பனோரமிக் சன்ரூஃப் உடன் சோதனை செய்யப்படும் போது படம் பிடிக்கப்பட்டுள்ள Tata Curvv கார்
published on ஜூன் 26, 2024 05:45 pm by shreyash for டாடா கர்வ்
- 29 Views
- ஒரு கருத்தை எழுதுக
டாடா கர்வ்வ் ஒரு எஸ்யூவி-கூபே காராக இருக்கும். மேலும் காம்பாக்ட் எஸ்யூவி பிரிவில் போட்டியிடும்.
-
கனெக்டட் LED DRL-கள், கனெக்டட் LED டெயில் லைட்டுகள் மற்றும் கூபே பாணியிலான ரூஃப்லைன் ஆகியவற்றை வெளிப்புறத்தில் பார்க்க முடிகிறது.
-
125 PS 1.2 லிட்டர் T-GDi (டர்போ-பெட்ரோல்) மற்றும் 115 PS 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் வர வாய்ப்புள்ளது.
-
பனோரமிக் சன்ரூஃப் தவிர, இது 12.3-இன்ச் டச் ஸ்கிரீன் செட்டப், 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் வென்டிலேட்டட் முன் சீட்களையும் பெறலாம்.
-
பாதுகாப்புக்காக முழுமையான அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்களை (ADAS) பெறக்கூடும்.
-
2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இது வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ. 10.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கலாம்.
இந்தியாவின் காம்பாக்ட் எஸ்யூவி பிரிவில் அதன் கூபே-பாணியிலான ஸ்டைலுடன் டாடா கர்வ்வ் 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் நுழைய உள்ளது. இது ஒரு வருடத்திற்கும் மேலாக தயாரிப்பில் உள்ளது மற்றும் பல முறை படம் பிடிக்கப்பட்டுள்ளது மேலும் இதன் மூலமாக பல புதிய விவரங்கள் தெரிய வருகின்றன. சமீபத்தில் கர்வ்வ் மீண்டும் சோதனை செய்யப்படும் போது படம் பிடிக்கப்பட்டுள்ளது. இந்த படங்கள் மூலம் கார் பெரும்பாலான இந்திய வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு அம்சத்துடன் வரலாம் என்பது உறுதியாகியுள்ளது.
பனோரமிக் சன்ரூஃப் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
சமீபத்திய ஸ்பை ஷாட்கள் கர்வ்வ் ஒரு பனோரமிக் சன்ரூஃப் உடன் வரும் என்பதை உறுதிப்படுத்துகின்றன. முற்றிலுமாக வெளிப்புறம் மறைக்கப்பட்டிருந்தாலும் கூட கூரையில் இருக்கும் கிளாச் பேனல் அதன் அளவைப் பற்றிய ஒரு யோசனையை அளிக்கிறது.
எதிர்பார்க்கப்படும் பவர்டிரெயின்கள்
டாடா தனது புதிய 1.2-லிட்டர் T-GDi (டர்போ-பெட்ரோல்) இன்ஜினை டாடா கர்வ்வ் உடன் அறிமுகம் செய்யும். அதே நேரத்தில் டாடா நெக்ஸான் -லிருந்து டீசல் பவர்டிரெய்னையும் கொடுக்கும்.
இன்ஜின் |
1.2-லிட்டர் T-GDi (டர்போ-பெட்ரோல்) |
1.5 லிட்டர் டீசல் |
பவர் |
125 PS |
115 PS |
டார்க் |
225 Nm |
260 Nm |
டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீடு MT, 7-ஸ்பீடு DCT* (எதிர்பார்க்கப்படுகிறது) |
6-ஸ்பீடு MT |
*DCT- டூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்
டாடா கர்வ்வ் -ன் வடிவமைப்பு பற்றிய கூடுதல் விவரங்கள்
டாடா கர்வ்வ் ஆனது ஃபேஸ்லிப்டட் டாடா நெக்ஸான், டாடா ஹாரியர், மற்றும் டாடா சஃபாரி போன்ற கார்களில் உள்ளதை போன்ற வடிவமைப்பில் மாற்றங்களை பெறும் என்பதை சோதனை கார்கள் காட்டுகின்றன. முன்பக்கத்தில், இது கனெக்டட் LED DRL ஸ்ட்ரிப் உடன் இருக்கும் அதே சமயம் ஹெட்லைட்கள் முன் பம்பரில் பொருத்தப்படும். பின்புறத்தில் கனெக்டட் LED டெயில் லைட்ஸ் இடம் பெறும். கர்வ்வ் ஒரு கூபே பாணி ரூஃபையும் கொண்டிருக்கும். இது சிட்ரோன் பசால்ட் காருக்கு நேரடி போட்டியாளராக இருக்கும்.
இன்ட்டீரியர் & எதிர்பார்க்கப்படும் வசதிகள்
முந்தைய ஸ்பை ஷாட்டின் அடிப்படையில் பார்க்கும் போதுடாடா நெக்ஸானில் காணப்படுவது போல் டாடா கர்வ்வ் டேஷ்போர்டு இருக்கும். இருப்பினும் ஸ்டீயரிங் 4-ஸ்போக் யூனிட்டாக கொடுக்கப்படும் மேலும் இது ஒரு ஒளிரும் ‘டாடா’ லோகோவையும் கொண்டிருக்கும்.
12.3-இன்ச் டச் ஸ்கிரீன்10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் ஆகியவை அடங்கும். பாதுகாப்பைப் பொறுத்தவரையில் இது 6 ஏர்பேக்குகள், பிளைண்ட் ஸ்பாட் டிடெக்ஷன் உடன் கூடிய 360 டிகிரி கேமரா, முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC) ஆகியவற்றைப் பெறலாம். லேன் கீப் அசிஸ்ட், அட்டானமஸ் பிரேக்கிங் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் உள்ளிட்ட லெவல் 2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்களுடன் (ADAS) கர்வ்வ் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் (எக்ஸ்-ஷோரூம்) டாடா கர்வ்வ் விற்பனைக்கு வரும். விலை ரூ.10.50 லட்சத்திலிருந்து தொடங்கும் என எதிர்பார்க்கலாம். இது சிட்ரோன் பசால்ட்டுக்கு நேரடி போட்டியாக இருக்கும், அதே சமயம் இது. ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், ஃபோக்ஸ்வேகன் டைகுன், மற்றும் ஸ்கோடா குஷாக் போன்றவற்றையும் போட்டியாளராக எதிர்கொள்ளும்.
டாடா கர்வ்வ் பற்றி மேலும் படிக்க, கார்தேக்கோ வாட்ஸ்அப் சேனலை பின்தொடரவும்
0 out of 0 found this helpful