2 கிலோமீட்டர் டெஸ்ட் டிராக் ஆகியவற்றைக் கொண்டதாகவும் இது இருக்கும் என ஸ்கோடா தெரிவித்துள்ளது. வடக்கு வியட்நாமின் மிகப்பெரிய துறைமுகமான ஹைபோங் துறைமுக நகருக்கு அருகில் உள்ள குவாங் நின் மாகாணத்தில் இந்த ஆலை அமைந்துள்ளது.
இந்தியா-ஸ்பெக் ஸ்கோடா குஷாக் மற்றும் ஸ்லாவியா: ஒரு பார்வை
ஸ்கோடா குஷாக் 2021 ஆண்டில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது அடுத்த வருடத்தில் ஒரு மிட்லைஃப் அப்டேட் இதற்கு கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (115 PS/178 Nm), மற்றும் 1.5-லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் (150 PS/ 250 Nm) என இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது. 10.1-இன்ச் டச் ஸ்கிரீன் செட்டப், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, ஆட்டோ ஏசி, க்ரூஸ் கன்ட்ரோல், 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (டிபிஎம்எஸ்) மற்றும் ஹில்-ஹோல்ட் அசிஸ்ட் ஆகிய வசதிகள் உள்ளன.
மற்றொரு காரான ஸ்லாவியா 2022 ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவும் அடுத்த வருடம் ஒரு மிட்லைஃப் அப்டேட்டை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 10.1-இன்ச் டச் ஸ்கிரீன், 8-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, 8-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், பின்புற வென்ட்கள் கொண்ட ஆட்டோ ஏசி, 6 ஏர்பேக்குகள், ஹில் ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் டிபிஎம்எஸ் ஆகியவற்றுடன் குஷாக்கின் அதே இன்ஜின்கள் மற்றும் ஆக்ஸசரீஸ்களை பெறுகிறது.
வியட்நாமிற்கு செல்லும் மாடல்கள் இந்தியா-ஸ்பெக் குஷாக் மற்றும் ஸ்லாவியாவில் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், பிளைண்ட் ஸ்பாட் டிடெக்ஷன் மற்றும் செயற்கை லெதர் அப்ஹோல்ஸ்டரி போன்ற சில கூடுதல் வசதிகளை கொண்டுள்ளன. அடுத்த வருட அப்டேட்டின் போதும் குஷாக் மற்றும் ஸ்லாவியாவில் இவை சேர்க்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.
மேலும் பார்க்க: Renault Triber அடிப்படையிலான எம்பிவி -யின் முதல் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது
விலை மற்றும் போட்டியாளர்கள்
வியட்நாம் செல்லும் மாடல்களின் விலை வெளியிடப்படாத நிலையில் ஸ்கோடா குஷாக் இந்தியாவில் ரூ.10.99 லட்சம் முதல் ரூ.19.01 லட்சம் வரையிலும், ஸ்லாவியா ரூ.10.34 லட்சம் முதல் ரூ.18.24 லட்சம் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. ஹூண்டாய் கிரெட்டா, டொயோட்டா ஹைரைடர், ஹோண்டா எலிவேட் மற்றும் எம்ஜி ஆஸ்டர் ஆகியவற்றுக்கு குஷாக் போட்டியாக இருக்கும். மேலும் ஸ்லாவியா ஆனது ஹூண்டாய் வெர்னா, மாருதி சியாஸ் மற்றும் ஃபோக்ஸ்வேகன் விர்டஸ் ஆகியவற்றுடன் போட்டியிடும்.
(அனைத்து விலை விவரங்களும் எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா -வுக்கானவை)
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.