Renault Triber அடிப்படையிலான எம்பிவி -யின் முதல் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது
நிசான் கச்சிதமானது எம்பிவி க்காக மார்ச் 26, 2025 10:35 pm அன்று rohit ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
ட்ரைபர் அடிப்படையிலான எம்பி உடன் ஒரு காம்பாக்ட் எஸ்யூவி -யும் வெளியிடப்படும் என்பதை நிஸான் உறுதி செய்துள்ளது. இது வரவிருக்கும் ரெனால்ட் டஸ்டர் ஐ அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும்.
-
இந்தியாவில், சென்னையில் உள்ள அதன் தொழிற்சாலையில் ரெனால்ட் ட்ரைபர் அடிப்படையிலான எம்பிவி -யை நிஸான் தயாரிக்கவுள்ளது.
-
இது மூன்றாவது வரிசையில் நீக்கக்கூடிய இருக்கைகளுடன், ட்ரைபரின் ஃப்ளெக்ஸி-சீட்டிங் விஷயத்தை அப்படியே தக்க வைத்துக் கொள்ளும்.
-
முன்பக்க பம்பரில் பெரிய கிரில் மற்றும் சி-வடிவ எலமென்ட்கள் உட்பட, ரெனால்ட் எம்பிவி -யில் வடிவமைப்பில் நிறைய மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.
-
இது ஸ்டீயரிங் உட்பட புதிய மேக்னைட் எஸ்யூவி உடன் கேபின் விஷயங்களை பகிரலாம்.
-
ட்ரைபரில் இருந்து அதே 1-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் கிடைக்கும்.
-
ரெனால்ட் தனது வரவிருக்கும் காம்பாக்ட் எஸ்யூவி -யின் டீசரை வெளியிட்டுள்ளது. இது 2026 இல் வெளியிடப்படும்.
இந்தியாவிற்கான எதிர்கால மாடல் திட்டங்களை அறிவித்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நிஸான் இப்போது முதல் முறையாக ரெனால்ட் ட்ரைபர் எம்பிவி அடிப்படையிலான காரின் டீசரை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த எம்பிவி FY2025-26 ஆண்டில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்பதையும் நிஸான் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் இந்த எம்பிவி ஒரு புதிய காம்பாக்ட் எஸ்யூவி ஒன்றும் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்பதையும் நிஸான் உறுதி செய்துள்ளது. இதன் டீசரும் வெளியாகியுள்ளது. இதுவும் 2026 ஆண்டில் விற்பனைக்கு வரும். இரண்டு புதிய கார்களும் தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள தொழிற்சாலையில் தயாரிக்கப்படும்.
நிஸான் எம்பிவி டீசரில் என்ன பார்க்க முடிகிறது?
முதல் பார்வையில் நிஸான் எம்பிவி அதன் அடிப்படையிலான மாடலில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருப்பதை நாம் கவனிக்கலாம். நிஸான் முற்றிலும் புதிய முன்பக்கத்தை காருக்கு கொடுத்துள்ளது. ஹெட்லைட் கிளஸ்டர்கள் உள்ளன, இது ஸ்லிம் குரோம் ஸ்ட்ரிப் உடன் கனெக்ட் செய்யப்பட்டுள்ளது.
இது ட்ரைபரை காட்டிலும் பெரிய கிரில் (நடுவில் நிஸான் லோகோவுடன்), பம்பரில் சி-வடிவ எலமென்ட்களுடன் மற்றும் ரூஃப் ரெயில்கள் கொடுக்கப்பட்டுள்ளன. நிஸான் ரெனால்ட் எம்பிவி -யில் இருந்து மேலும் தனித்து தெரியும் வகையில் ஸ்டைலான அலாய் வீல்கள் மற்றும் நேர்த்தியான எல்இடி டெயில்லைட்களும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: மகாராஷ்டிரா HSRP காலக்கெடுவை மார்ச் 31 முதல் ஜூன் 30, 2025 வரை நீட்டித்துள்ளது
நிஸான் எம்பிவி: கேபின் மற்றும் உபகரணங்கள் போர்டில் உள்ளது
எம்பிவி -ன் இன்டீரியர் இன்னும் டீசரி காட்டப்படவில்லை என்றாலும் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ரெனால்ட் ட்ரைபரில் இருப்பதை போன்றே நிஸான் இதையும் வித்தியாசமாக கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம். 7 இருக்கைகள் கொண்ட மாடுலர் அமைப்பு ட்ரைபரின் முக்கிய விற்பனை புள்ளியாக இருக்கிறது. அதை இந்த காரும் அப்படியே தக்க வைத்துக் கொள்ளும். நிஸான் எம்பிவி ஆனது சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட மேக்னைட் எஸ்யூவி உடன் ஸ்டீயரிங் மற்றும் ஸ்விட்சுகள் போன்ற உட்புற விஷயங்களை பகிர்ந்து கொள்ளலாம்.
நிஸான் மேக்னைட்டின் கேபின் படம் எடுத்துக்காட்டுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது
நிஸான் எம்பிவியில் ஆட்டோ ஏசி மற்றும் அனைத்து டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே ஆகியவை வசதிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 8-இன்ச் டச் ஸ்கிரீன், புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், இணைக்கப்பட்ட கார் டெக்னாலஜி மற்றும் நிஸானின் சப்-4எம் எஸ்யூவி -யில் இருந்து க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற டெக்னாலஜி ஆகியவற்றை கடன் வாங்கலாம். பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), 360 டிகிரி கேமரா மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) ஆகியவை கிடைக்கும்.
நிஸான் எம்பிவி: எதிர்பார்க்கப்படும் பவர்டிரெய்ன் விவரங்கள்
நிஸான் எம்பிவி அதே பவர்டிரெய்ன் செட்டப்பை ட்ரைபருடன் பகிர்ந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம். ரெனால்ட் அதன் சப்-4எம் க்ராஸ்ஓவர் எம்பிவி -யை ஒரே ஒரு 1-லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் (72 PS/ 96 Nm) உடன் விற்பனைக்கு கொண்டு வரும். இது 5-ஸ்பீடு MT அல்லது 5-ஸ்பீடு AMT உடன் இணைக்கப்பட்டுள்ளது.
நிஸான் எம்பிவி: இந்தியாவின் விலை மற்றும் போட்டி
நிஸானின் ரெனால்ட் ட்ரைபரின் பதிப்பின் விலை அதன் டோனர் வாகனத்தை விட சற்று அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதைக்கு ரெனால்ட் எம்பிவி -யின் விலை ரூ.6.10 லட்சத்தில் இருந்து ரூ.8.97 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) வரை இருக்கிறது. இதன் ஒரே நேரடி போட்டியாளர் ரெனால்ட் ட்ரைபர் ஆக இருக்கும். மேலும் இது போன்ற விலையில் கிடைக்கும் மாருதி ஸ்விஃப்ட் மற்றும் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் ஹேட்ச்பேக்குகளுக்கு எம்பிவி மாற்றாகவும் இது இருக்கும்.
மேலும் படிக்க: BIMS 2025: இந்தியா-ஸ்பெக் மாடலில் ஒரு பெரிய மாற்றத்துடன் புதிய ஹூண்டாய் கிரெட்டா என் லைன் தாய்லாந்தில் வெளியிடப்பட்டது
ஹூண்டாய் கிரெட்டா -வுக்கான நிஸானின் போட்டியாளர் தயாராகி வருகிறது!
இந்த எம்பிவியுடன் நிஸான் அதன் புதிய காம்பாக்ட் எஸ்யூவி -க்கான டீசரையும் வெளியிட்டுள்ளது. இந்த முறை அதன் முழு தோற்றமும் டீசரில் காட்டப்பட்டுள்ளது. இந்த மாடல் வரவிருக்கும் ரெனால்ட் டஸ்டர் காரை அடிப்படையாகக் கொண்டது. மற்றும் மிகவும் பிரபலமான காம்பாக்ட் எஸ்யூவி பிரிவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இந்த எஸ்யூவியானது உலகளாவிய சந்தைகளில் பெரிய காரை வாங்குபவர்களிடையே பிரபலமான தேர்வான பேட்ரோ எஸ்யூவி -யில் இருந்து வடிவமைப்புக்கான விஷயங்களை பெறும் என்று தெரிகிறது. டீசரில் காணப்படும் முக்கிய வடிவமைப்பு விவரங்களில் எல்-வடிவ எல்இடி டிஆர்ல்எல் -கள், ஃபேசியாவின் முன்பக்கம் முழுவதுக்கும் இருக்கும் குரோம் ஸ்ட்ரிப்கள், அலாய் வீல்களின் ஸ்டைலான தொகுப்பு மற்றும் ஒரு பெரிய பம்பர் ஆகியவை கிடைக்குஜ்ம்.
10.1-இன்ச் டச் ஸ்கிரீன், 6 ஏர்பேக்குகள் மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்கள் (ADAS) உட்பட வரவிருக்கும் புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் போன்ற வசதிகள் மற்றும் பவர்டிரெய்ன் அமைப்புகளை இது கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இது 2026 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரவுள்ளது. மேலும் இதன் விலை ரூ. 10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக இருக்கலாம்.
இந்தியாவிற்கான இந்த நிஸான் கார்களை பற்றிய உங்கள் எண்ணங்கள் என்ன? கமென்ட் பகுதியில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.