2025 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு வரவிருக்கும் ரெனால்ட் மற்றும் நிஸான் கார்கள்
ரெனால்ட் டஸ்டர் 2025 க்காக டிசம்பர் 30, 2024 09:01 pm அன்று anonymous ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 71 Views
- ஒரு கருத்தை எழுதுக
இரண்டு பிராண்டுகளும் இந்தியாவில் விற்பனையில் இருந்து நிறுத்தப்பட்ட இரண்டு காம்பாக்ட் எஸ்யூவி -களை மீண்டும் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நிஸான் 2025 ஆண்டில் ஒரு ஃபிளாக்ஷிப் எஸ்யூவி காரை அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது.
இந்தியாவில் கடந்த சில வருடங்களாக ரெனால்ட் மற்றும் நிஸான் சார்பில் எந்த புதிய காரும் அறிமுகப்படுத்தப்படவில்லை. ஆனால் 2025 ஆம் ஆண்டில் இரண்டு பிரபலமான எஸ்யூவி -களை இந்த நிறுவனங்கள் அறிமுகம் செய்யலாம். 2025 ஆண்டில் இந்தியாவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படும் ரெனால்ட் மற்றும் நிஸான் கார்களின் விவரங்கள் இங்கே.
புதிய ரெனால்ட் டஸ்டர்
எதிர்பார்க்கப்படும் வெளியீடு: 2025 ஆண்டில் மத்தியில்
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ. 10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)
மார்ச் 2024 ஆண்டில் ரெனால்ட் அதன் வரவிருக்கும் காம்பாக்ட் எஸ்யூவி -யின் டீஸரை வெளியிட்டது. இது டஸ்டர் இந்தியாவுக்கு வரும் என்பதை காட்டுகிறது. ரெனால்ட்டின் உடன்பிறப்பு பிராண்டான 'டேசியா' பேட்ஜின் கீழ் இது ஏற்கனவே சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வரவிருக்கும் டஸ்டர் புதிய வடிவமைப்பு, முற்றிலும் புதிய கேபின் மற்றும் புதிய ஹைப்ரிட் பவர்டிரெய்ன் ஆப்ஷன்களை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்த பிரிவில் ஏற்கனெவே உள்ள கார்களுடன் போட்டியிடும். குறிப்பாக ஹூண்டாய் கிரெட்டா போன்றவற்றுடன்.
ரெனால்ட் பிக்ஸ்டர்
எதிர்பார்க்கப்படும் வெளியீடு: 2025 -ன் மத்தியில்
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ. 12 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)
டஸ்ட்டர் உலகளவில் டேசியா பிக்ஸ்டர் பெயர்ப்பலகையின் கீழ் 7 இருக்கைகள் கொண்ட கட்டமைப்பில் வழங்கப்படுகிறது. அதன் பெரிய அளவைத் தவிர, பிக்ஸ்டர் ஒரே மாதிரியான வடிவமைப்பு, உட்புறம் மற்றும் சர்வதேச சந்தைகளில் அதே பவர்டிரெய்ன் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. இந்தியாவில் 5 இருக்கைகள் கொண்ட டஸ்ட்டர் அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே பிக்ஸ்டர் அதே பெயரில் இந்தியாவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய ரெனால்ட் வரிசைக்கான மாடல் ஆண்டு அப்டேட்கள்
எதிர்பார்க்கப்படும் வெளியீடு: அறிவிக்கப்படும்
க்விட் காரின் எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.4.70 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)
கைகரின் எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.6 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)
ட்ரைபரின் எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.6 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)
2025 -ம் ஆண்டில் பிரெஞ்சு கார் தயாரிப்பாளரான ரெனால்ட் தற்போது விற்பனையில் இருக்கும் க்விட், கைகர், மற்றும் டிரைபர் கார்களை அப்டேட் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்ஜின் ஆப்ஷன்களில் எந்த மாற்றங்களும் செய்யப்பட வாய்ப்பில்லை. மாறாக இந்த அப்டேட்கள் மூலமாக காஸ்மெட்டிக் மாற்றங்கள் மற்றும் சில புதிய வசதிகள் கொடுக்கப்படலாம். க்விட் மற்றும் ட்ரைபர் இரண்டும் வெவ்வேறு பவர் அவுட்புட்களுடன் இருந்தாலும் கூட 1-லிட்டர் நேச்சுரல் அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினுடன் மட்டுமே வழங்கப்படுகின்றன.
க்விட் காரின் 1-லிட்டர் பெட்ரோல் யூனிட் 68 PS மற்றும் 91 Nm அவுட்புட்டை கொடுக்கிறது. இது 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு AMT உடன் இணைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ட்ரைபரின் இன்ஜின் 72 PS மற்றும் 96 Nm அவுட்புட்டை கொடுக்கிறது. இது அதே போன்ற டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் வழங்கப்படுகிறது. கைகர் 100 PS 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் 72 PS 1-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் யூனிட்டுடன் கிடைக்கிறது. டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் 5-ஸ்பீடு மேனுவல் ஆப்ஷன் ஸ்டாண்டர்டாக உள்ளது. இதனுடன் 5-ஸ்பீடு AMT நேச்சுரல் அஸ்பிரேட்டட் இன்ஜினுக்கானது மற்றும் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பவர்டிரெய்னுக்கான CVT ஆட்டோமேட்டிக் ஆகியவையும் உள்ளன.
மேலும் படிக்க: 2025 ஆண்டில் இந்தியாவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படும் அனைத்து கார்களின் விவரங்கள்
புதிய நிஸான் டெரானோ
எதிர்பார்க்கப்படும் வெளியீடு: 2025 ஆண்டின் மத்தியில்
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ. 10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)
ரெனால்ட் உடன் நிஸான் அதன் வரவிருக்கும் காம்பாக்ட் எஸ்யூவியின் டீஸரையும் வெளியிட்டது. இது மீண்டும் இந்தியாவில் டெரானோ வருவதைக் குறிக்கிறது. உள்ளேயும் வெளியேயும் நுட்பமான ஸ்டைலிங் வேறுபாடுகள் தவிர டெரானோவின் ஒட்டுமொத்த வடிவமைப்பு மற்றும் கேபின் தளவமைப்பு வரவிருக்கும் டஸ்டரை போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அதே பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள், கட்டமைப்பு தளம் மற்றும் பிற எலமென்ட்களையும் ஷேர் செய்து கொள்ளலாம்.
நிஸான் டெரானோ 7-சீட்டர்
எதிர்பார்க்கப்படும் வெளியீடு: 2025 ஆண்டின் மத்தியில்
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ. 12 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)
பிக்ஸ்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளதால் டெரானோ 3-வரிசை பதிப்பில் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கிறோம். இது அதன் 5-சீட் வெர்ஷன் காரை போன்ற வடிவமைப்பு மற்றும் உட்புறத்தைக் கொண்டிருக்கும். மேலும் அதே இன்ஜின் ஆப்ஷன்களும் கொடுக்கப்படும். பிக்ஸ்டர் மற்றும் டெர்ரானோ 7-சீட்டர் இரண்டும் மற்ற 3-வரிசை எஸ்யூவி -களான ஹூண்டாய் அல்கஸார், டாடா சஃபாரி மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 700 ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.
2025 நிஸான் பேட்ரோல்
எதிர்பார்க்கப்படும் வெளியீடு: அக்டோபர் 2025
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ. 2 கோடி (எக்ஸ்-ஷோரூம்)
நிஸான் தனது ஃபிளாக்ஷிப் எஸ்யூவி -யான பேட்ரோல் காரை இந்தியாவிற்கு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது முற்றிலும் பில்ட்-அப் யூனிட்டாக (CBU) இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும். இதன் விலை சுமார் ரூ. 2 கோடி (எக்ஸ்-ஷோரூம்) சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யப்படும் பேட்ரோல் ஆனது 3.5-லிட்டர் மற்றும் 3.8-லிட்டர் V6 பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்தியா-ஸ்பெக் மாடலுக்கான இன்ஜின் ஆப்ஷன்கள் மற்றும் இதர விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
நிஸான் மேக்னைட் - மாடல் இயர் அப்டேட்ஸ்
எதிர்பார்க்கப்படும் வெளியீடு: அறிவிக்கப்படவுள்ளது
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.6 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)
மேக்னைட் ஆனது சமீபத்தில் ஒரு ஃபேஸ்லிஃப்ட் அப்டேட்டை பெற்றது. மேலும் 2025 ஆண்டில் சில கூடுதலாக சில அப்டேட்களை பெறலாம். இது வெளிப்புறத்தில் சிறிய ஸ்டைலிங் மாற்றங்களைக் காட்டுகிறது. அதே நேரத்தில் அதன் உட்புறம் ஒரு புதிய பிளாக் மற்றும் ஆரஞ்சு தீமில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஒட்டுமொத்த செட்டப் அப்படியே இருக்கலாம். 2025 மேக்னைட் முன்பு இருந்த அதே இன்ஜின் ஆப்ஷன்களுடன் இது வழங்கப்படுகிறது. இதில் 72 PS 1-லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் யூனிட் மற்றும் 100 PS டர்போசார்ஜ்டு பெட்ரோல் ஆப்ஷன் ஆகியவை அடங்கும்.
ரெனால்ட் மற்றும் நிஸான் நிறுவனங்களின் பிரபலமான காம்பாக்ட் எஸ்யூவி -கள் மீண்டும் வருவதற்கு நீங்கள் எவ்வளவு காலம் காத்திருக்கிறீர்கள் என்பதைப் பற்றி கீழே உள்ள கமென்ட் பகுதியில் உங்கள் கருத்துகளை எங்களுடன் பகிரவும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.