• English
  • Login / Register

புதிய ஸ்கோடா சப்காம்பாக்ட் எஸ்யூவி -யின் பெயர் ஆகஸ்ட் 21 அன்று அறிவிக்கப்படவுள்ளது

published on ஜூலை 26, 2024 05:30 pm by rohit for ஸ்கோடா kylaq

  • 90 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஸ்கோடா நிறுவனம் இந்த காருக்கு பெயரிடுவதற்காக ஒரு போட்டியை அறிவித்து அதிலிருந்து 10 பெயர்களை தேர்வு செய்துள்ளது. அவற்றில் ஒன்று உற்பத்திக்கு தயாராகவுள்ள மாடலுக்கு வைக்கப்படும்.

Skoda sub-4m SUV name to be confirmed soon

  • புதிய மாடல் ஸ்கோடாவின் இந்திய வரிசையில் என்ட்ரி லெவல் எஸ்யூவி -யாக இருக்கும்.

  • பட்டியலிடப்பட்ட பெயர்களில் கைரிக், கைரோக்,கைமேக் மற்றும் க்விக் ஆகியவை அடங்கும்.

  • வடிவமைப்பை பொறுத்தவரையில் குஷாக் காருடன் நிறைய ஒன்றுமைகள் இருக்கும். ஆனால் ஸ்பிளிட்ட ஹெட்லைட் செட்டப் போன்ற வேறுபாடுகளுடன் இருக்கும்.

  • 10 இன்ச் டச் ஸ்கிரீன், 6 ஏர்பேக்குகள் மற்றும் வென்டிலேட்டட் முன் சீட்கள் கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • குஷாக்கின் 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் யூனிட்டுடன் மட்டுமே வர வாய்ப்புள்ளது.

  • ஸ்கோடா அதை மார்ச் 2025 -க்குள் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; விலை ரூ.8.50 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கலாம்.

2024 ஆண்டில் தொடக்கத்தில் இந்திய சந்தைக்காக ஸ்கோடா சப்-4m எஸ்யூவி ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது என்பது எங்களுக்கு தெரிய வந்தது. பின்னர் அதை பற்றிய அறிவிப்புகளைத் தொடர்ந்து எஸ்யூவியின் முன் மற்றும் பின்புற தோற்றங்களை பற்றிய ஒரு விவரங்களை வழங்கும் இரண்டு டிஸைன் ஸ்கெட்ச் -கள் கிடைத்துள்ளன. இப்போது இந்த மாடலின் அறிவிப்புக்குப் பிறகு ஸ்கோடாவால் அறிமுகப்படுத்தப்பட்ட போட்டியின் முடிவுகளைத் தொடர்ந்து, புதிய எஸ்யூவி -யின் பெயர் ஆகஸ்ட் 21 அன்று வெளியிடப்படும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்கோடா நிறுவனம் கைரிக், கைரோக், கைமேக் மற்றும் க்விக் உள்பட 10 பெயர்களை இறுதி செய்துள்ளது.

ஸ்கோடாவின் சப்காம்பாக்ட் காரின் கூடுதல் விவரங்கள்

Skoda sub-4m SUV spied

புதிய சப்-4m கார் இந்தியாவில் ஸ்கோடாவின் என்ட்ரி-லெவல் எஸ்யூவி மாடலாக இருக்கும். இது குஷாக் காம்பாக்ட் எஸ்யூவி  -க்கு கீழே விற்பனை செய்யப்படும். டீஸர்கள் மற்றும் ஸ்பை ஷாட்களின் அடிப்படையில் பார்க்கும் போது குஷாக் போன்றே போன்ற வடிவமைப்பை இது கொண்டிருக்க வாய்ப்புள்ளது. LED  ஹெட்லைட் செட்டப் மற்றும் L -வடிவ இன்டர்னல் லைட்டிங் எலமென்ட் உடன் LED  டெயில் லைட்ஸ் ஆகியவையும் கொடுக்கப்படலாம்.

இது என்ன வசதிகளுடன் வரக்கூடும் ?

Skoda Kushaq's 10-inch touchscreen

10-இன்ச் டச் ஸ்கிரீன், சன்ரூஃப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) ஆகியவை இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

எதிர்பார்க்கப்படும் இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்கள்

குஷாக்கிலிருந்து சிறிய 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் யூனிட் (115 PS/178 Nm) உடன் மட்டுமே சப்-4m எஸ்யூவி -யை ஸ்கோடா வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை பெறும் என நம்பப்படுகிறது.

மேலும் படிக்க: ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட Skoda Kushaq மற்றும் Skoda Slavia மாடல்களின் இந்தியாவிற்க்கான லான்ச் டைம்லைன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

இது எப்போது வெளியிடப்படும்?

Skoda sub-4m SUV rear spied

புதிய ஸ்கோடா சப்-4m எஸ்யூவி மார்ச் 2025க்குள் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதன் விலை ரூ.8.50 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும். இது கியா சோனெட், மாருதி பிரெஸ்ஸா, மஹிந்திரா XUV 3XO, டாடா நெக்ஸான், நிஸான் மேக்னைட், ஹூண்டாய் வென்யூ, ரெனால்ட் கைகர் உடன் போட்டியிடும். மேலும் சப்-4m கிராஸ் ஓவர்களான மாருதி ஃபிரான்க்ஸ் மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் டெய்சர் ஆகியவற்றுடனும் போட்டியிடும்.

கார்கள் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்து கொள்ளவும்.

was this article helpful ?

Write your Comment on Skoda kylaq

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • டாடா சீர்ரா
    டாடா சீர்ரா
    Rs.10.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • க்யா syros
    க்யா syros
    Rs.9.70 - 16.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • பிஒய்டி sealion 7
    பிஒய்டி sealion 7
    Rs.45 - 49 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • M ஜி Majestor
    M ஜி Majestor
    Rs.46 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • நிசான் பாட்ரோல்
    நிசான் பாட்ரோல்
    Rs.2 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    அக்ோபர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience