• English
  • Login / Register

டீலர்ஷிப்களை வந்தடைந்தது Tata Altroz ​​Racer கார்

tata altroz racer க்காக ஜூன் 07, 2024 07:05 pm அன்று shreyash ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

  • 63 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஆல்ட்ரோஸ் ரேசர் ஆனது டாடா நெக்ஸான் காரிலிருந்து பெறப்பட்ட 120 PS 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினை பயன்படுத்துகிறது.

Tata Altroz Racer

  • ஆல்ட்ரோஸ் ரேசர் ஆனது, புதிய கிரில் மற்றும் டூயல்-டிப் எக்ஸாஸ்ட் போன்ற ஸ்போர்ட்டியர் டிசைன் போன்றவற்றை பெறுகிறது.

  • உள்ளே இது ‘ரேசர்’ கிராபிக்ஸ் உடன் முழுக்க ஆல்  பிளாக் நிற லெதரெட் சீட் அப்ஹோல்ஸ்டரியை பெறுகிறது.

  • ஒரு பெரிய 10.25-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட், புதிய 7-இன்ச் முழு டிஜிட்டல் டிரைவர்கள் மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் ஆகியவை இந்த காரில் உள்ளன.

  • ஆல்ட்ரோஸ் ரேசர் ஆனது 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனை பெறுகிறது.

  • விலை ரூ.9.49 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது.

டாடா ஆல்ட்ரோஸ் ரேசர் காரின் விலை தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. விலை ரூ.9.49 லட்சத்திலிருந்து தொடங்குகிறது. இப்போது ஸ்போர்ட்டியர் ஹேட்ச்பேக்கின் யூனிட்கள் சில டீலர்ஷிப்களுக்கு வந்துள்ளன. 'ரேசர்' என்பது டாடா அல்ட்ரோஸின் ஸ்போர்டியர் பதிப்பாகும், இது அதிக சக்திவாய்ந்த டர்போ-பெட்ரோல் இன்ஜினை கொண்டிருப்பது மட்டுமல்லாமல் ஸ்போர்ட்டியர் டிசைன் மற்றும் கூடுதல் அம்சங்களையும் கொண்டுள்ளது. ஆல்ட்ரோஸ் ​​ரேசரின் விரைவான கண்ணோட்டம் இங்கே:

ஸ்போர்ட்டியர் வடிவமைப்பு

வழக்கமான ஆல்ட்ரோஸ் ​​உடன் ஒப்பிடுகையில் டாடா ஆல்ட்ரோஸ் ​​ரேசரின் வடிவமைப்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.என்றாலும் கூட குறிப்பிட்ட 'ரேசர்' ஸ்டைலிங் எலமென்ட்கள் அதன் ஸ்போர்ட்டி தோற்றத்தை மேம்படுத்துகின்றன. இந்த மாற்றங்களில் புதிய கிரில் மற்றும் டூயல்-டிப் எக்ஸாஸ்ட் ஆகியவையும் அடங்கும். அலாய் வீல்களின் வடிவமைப்பு மாறாமல் இருந்தாலும் அவை இப்போது பிளாக் கலரில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளன. கூடுதலாக பேனட்டில் இருந்து ரூஃப் வரை பின்புறம் வரை டூயல் வெள்ளை லைன்கள் உள்ளன.

இது முன் ஃபெண்டர்களில் ‘ரேசர்’ பேட்ஜையும், டெயில்கேட்டில் ‘ஐ-டர்போ+’ பேட்ஜையும் கொண்டுள்ளது. ஆல்ட்ரோஸ் ​​இன் இந்த ஸ்போர்ட்டியர் பதிப்பில் தனித்து தெரியும் மற்றொரு விஷயம், அதன் புதிய அட்டாமிக் ஆரஞ்ச் டூயல்-டோன் எக்ஸ்ட்டீரியர் ஷேடு ஆகும்.

மேலும் பார்க்க: இந்த ஆண்டில் Tata Altroz ​-இல் அறிமுகப்படுத்தப்பட உள்ள 5 முக்கிய வசதிகள் பற்றிய ஒரு அப்டேட் உங்களுக்காக

ஆல் பிளாக் இன்ட்டீரியர்

உள்ளே கேபின் அமைப்பில் எந்த மாற்றமும் இல்லை. இருப்பினும் இது ஹெட்ரெஸ்ட்களில் 'ரேசர்' கிராபிக்ஸ் கொண்ட வித்தியாசமான பிளாக் கால்ர் லெதரெட் சீட் அப்ஹோல்ஸ்டரியை பெறுகிறது. இது அதன் வழக்கமான பதிப்பிலிருந்து வேறுபட்ட தீம் கொண்ட ஆம்பியன்ட் லைட்ஸையும் பெறுகிறது. ஏசி வென்ட்கள் மற்றும் இருக்கைகளைச் சுற்றியுள்ள டேஷ்போர்டில் ஆரஞ்சு கலர் இன்செர்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

காரில் உள்ள புதிய விஷயங்கள்

டாடா ஆல்ட்ரோஸ் ரேசர் ஆனது வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் Apple CarPlay உடன் பெரிய 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புதிய 7-இன்ச் ஆல் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் ஹெட்அப் டிஸ்ப்ளே ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஆல்ட்ரோஸ் ​​இன் ‘ரேசர்’ பதிப்பில் 360 டிகிரி கேமரா மற்றும் 6 ஏர்பேக்குகள் ஆகியவையும் இருக்கும்.

அதிக சக்தி வாய்ந்த டர்போ-பெட்ரோல் இன்ஜின்

ஆல்ட்ரோஸ் ரேசர் டாடா நெக்ஸானிடமிருந்து பெறப்பட்ட மிகவும் சக்திவாய்ந்த 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இது 120 PS மற்றும் 170 Nm அவுட்புட்டை கொடுக்கிறது. மேலும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது. 

விலை மற்றும் போட்டியாளர்கள்

டாடா ஆல்ட்ரோஸ் ரேசரின் விலை 9.49 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்குகிறது. இது ஹூண்டாய் i20 N லைன் காருக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

பட ஆதாரம்

மேலும் படிக்க: டாடா ஆல்ட்ரோஸ் ​​ஆன் ரோடு விலை

was this article helpful ?

Write your Comment on Tata ஆல்டரோஸ் Racer

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

டிரெண்டிங் ஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience