Tata Nexon EV ஃபேஸ்லிஃப்ட் லாங் ரேஞ்ச் Vs Tata Nexon EV (பழையது): ரியல் வேர்ல்டு செயல்திறன் ஒப்பீடு
published on மார்ச் 15, 2024 09:10 pm by shreyash for டாடா நெக்ஸன் இவி
- 38 Views
- ஒரு கருத்தை எழுதுக
டாடா நெக்ஸான் EV-யின் புதிய லாங் ரேஞ்ச் வேரியன்ட் அதிக பவரை கொண்டுள்ளது. இருப்பினும் பழைய நெக்ஸானுடன் ஒப்பிடுகையில் இது சற்று குறைவான டார்க்கை கொடுக்கின்றது.
டாடா நெக்ஸான் EV ஆனது 2020 -ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகமானது. மேலும் இது 2023 -இல் கணிசமான அப்டேட்டுகளையும் பெற்றது. முன்பு இரண்டு பேட்டரி பேக்குகளுடன் பிரைம் மற்றும் மேக்ஸ் (லாங்கர் ரேஞ்சை வழங்குகிறது) என்ற இரண்டு வெர்ஷன்களில் கிடைத்தது, ஆனால் இனி அவ்வாறு கிடைக்காது. டாடா எலக்ட்ரிக் எஸ்யூவி இப்போது ஒரே நெக்ஸானின் கீழ் உள்ள EV மாடலில் MR (மிடில் ரேஞ்ச்) மற்றும் LR (லாங் ரேஞ்ச்) என்ற இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கின்றது.
சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்ட நெக்ஸான் EV -யின் லோங் ரேஞ்ச் வேரியன்ட்டின் (LR) செயல்திறனை தற்போது உள்ள நிலைமைகளின் படி சோதிக்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. முதல் வெர்ஷனுடன் ஒப்பிடும் போது நெக்ஸான் EV ஃபேஸ்லிஃப்ட்டின் செயல்திறன் எவ்வாறு உள்ளது என்பதை பார்ப்போம்.
நாங்கள் சோதித்த டாடா நெக்ஸான் EV-களின் செயல்திறன் முடிவுகளை ஆராய்வதற்கு முன் கீழே உள்ள அட்டவணையில் விவரிக்கப்பட்டுள்ள அவற்றின் பேட்டரி பேக் மற்றும் மோட்டார் விவரங்கள் இங்கே:
பவர்டிரெயின் ஆப்ஷன்கள்
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
பழைய EV நெக்ஸானானது 15 PS குறைவான பவரை கொண்டிருந்தாலும் அதன் தற்போதைய வெர்ஷனை விட 30 Nm அதிக டார்க்கை வழங்குகிறது. இதற்கிடையில் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட நெக்ஸான் EV-யின் பெரிய பேட்டரி பேக் வேரியன்ட் கூடுதலாக 153 கிமீ ரேஞ்சை வழங்கும் என டாடா கிளைம் செய்கிறது.
மேலும் பார்க்க: புதிய Tata Nexon Dark: டிசைன் 5 படங்களில் விளக்கப்பட்டுள்ளது
ஆக்சலரேஷன் டெஸ்ட்
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
அனைத்து ஆக்சலரேஷன் சோதனைகளிலும் நெக்ஸான் EV ஃபேஸ்லிஃப்ட் LR பழைய நெக்ஸான் EV -யை விட வேகமாக இருந்தாலும் வித்தியாசம் குறிப்பிடத்தக்கதாக இல்லை. 0-100 கிமீ/மணி ஸ்பிரிண்டில் நெக்ஸான் EV ஃபேஸ்லிஃப்ட் 0.8 வினாடிகள் மட்டுமே வேகமாக இருக்கின்றது. மேலும் இது கால் மைலுக்கு மேல் பழைய நெக்ஸானை விட 1 வினாடி மட்டுமே வேகமாக இருக்கின்றது.
மணிக்கு 20 முதல் 80 கிமீ/மணி வேகத்தில் செல்லும் போது அவற்றின் நேர வித்தியாசம் என்பது மிகக் குறைவாகவே இருக்கும்.
பிரேக்கிங் டெஸ்ட்
|
|
|
|
|
|
|
|
|
100 கிமீ வேகத்தில் பிரேக்கிங் செய்யும் போது ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட நெக்ஸான் EV பழைய நெக்ஸான் EVயை விட 1.73 மீட்டர் குறைவாக பயணிக்கிறது. இதேபோல் 80 கிமீ வேகத்தில் பிரேக்கிங் செய்யும் போது நிறுத்த தூரத்தில் உள்ள வேறுபாடு மேலும் 1 மீட்டராக குறைக்கப்படுகிறது. நெக்ஸான் EV LR ஃபேஸ்லிஃப்ட்டில் ஆல்-வீல் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன அதேசமயம் பழைய நெக்ஸான் முன் சக்கரங்களில் மட்டுமே டிஸ்க் பிரேக்குகளைக் கொண்டிருந்தது. நெக்ஸானின் இரண்டு வெர்ஷன்களிலும் ஒரே வகையான டயர்கள் (215/60 R16) தான் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பார்க்க: Tata Punch EV Empowered Plus S Long Range மற்றும் Mahindra XUV400 EC Pro: எந்த EV -யை வாங்குவது சரியானதாக இருக்கும்?
முக்கிய விவரங்கள்:
மொத்தத்தில் டாடா கடந்த சில ஆண்டுகளாக நெக்ஸான் EV-யின் மெக்கானிக்கல் அம்சங்கள் மற்றும் காஸ்மெடிக் மற்றும் வசதி ஆகிய இரண்டிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்துள்ளது என்பது தெளிவாகிறது. நெக்ஸான் EV ஃபேஸ்லிஃப்ட் மற்றும் அதன் முன்னோடிகளுக்கு இடையேயான செயல்திறனில் சிறிய வித்தியாசம் இருந்தபோதிலும் வெகுஜன சந்தையில் EV -களில் ஒவ்வொரு முன்னேற்றமும் கடின முயற்சிக்கு கிடைத்த பலனாகும். இதனால் இந்தியாவில் டாடா முன்னணி எலக்ட்ரிக் கார் பிராண்டாக இருப்பதில் ஆச்சரியமில்லை.
பொறுப்பு துறப்பு: டிரைவிங் நிலைமைகள், பேட்டரியின் ஆரோக்கியம், வெப்பநிலை மற்றும் கிளைமேட் போன்ற காரணிகளின் அடிப்படையில் EV -யின் செயல்திறனில் மாற்றம் இருக்கலாம்.
விலை ஒப்பீடு மற்றும் போட்டியாளர்கள்
|
|
Rs 14.49 lakh to Rs 17.50 lakh (last recorded) |
Rs 16.99 lakh to Rs 19.49 lakh |
விலை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் -க்கானவை
நெக்ஸான் EV அறிமுகப்படுத்தப்பட்ட முதல் வருடத்தில் அதற்கு நேரடி போட்டியாளர்கள் என்று எந்த கார்களும் இல்லை. இருப்பினும் இது தற்போது மஹிந்திரா XUV400 EV உடன் போட்டியிடுகிறது. இது MG ZS EV மற்றும் ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் ஆகியவற்றுக்கு குறைந்த விலையில் ஒரு மாற்றாக உள்ளது. கூடுதலாக இது டாடா பன்ச் EV உடன் ஒப்பிடும்போது அதிக இடவசதி கொண்ட ஆப்ஷனாக உள்ளது.
மேலும் படிக்க: டாடா நெக்ஸான் EV ஆட்டோமேட்டிக்