Tata Nexon CNG கார் சோதனை தொடங்கியது, கார் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்திய சந்தையில் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் வரும் முதல் CNG கார் இதுவாக இருக்கலாம்.
-
120 PS மற்றும் 170 Nm பவரை வழங்கும் 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படும்.
-
மேனுவல் மற்றும் AMT ஆகிய இரண்டு ஆப்ஷன்களையும் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
வழக்கமான வேரியன்ட்களை விட CNG வேரியன்ட்கள் விலை சுமார் ரூ. 1 லட்சம் கூடுதலாக வரலாம்.
ஃபேஸ்லிஃப்ட் டாடா நெக்ஸான் ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் பதிப்பின் அதே டர்போ-பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 2024 பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் டாடா சப்காம்பாக்ட் எஸ்யூவி -யின் CNG வெர்ஷனை காட்சிப்படுத்தியது. ஆகவே இது விரைவில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. சமீபத்தில் நெக்ஸானின் உருமறைப்பு சோதனை கார் சாலையில் தென்பட்டது. மேலும் இது வரவிருக்கும் CNG பதிப்பாக இருக்கலாம்.
பவர்டிரெய்ன் விவரங்கள்
நெக்ஸான் CNG இந்திய சந்தையில் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் CNG ஆப்ஷனை வழங்கும் முதல் கார் ஆகும். இது வழக்கமான பதிப்பின் அதே 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினை பயன்படுத்தும். இது 120 PS மற்றும் 170 Nm அவுட்புட்டை கொடுக்கின்றது. இருப்பினும் அவுட்புட் சற்று குறைவாக இருக்கும்.
மேலும் படிக்க: Tata Nexon EV ஃபேஸ்லிஃப்ட் லாங் ரேஞ்ச் Vs Tata Nexon EV (பழையது): ரியல் வேர்ல்டு செயல்திறன் ஒப்பீடு
டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனை பொறுத்தவரை டாடா இதை 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் வழங்கும். மேலும் இது டியாகோ மற்றும் டிகோர் CNG போன்று AMT ஆப்ஷனையும் பெறலாம். நெக்ஸான் CNG -யின் செயல்திறன் மற்றும் மைலேஜ் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
வசதிகள் மற்றும் பாதுகாப்பு
இப்போதைக்கு CNG ஆப்ஷன் ஹையர் வேரியன்ட்டில் கிடைக்குமா இல்லையா என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் அவ்வாறு கிடைத்தால் சந்தையில் சிறந்த வசதிகளைக் கொண்ட CNG எஸ்யூவி -யாக இருக்கும். ஒரு டாப்-ஸ்பெக் நெக்ஸான் CNG ஆனது 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிரைவருக்கான 10.25-இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் சிங்கிள் பேன் சன்ரூஃப் போன்ற வசதிகளுடன் வரும்.
மேலும் படிக்க: தமிழ்நாட்டில் புதிய உற்பத்தி தொழிற்சாலைக்காக ரூ.9000 கோடியை முதலீடு செய்யும் டாடா மோட்டார்ஸ்
பாதுகாப்பைப் பொறுத்தவரை இது 6 ஏர்பேக்குகள், ABS உடன் EBD, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), ISOFIX சைல்டு சீட் ஆங்கர்ஸ் மற்றும் ஒரு பிளைண்ட் வியூ மானிட்டர் 360 டிகிரி கேமராவுடன் வரலாம்.
விலை போட்டியாளர்கள்
டாடா நெக்ஸான் விலை ரூ. 8.15 லட்சத்தில் இருந்து ரூ. 15.80 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை உள்ளது. மற்றும் CNG வேரியன்ட்கள் பெட்ரோல்-மேனுவல் வேரியன்ட்டை விட சுமார் ரூ.1 லட்சம் கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுகப்படுத்தப்படும் போது அதன் ஒரே நேரடி போட்டியாளராக மாருதி பிரெஸ்ஸா -வின் CNG வேரியன்ட்கள் இருக்கும். வழக்கமான நெக்ஸான் கியா சோனெட், ஹூண்டாய் வென்யூ, மஹிந்திரா XUV300, நிஸான் மேக்னைட் மற்றும் ரெனால்ட் கைகர் ஆகியவற்றுடன் போட்டியிடுகின்றது.
மேலும் படிக்க: டாடா நெக்ஸான் AMT