மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Tata Altroz Racer கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, விலை ரூ.9.49 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது
published on ஜூன் 07, 2024 05:31 pm by dipan for tata altroz racer
- 28 Views
- ஒரு கருத்தை எழுதுக
டாடா ஆல்ட்ரோஸ் ரேசரை R1, R2 மற்றும் R3 ஆகிய மூன்று வேரியன்ட்களில் வழங்குகிறது.
-
ஸ்டாண்டர்டு ஆல்ட்ரோஸின் ஸ்போர்ட்டியர் வெர்ஷனாக ஆல்ட்ரோஸ் ரேசர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
-
விலை ரூ.9.49 லட்சம் முதல் ரூ.10.99 லட்சம் (அறிமுக எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) வரை உள்ளது.
-
6-ஸ்பீடு MT உடன் 120 PS மற்றும் 170 Nm அவுட்புட்டை கொடுக்கும் மிகவும் பவர்ஃபுல்லான 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினை பெறுகிறது.
-
புதிய கிரில் மற்றும் டூயல்-டிப் எக்ஸாஸ்ட் போன்ற ஸ்போர்ட்டியர் டிசைன் எலமென்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
-
10.25-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் 6 ஏர்பேக்குகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
-
பாதுகாப்புக்காக ஒரு பிளைண்ட் ஸ்பாட் மானிட்டருடன் 360 டிகிரி கேமராவை கொடுக்கப்பட்டுள்ளது.
டாடா ஆல்ட்ரோஸ் ரேசர் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இதன் விலை ரூ.9.49 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது (அறிமுக எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா). இந்த ஹேட்ச்பேக் மூன்று டிரிம் நிலைகளில் வருகிறது மற்றும் சக்திவாய்ந்த 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. வெளிப்புற வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும் இதில் கூடுதலாக சில விஷயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன, பாதுகாப்பு தொழில்நுட்பமும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
விலை
டாடா ஆல்ட்ரோஸ் ரேசர் விலை ரூ.9.49 லட்சம் முதல் ரூ.10.99 லட்சம் வரை. வேரியன்ட் வாரியான விலை விவரங்கள் இங்கே:
வேரியன்ட் |
விலை |
R1 |
ரூ.9.49 லட்சம் |
R2 |
ரூ.10.49 லட்சம் |
R3 |
ரூ.10.99 லட்சம் |
(விலை விவரங்கள் அனைத்தும் அறிமுக எக்ஸ்-ஷோரூம், பான் இந்தியாவுக்கானவை)
ஸ்போர்ட்டியரான வெளிப்புறம்
டாடா ஆல்ட்ரோஸ் ரேசர் வழக்கமான ஆல்ட்ரோஸ் வடிவமைப்பையே கொண்டுள்ளது. ஆனால் அது ஒரு ஸ்போர்ட்டி தோற்றத்தை கொடுக்கும் வகையில் சில ஸ்டைலிங் எலமென்ட்ல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த மேம்பாடுகளில் புதிய கிரில், டூயல்-டிப் எக்ஸாஸ்ட் மற்றும் பிளாக் அலாய் வீல்கள் ஆகியவை அடங்கும். டூயல் வொயிட் லைன்கள் பானெட்டில் இருந்து பின்புற ரூஃப் வரை செல்கின்றன. இதுவும் காருக்கு ஒரு ஸ்போர்ட்டி தோற்த்தை கொடுக்கிறது. இந்த காரின் முன்புற ஃபெண்டர்களில் ‘ரேசர்’ பேட்ஜ் மற்றும் டெயில்கேட்டில் ‘ஐ-டர்போ+’ பேட்ஜ் உள்ளது. ஆல்ட்ரோஸ் ரேசர் ஆனது அட்டாமிக் ஆரஞ்சு, பியூர் கிரே மற்றும் அவென்யூ ஒயிட் கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும்.
மேம்படுத்தப்பட்ட உட்புறங்கள் மற்றும் வசதிகள்
டாடா ஆல்ட்ரோஸ் ரேசரின் உட்புறம் வழக்கமான மாடலின் அதே அமைப்பைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஆனால் ஹெட்ரெஸ்ட்களில் 'ரேசர்' கிராபிக்ஸ் கொண்ட பிளாக் லெதரெட் இருக்கைகள் போன்றவை புதிதாக கொடுக்கப்பட்டுள்ளன. இது தீம் சார்ந்த ஆம்பியன்ட் லைட்ஸ் மற்றும் ஏசி வென்ட்களை சுற்றியுள்ள டேஷ்போர்டில் ஆரஞ்சு கலர் ஆக்ஸன்ட்கள் மற்றும் இருக்கைகளில் கான்ட்ராஸ்ட் ஆரஞ்சு ஸ்டிச் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஆல்ட்ரோஸ் ரேசர் ஆனது, வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே உடன் பெரிய 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் செட்டப் உடன் வருகிறது, ஒரு புதிய 7-இன்ச் ஆல் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள். இது 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக) மற்றும் ஒரு பிளைண்ட்-ஸ்பாட் மானிட்டருடன் 360 டிகிரி கேமராவையும் கொண்டுள்ளது.
அதிக ஆற்றல் வாய்ந்த இயந்திரம்
டாடா நெக்ஸான் காரில் உள்ள டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆல்ட்ரோஸ் ரேசரில் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் விவரங்கள்:
விவரங்கள் |
1.2 டர்போ-பெட்ரோல் இன்ஜின் |
பவர் |
120 PS |
டார்க் |
170 Nm |
டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீடு MT |
இந்த இன்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் மட்டுமே கிடைக்கிறது, இப்போதைக்கு ஆட்டோமேட்டிக் ஆப்ஷன் கிடையாது.
போட்டியாளர்
டாடா ஆல்ட்ரோஸ் ரேசர் கார் ஹூண்டாய் i20 N லைன் உடன் நேரடியாக போட்டியிடுகிறது
மேலும் படிக்க: ஆல்ட்ரோஸ் ரேசர் ஆன் ரோடு விலை
0 out of 0 found this helpful