தமிழ்நாட்டில் புதிய உற்பத்தி தொழிற்சாலைக்காக ரூ.9000 கோடியை முதலீடு செய்யும் டாடா மோட்டார்ஸ்
published on மார்ச் 14, 2024 07:18 pm by ansh
- 24 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்த ஆலை வர்த்தக வாகனங்கள் அல்லது பயணிகள் வாகன உற்பத்திக்கு பயன்படுத்தப்படுமா என்பது பற்றிய தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் மிகப்பெரிய கார் உற்பத்தியாளர்களில் ஒன்றாக இருக்கின்றது. மற்றும் பயணிகள் வாகன விற்பனையில் முன்னணியில் உள்ள நிறுவனங்களில் ஒன்றாகவும் இருக்கின்றது. இந்தியாவில் டாடா நிறுவனத்திடம் ஏற்கனவே 7 உற்பத்தி தொழிற்சாலைகளை இருக்கின்றன. அவற்றில் 3 பயணிகள் வாகனங்கள் உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இப்போது தென் மாநிலத்தில் ஒரு புதிய தொழிற்சாலையை அமைப்பதற்காக டாடா நிறுவனம் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) இன்று கையெழுத்திட்டுள்ளது.
புதிய தொழிற்சாலை பற்றிய விவரங்கள்
புதிய தொழிற்சாலை அமைக்கப்படவுள்ள இடம் மற்றும் அதன் அளவு பற்றிய விவரங்கள் சரிவர தெரியவில்லை. ஆனால் அடுத்த 5 ஆண்டுகளில் புதிய உற்பத்தி வசதிக்காக ரூ.9000 கோடி முதலீடு செய்ய டாடா திட்டமிட்டுள்ளது. இந்த புதிய தொழிற்சாலை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மாநிலத்தில் 5000 புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என டாடாவின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழக முதலமைச்சர், மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. மேலும் திரு. விஷ்ணு ஐஏஎஸ் எம்டி (மேலாண்மை இயக்குனர்) & சிஇஓ வழிகாட்டுதல் மற்றும் டாடா மோட்டார்ஸின் குரூப் சிஎஃப்ஓ திரு. பிபி பாலாஜி ஆகியோருக்கு இடையே கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் பரிமாறிக் கொள்ளப்பட்டது.
மேலும் படிக்க: Tata Curvv: காத்திருக்கும் அளவுக்கு தகுதியானதா? இல்லை அதன் போட்டியாளர்களில் ஒன்றை இப்போது வாங்கலாமா ?
இந்த புதிய வசதி பயணிகள் வாகனங்கள் அல்லது வர்த்தக வாகனங்கள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுமா என்பதையும் டாடா தெரிவிக்கவில்லை. இந்த விவரங்கள் உரிய நேரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கிறோம்.
டாடாவிற்கு கிடைக்கும் பலன்கள்
டாடா தற்போது இந்தியாவில் டாப் கார் உற்பத்தி நிறுவனங்களின் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்துள்ளது மற்றும் இரண்டாம் இடத்திலுள்ள ஹூண்டாய் உடன் தொடர்ந்து போராடி வருகிறது. சனந்த் ஆலையின் விரிவாக்கத்திற்குப் பிறகு டாடா 10 லட்சம் யூனிட்டுகளுக்கு மேல் ஆண்டு உற்பத்தித் திறனை கொண்டுள்ளது. இப்போது தமிழ்நாட்டில் அமைக்கப்படவுள்ள இந்த புதிய தொழிற்சாலை பயணிகள் கார்களின் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டால் அது டாடா -வின் உற்பத்தி எண்ணிக்கையை மேலும் உயர்த்தும். கூடுதல் உற்பத்தி இந்திய கார் தயாரிப்பாளருக்கு குறைந்த காத்திருப்பு நேரத்தை பராமரிக்க உதவும். மேலும் அதிக உற்பத்தியால் டாடா நிறுவனத்துக்கு அதிக சந்தைப் பங்கைப் பெறவும், ஹூண்டாய் நிறுவனத்தை போட்டியில் முந்தவும் வசதியாக இருக்கும்.