Tata Punch EV Empowered Plus S Long Range மற்றும் Mahindra XUV400 EC Pro: எந்த EV -யை வாங்குவது சரியானதாக இருக்கும்?
modified on மார்ச் 12, 2024 07:43 pm by rohit for டாடா பன்ச் EV
- 27 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஒரே விலையில் ஃபுல்லி லோடட் எலக்ட்ரிக் மைக்ரோ எஸ்யூவியை வாங்கலாம். அல்லது அதிக செயல்திறன் கொண்ட சற்றே பெரிய எலக்ட்ரிக் எஸ்யூவியின் என்ட்ரி லெவல் வேரியன்ட்களில் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்திய EV சந்தையானது பெரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளது. வெவ்வேறு விலை பிரிவுகளில் நிறைய எலக்ட்ரிக் கார்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இன்று விற்பனைக்கு வரும் எலக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் பெரும்பாலான மாடல்களின் விலை வெவ்வேறு பிரிவுகளில் இருந்தாலும் ஒன்றுடன் ஒன்று சேருவது இயல்பானது. இந்தக் கட்டுரையில் டாப்-ஸ்பெக்கின் டாடா பன்ச் EV எம்பவர்டு பிளஸ் எஸ் லாங் ரேஞ்ச் மற்றும் என்ட்ரி லெவல் மஹிந்திரா XUV400 EC புரோ ஆகிய இரண்டு கார்களையும் ஒப்பிட்டு பார்ப்போம்.
கார்களின் விலை ?
டாடா பன்ச் EV எம்பவர்டு பிளஸ் S லாங் ரேஞ்ச் |
மஹிந்திரா XUV400 EC புரோ |
ரூ.15.49 லட்சம் |
ரூ.15.49 லட்சம் |
அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் (பான் -இந்தியா) -க்கான விலை ஆகும்
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள டாடா பன்ச் EV எம்பவர்டு பிளஸ் S லாங் ரேஞ்ச் வேரியன்ட் காரின் விலையானது ரூ. 50000 விலையுள்ள கூடுதல் AC ஃபாஸ்ட் சார்ஜர் யூனிட்டுடன் கிடைக்கும். மறுபுறம் மஹிந்திரா XUV400 சமீபத்தில் அதிக வசதிகளுடன் புதிய ‘புரோ’ வேரியன்ட்டை பெற்றுள்ளது. அதே நேரத்தில் சீரிஸ் முழுவதும் ரூ.50000 குறைவான விலையில் கிடைக்கிறது.
அளவுகள் ஒப்பீடு
விவரங்கள் |
டாடா பன்ச் EV எம்பவர்டு பிளஸ் S லாங் ரேஞ்ச் |
மஹிந்திரா XUV400 EC புரோ |
நீளம் |
3857 மி.மீ |
4200 மி.மீ |
அகலம் |
1742 மி.மீ |
1821 மி.மீ |
உயரம் |
1633 மி.மீ |
1634 மி.மீ |
வீல்பேஸ் |
2445 மி.மீ |
2600 மி.மீ |
கிரவுண்ட் கிளியரன்ஸ் |
190 மி.மீ |
விவரம் கிடைக்கவில்லை |
பூட் ஸ்பேஸ் |
366 லிட்டர் |
378 லிட்டர் |
-
அளவுகளைப் பொறுத்தவரையில் மஹிந்திரா XUV400 அனைத்து பன்ச் EV -யை விட மிகப் பெரிய காராகும்.
-
பன்ச் EV மற்றும் XUV400 ஆகிய இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான உயரத்தை கொண்டிருக்கின்றன.
-
XUV400 பெரிய லக்கேஜ் பகுதியுடன் வருகிறது இது உங்கள் வார இறுதி பயணங்களுக்கு இன்னும் இரண்டு பைகளை எடுத்துச் செல்ல உதவுகிறது. இருப்பினும் பன்ச் EV கூடுதலாக முன்பக்கத்தில் ஃபிரன்க் ஆப்ஷனை கொண்டுள்ளது.
பவர்டிரெய்ன் விவரம்
விவரங்கள் |
டாடா பன்ச் EV எம்பவர்டு பிளஸ் S லாங் ரேஞ்ச் |
மஹிந்திரா XUV400 EC புரோ |
பேட்டரி பேக் |
35 kWh |
34.5 kWh |
எலக்ட்ரிக் மோட்டார் எண்ணிக்கை |
1 |
1 |
பவர் |
122 பிஎஸ் |
150 PS |
டார்க் |
140 Nm |
310 Nm |
கிளைம்டு ரேஞ்ச் |
421 கி.மீ |
375 கி.மீ |
-
இந்த விலையில் இரண்டு EV களும் ஒரே மாதிரியான திறன் கொண்ட பேட்டரி பேக்குகளை கொண்டுள்ளன. இருப்பினும் இது சற்று பெரிய பேட்டரி கொண்டது பன்ச் EV ஆகும். இது கூடுதலாக 50 கிமீ ரேஞ்ச் வரை செல்லக்கூடியதாக உள்ளது.
-
உங்கள் EV -யில் இருந்து அதிக பெர்ஃபாமன்ஸை நீங்கள் விரும்பினால் அது மஹிந்திரா XUV400 ஆகும். இருமடங்கு டார்க் உடன் உங்கள் தேர்வாக இருக்கலாம்.
மேலும் படிக்க: 2024 பிப்ரவரி மாதத்தில் அதிகம் விற்பனையாகியுள்ள முதல் 10 கார்களின் விவரங்கள் இங்கே
சார்ஜிங்
சார்ஜர் |
சார்ஜிங் நேரம் |
|
டாடா பன்ச் EV எம்பவர்டு பிளஸ் S லாங் ரேஞ்ச் |
மஹிந்திரா XUV400 EC புரோ |
|
3.3 kW AC சார்ஜர் (10-100%) |
13.5 மணி நேரம் |
13.5 மணி நேரம் |
7.2kW AC ஃபாஸ்ட் சார்ஜர் (10-100%) |
5 மணிநேரம் |
6.5 மணி நேரம் |
50 kW DC ஃபாஸ்ட் சார்ஜர் |
56 நிமிடங்கள் |
50 நிமிடங்கள் |
-
டாடா பன்ச் EV எம்பவர்டு பிளஸ் S லாங் ரேஞ்ச் மற்றும் XUV400 EC புரோ ஆகிய இரண்டும் 3.3 kW AC சார்ஜரை பயன்படுத்தி சார்ஜ் செய்ய ஒரே நேரத்தை எடுத்துக் கொள்கின்றன.
-
இருப்பினும் டாடா EV மஹிந்திரா XUV400 ஐ விட AC ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தி விரைவாக சார்ஜ் செய்து கொள்ளலாம்.
-
50 kW DC ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தும் போது XUV400 -ன் பேட்டரியை பன்ச் EV -யை விட விரைவாக சார்ஜ் செய்ய முடியும்.
காரில் உள்ள வசதிகள்
வசதிகள் |
டாடா பன்ச் EV எம்பவர்டு பிளஸ் S லாங் ரேஞ்ச் |
மஹிந்திரா XUV400 EC புரோ |
வெளிப்புறம் |
|
|
உட்புறம் |
|
|
ஆறுதல் மற்றும் வசதி |
|
|
இன்ஃபோடெயின்மென்ட் |
|
|
பாதுகாப்பு |
|
|
-
ஒரே விலையில் டாடா பன்ச் EV எம்பர்டு பிளஸ் S லாங் ரேஞ்ச் ஆனது XUV400 EC புரோவை விட மிகச் சிறந்த வசதிகள் கொண்டதக இருக்கிறது.
-
ஃபுல்லி லோடட் பன்ச் EV ஆனது வென்டிலேட்டட் முன் சீட்கள், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் டூயல் 10.25-இன்ச் டிஸ்ப்ளேக்கள் (ஒன்று இன்ஸ்ட்ரூமென்டேஷன்க்கு மற்றொன்று இன்ஃபோடெயின்மென்ட்டுக்கு) மற்றும் லெதரெட் அப்ஹோல்ஸ்டரி போன்ற பிரீமியம் வசதிகளைப் பெறுகிறது.
-
மறுபுறம் XUV400 EC Pro ஆனது புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் டூயல்-ஜோன் ஏசி கீலெஸ் என்ட்ரி மற்றும் நான்கு பவர் விண்டோக்கள் போன்ற சில வசதிகள் மற்றும் வசதிகளுடன் மட்டுமே நிரம்பியுள்ளது.
-
பாதுகாப்பைப் பொறுத்தவரை 360 டிகிரி கேமரா, 6 ஏர்பேக்குகள் மற்றும் ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் போன்ற தொழில்நுட்பத்துடன் பன்ச் EV சற்று முன்னிலையில் உள்ளது.
-
மஹிந்திரா XUV400 EC Pro -ன் பாதுகாப்பு வசதிகளில் டூயல் முன் ஏர்பேக்குகள் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்ட சில அடிப்படை வசதிகளுடன் வழங்குகிறது.
தீர்ப்பு
பன்ச் EV எம்பவர்டு பிளஸ் S லாங் ரேஞ்ச் கொடுக்கும் பணத்துக்கு அதிக மதிப்பை வழங்குகிறது என்பது தெளிவாகிறது. பேஸ்-ஸ்பெக் XUV400 ஐ விட அதிக ரேஞ்ச் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷன் மற்றும் பிரீமியம் வசதிகளின் பெரிய பட்டியலுடன் - இது ஒரு சிறந்த தொகுப்பாக அமைகிறது.
இருப்பினும் அதிக சாலை தோற்றம் மற்றும் உண்மையான EV டிரைவ் அனுபவத்தை நீங்கள் விரும்பினால் XUV400 EC புரோ உங்களுக்கு மிகவும் பொருத்தமானது. அதன் பெரிய அளவுகள் அதிக விசாலமான கேபினுக்கு கொடுக்கும். இது ஒரு குடும்பத்துக்கு ஏற்ற பொருத்தமாக இருக்கும். வாரயிறுதியில் குடும்பப் பயணத்திற்கு இரண்டு கூடுதல் சாஃப்ட் பேக்குகளை பேக் செய்ய உதவும் பூட் ஸ்பேஸ் -க்கு வரும்போது XUV400 முன்னிலையில் இருக்கும்.
எனவே இந்த இரண்டு எலக்ட்ரிக் எஸ்யூவிக -ளில் எதை நீங்கள் தேர்வு செய்வீர்கள் ? அதற்கான கார்ணம் என்ன ? கமெண்ட் பகுதியில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
மேலும் படிக்க: பன்ச் EV ஆட்டோமெட்டிக்