முதல் முறையாக கேமராவில் சிக்கிய Tata Curvv காரின் இன்டீரியர் விவரங்கள்
published on மே 21, 2024 07:08 pm by shreyash for டாடா கர்வ்
- 23 Views
- ஒரு கருத்தை எழுதுக
டாடா நெக்ஸானில் உள்ளதை போன்ற டேஷ்போர்டு அமைப்பு டாடா கர்வ்வ் காரிலும் இருக்கும். ஆனால் இது வேறுபட்ட டூயல்-டோன் கேபின் தீம் கொடுக்கப்படும்.
-
டாடா கர்வ்வ் காரில் 12.3-இன்ச் டச் ஸ்கிரீன் செட்டப், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் டிரைவருக்கான 10.25-இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே ஆகியவற்றுடன் வரலாம்.
-
பாதுகாப்புக்காக அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) வசதிகளின் முழு தொகுப்பும் கொடுக்கப்படலாம்.
-
125 PS 1.2-லிட்டர் T-GDi (டர்போ-பெட்ரோல்) மற்றும் 115 PS 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களை பெறலாம்.
-
2024 -ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இது விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதன் விலை ரூ. 11 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கலாம்.
2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்தியாவில் காம்பாக்ட் எஸ்யூவி சந்தையில் டாடா கர்வ்வ் நுழைய தயாராக உள்ளது. ஏற்கனவே பலமுறை சோதனை செய்யப்பட்டு வரும் தயாரிப்புக்கு தயாராக கார்களை பார்த்துள்ளோம். இப்போது முதன் முறையாக கர்வ்வ் காரின் உட்புறத்தின் தெளிவான ஸ்பை ஷாட்கள் எங்களுக்கு கிடைத்துள்ளன.
நெக்ஸான் போன்ற டாஷ்போர்டு
சமீபத்திய ஸ்பை ஷாட்களின் அடிப்படையில் பார்க்கையில் டாடா கர்வ்வ் காரில் உள்ள டேஷ்போர்டு டாடா நெக்ஸான் காரில் உள்ளதை போலவே இருக்கின்றது. ஆனால் கேபின் தீம் இங்கே வித்தியாசமாகத் தெரிகிறது. மேலும் நேர்த்தியான சென்ட்ரல் ஏசி வென்ட்களுக்கு மேலே அமைந்துள்ள ஃப்ரீ-ஃப்ளோட்டிங் டச்ஸ்கிரீனுடன் இதே போன்ற செட்டப்பை பெறுகிறது. இருப்பினும் ஸ்டீயரிங் வீல் என்பது 4-ஸ்போக் யூனிட் ஆகும். இது ஒளிரும் டாடா லோகோவுடன் புதியது, ஹாரியர் மற்றும் சஃபாரி போன்ற ஃபிளாக்ஷிப் எஸ்யூவி மாடல்களில் இருந்து கடன் வாங்கப்பட்டது. நெக்ஸானின் அதே டிரைவ் மோட் செலக்டர் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் ஷிஃப்டருடன் கர்வ்வ் வரும்.
எதிர்பார்க்கப்படும் வசதிகள்
டாடா கர்வ்வ் 12.3 இன்ச் டச் ஸ்கிரீன், 10.25 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் போன்ற வசதிகளுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், பிளைண்ட் ஸ்பாட் டிடெக்ஷன் உடன் கூடிய 360 டிகிரி கேமரா, முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC) ஆகியவை அடங்கும். லேன் கீப் அசிஸ்ட், அட்டானமஸ் பிரேக்கிங் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) -களின் முழு தொகுப்புடன் இது வரலாம்.
பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
டடா கர்வ்வ் காரில் புதிய 1.2-லிட்டர் T-GDi (டர்போ-பெட்ரோல்) இன்ஜினை அறிமுகமாகவுள்ளது. அதே நேரத்தில் டாடா நெக்ஸானிலிருந்து டீசல் பவர்டிரெய்னையும் இது கடன் வாங்குகிறது. அவற்றின் விவரங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன:
இன்ஜின் |
1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் |
1.5 லிட்டர் டீசல் |
பவர் |
125 PS |
115 PS |
டார்க் |
225 Nm |
260 Nm |
டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீடு MT, 7-ஸ்பீடு DCT* (எதிர்பார்க்கப்படுகிறது) |
6-ஸ்பீடு MT |
*DCT- டூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்
இருப்பினும் டாடாவின் Gen2 பிளாட்ஃபார்மை அடிப்படையாக கொண்ட கர்வ்வ் காரின் ஆல்-எலக்ட்ரிக் எடிஷன், மின்சார கார்களில் முதலில் வெளியிடப்படும், இது 500 கி.மீ வரை கிளைம் செய்யப்பட்ட ரேஞ்சை கொண்டிருக்கலாம். எலக்ட்ரிக் பவர்டிரெய்ன் பற்றிய வேறு எந்த விவரமும் இதுவரை தெரியவில்லை.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
டாடா கர்வ்வ் இந்தியாவில் 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ. 11 லட்சத்தில் இருந்து தொடங்கலாம் (எக்ஸ்-ஷோரூம்). க்கு இது சிட்ரோன் பாசால்ட் விஷன் -காருக்கு நேரடி போட்டியாக இருக்கும். மேலும் ஹூண்டாய் கிரெட்டா கியா செல்டோஸ், ஹோண்டா எலிவேட் மாருதி கிராண்ட் விட்டாரா, ஸ்கோடா குஷாக், டொயோட்டா ஹைரைடர் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் போன்ற சிறிய எஸ்யூவி -களுக்கு போன்ற ஒரு கூபே மாற்றாக இருக்கும்.
0 out of 0 found this helpful