Tata Curvv மற்றும் Tata Curvv EV கார்களின் இன்டீரியர் டிஸைன் விவரங்களோடு டீஸர் வெளியிடப்பட்டுள்ளது
published on ஜூலை 24, 2024 05:25 pm by rohit for டாடா கர்வ்
- 42 Views
- ஒரு கருத்தை எழுதுக
டீஸர் ஓவியங்கள் நெக்ஸான் போன்ற டாஷ்போர்டு செட்டப் இருப்பதை காட்டுகின்றன. இதில் ஃப்ரீ-ஃப்ளோட்டிங் டச்ஸ்கிரீன் மற்றும் டச்-எனேபில்டு கிளைமேட் கன்ட்ரோல் பேனல் ஆகியவை அடங்கும்.
-
ஹூண்டாய் கிரெட்டா மற்றும் ஸ்கோடா குஷாக் போன்ற எஸ்யூவி -களுக்கு டாடாவின் போட்டியாளராக கர்வ்வ் கார் இருக்கும்.
-
இது ICE மற்றும் EV ஆகிய இரண்டு பதிப்புகளிலும் வழங்கப்படும். EV மாடல் ஆகஸ்ட் மாதம் வரவுள்ளது.
-
டிஜிட்டல் டிரைவஸ் டிஸ்ப்ளே மற்றும் கியர் ஷிஃப்டருடன் நெக்ஸான் போன்ற டாஷ்போர்டு உள்ளதை டீசரில் கவனிக்க முடிகிறது,
-
பனோரமிக் சன்ரூஃப், 360 டிகிரி கேமரா மற்றும் ADAS ஆகிய வசதிகள் கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
டாடா பெட்ரோல் மற்றும் டீசல் பவர் ட்ரெய்ன்களுடன் கர்வ்வ் ICE -யை வழங்க வாய்ப்புள்ளது.
-
2024 செப்டம்பர் மாதம் இந்த காரின் வெளியீடு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது; விலை ரூ. 10.5 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கலாம்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அடுத்தபடியாக அறிமுகம் செய்யவுள்ள புதிய கார் கர்வ்வ் ஆகும். இது இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின் (ICE) மற்றும் EV என இரண்டு வெர்ஷன்களிலும் வழங்கப்பட உள்ளது. அதே நேரத்தில் டாடா கர்வ்வ் EV ஆகஸ்ட் 7 முதல் விற்பனைக்கு வரும். டாடா கர்வ்வ் ICE அதற்கடுத்த மாதத்தில் விற்பனைக்கு வரும். சமீபத்தில் இரண்டு மாடல்களின் வெளிப்புற வடிவமைப்பையும் டாடா அறிமுகம் செய்தது. இப்போது டிஸைன் ஸ்கெட்ச் மூலமாக கேபின் எப்படி இருக்கும் என்பதைப் பற்றிய அறிமுகத்தை கொடுத்துள்ளது.
காரில் கவனிக்கப்பட்ட விவரங்கள்
சமீபத்திய டிஸைன் ஸ்கெட்ச்களில் கர்வ்வ் மற்றும் கர்வ்வ் EV ஆகியவை ஒரு நெக்ஸான்- டாஷ்போர்டு செட்டப் போன்று இருப்பது தெரிய வருகிறது. ஃபிரீ-புளோட்டிங் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட் (ஹாரியர் காரில் உள்ள அதே 12.3-இன்ச் டிஸ்ப்ளே), நேர்த்தியான கிடைமட்டமாக வைக்கப்பட்டுள்ள ஏசி வென்ட்கள் மற்றும் அதே டச்-எனேபில்டு கிளைமேட்க் கன்ட்ரோல் பேனல் ஆகியவை நெக்ஸான் காரில் இருப்பதை போன்றே இருக்கின்றன. இன்டீரியர் டிசைன் ஸ்கெட்ச் ஒரு டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே (10.25-இன்ச் யூனிட் ஆக இருக்கலாம்) மற்றும் அதே கியர் ஷிஃப்டர் கொடுக்கப்பட்டிருப்பதையும் காட்டுகிறது. இவை இரண்டும் நெக்ஸானிலிருந்து பெறப்பட்டவை.
டீஸர் படங்கள் போர்டில் 2-ஸ்போக் ஸ்டீயரிங் வீலையும் காட்டுகின்றன. உட்புறத்தின் முந்தைய பிரத்தியேக ஸ்பை ஷாட் போட்டோக்களில் காணப்படுவது போல் ஹாரியர்-சஃபாரி கார்களில் இருப்பதை போன்றே இது 4-ஸ்போக் யூனிட்டுடன் வரும் என்று தெரிகிறது. 2024 பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் அறிமுகமான கர்வ்வ் ICE காரில் 4-ஸ்போக் ஸ்டீயரிங் வீலை டாடா மோட்டார்ஸ் வழங்கியது என்பது எங்கள் நம்பிக்கைக்கு மேலும் வலு சேர்க்கிறது.
மேலும் பார்க்க: பாருங்கள்: உங்கள் காரில் ஏர்பேக்குகள் எங்கே வைக்கப்பட்டுள்ளன?
எதிர்பார்க்கப்படும் பிற வசதிகள்
டச் ஸ்கிரீன் மற்றும் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே தவிர டாடா கர்வ்வ்வை பனோரமிக் சன்ரூஃப், வென்டிலேட்டட் முன் சீட்கள், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் மற்றும் டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக கொடுக்கப்படலாம்), 360 டிகிரி கேமரா, முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் சில அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) -கள் ஆகியவை அடங்கும்.
என்ன இன்ஜின் ஆப்ஷன்கள் கிடைக்கும் ?
டாடா பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களில் கர்வ்வ் ICE ஐ வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றின் தொழில்நுட்ப விவரங்கள் இங்கே:
விவரங்கள் |
1.2 லிட்டர் TGDi டர்போ-பெட்ரோல் |
1.5 லிட்டர் டீசல் |
பவர் |
125 PS |
115 PS |
டார்க் |
225 Nm |
260 Nm |
டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீடு MT, 7-ஸ்பீடு DCT* |
6-ஸ்பீடு MT |
*DCT- டூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்
கர்வ்வ் காரின் EV பதிப்பு இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 500 கி.மீ வரை ரேஞ்ச் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்வ்வ் EV -க்கான பேட்டரி பேக் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் விவரங்களை டாடா இன்னும் வெளியிடவில்லை.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
டாடா கர்வ்வ் ICE -யின் ஆரம்ப விலை ரூ.10.5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இது சிட்ரோன் பசால்ட் உடன் நேரடியாக போட்டியிடும். அதே நேரத்தில் மாருதி கிராண்ட் விட்டாரா, ஹூண்டாய் கிரெட்டா, ஹோண்டா எலிவேட், எம்ஜி ஆஸ்டர், ஸ்கோடா குஷாக், மற்றும் சிட்ரோன் C3 ஏர்கிராஸ் போன்ற சிறிய எஸ்யூவி -களுக்கு ஒரு ஸ்டைலான மாற்றாக இருக்கும். மறுபுறம் கர்வ்வ் EV -யின் ஆரம்ப விலை ரூ.20 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது MG ZS EV மற்றும் வரவிருக்கும் ஹூண்டாய் கிரெட்டா EV மற்றும் மாருதி eVX உடன் போட்டியிடும்.
கார்கள் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
0 out of 0 found this helpful