• English
  • Login / Register

ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட Skoda Kushaq மற்றும் Skoda Slavia மாடல்களின் இந்தியாவிற்க்கான லான்ச் டைம்லைன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

ஸ்கோடா ஸ்லாவியா க்காக ஜூலை 17, 2024 06:26 pm அன்று shreyash ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

  • 43 Views
  • ஒரு கருத்தை எழுதுக

2026 ஆண்டு அறிமுகப்படுத்தப்படவுள்ள ஸ்லாவியா மற்றும் குஷாக் ஆகியவை டிசைன் மற்றும் வசதிகளின் அப்டேட்களை காரின் உள்ளேயும் வெளியேயும் பெறும். அதே வேளையில் அவற்றின் தற்போதைய வெர்ஷன்களின் அதே பவர்டிரெய்ன் ஆப்ஷன்களை தக்க வைத்துக் கொள்கிறது.

  • வெளிப்புறத்தில் உள்ள அப்டேட்களை பொறுத்தவரை கனெக்டட் LED DRL-கள், புதிய LED ஹெட்லைட்கள் மற்றும் கனெக்டட் LED டெயில் லைட்கள் போன்ற நவீன டிசைன் கூறுகள் இருக்கலாம்.

  • உள்ளே, குஷாக் மற்றும் ஸ்லாவியா இரண்டும் அப்டேட் செய்யப்பட்ட டிசைன்கள் மற்றும் புதிய கலர் தீம்களைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • புதிய அம்சம் சேர்த்தல்களில் 360 டிகிரி கேமரா மற்றும் ADAS ஆகியவை அடங்கும்.

  • குஷாக் மற்றும் ஸ்லாவியா ஆகிய இரண்டு கார்களிலும் முன்பு இருந்த அதே 1-லிட்டர் மற்றும் 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களைத் தக்கவைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது.

  • தற்போதுள்ள மாடல்களை விட அதிக விலையுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்கோடா குஷாக் ஜூன் 2021 -ஆம் ஆண்டில் இந்திய சந்தையில் அறிமுகமானது. அதைத் தொடர்ந்து மார்ச் 2022 -ஆம் ஆண்டில்  ஸ்லாவியா அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த இரண்டு ஸ்கோடா கார்களும் மிட்லைஃப் அப்டேட்டை நெருங்கி வருகின்றன. மேலும் 2026 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட குஷாக் மற்றும் ஸ்லாவியாவை அறிமுகப்படுத்த ஸ்கோடா திட்டமிட்டுள்ளதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த அப்டேட் செய்யப்பட்ட ஸ்கோடா கார்களில் இருந்து என்ன எதிர்பார்க்கலாம் என்பது பற்றிய ஒரு பார்வை இதோ.

புதிய டிசைன்

2024 Skoda Slavia Prestige

ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் குஷாக்கின் ஒட்டுமொத்த டிசைனை தக்க வைத்துக் கொள்ளும் அதே வேளையில், இரண்டு கார்களும் அவற்றின் தற்போதைய அப்டேட்களுடன் ஒப்பிடும்போது புதிய டிசைனைக் கொண்டிருக்கும். அப்டேட்களில் புதிய வடிவிலான பம்ப்பர்கள், புதிய வடிவிலான ஹெட்லைட்கள் மற்றும் டெயில்லைட்டுகள் மற்றும் புதிய அலாய் வீல்கள் ஆகியவை அடங்கும். இன்று நவீன கார்களில் காணப்படுவது போல் கனெக்டட் LED லைட்டிங் போன்ற நவீன டிசைன் எலமென்ட்களையும்  இவை பெறலாம்.

வெளிப்புறத்தைத் தவிர குஷாக் மற்றும் ஸ்லாவியாவின் உட்புறங்களும் பல அப்டேட்களுக்கு உட்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய வடிவிலான டாஷ்போர்டு லேஅவுட், புதிய தீம்கள் மற்றும் வெவ்வேறு கலர்களில் உள்ள சீட்கள் போன்றவை இதில் அடங்கும்.

புதிய வசதிகள்

2024 Skoda Slavia interiors

ஸ்கோடா தற்போது இந்தியா-ஸ்பெக் குஷாக் மற்றும் ஸ்லாவியாவில் 10-இன்ச் டச்ஸ்க்ரீன், 8-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, ஆட்டோமேட்டிக் ஏசி, சிங்கிள்-பேன் சன்ரூஃப் மற்றும் பவர்டு ஃப்ரண்ட் சீட்கள் போன்ற வசதிகளுடன் வழங்குகிறது. அப்டேட்களுடன், ஸ்கோடா குஷாக்கிற்கு ஒரு பனோரமிக் சன்ரூஃபை அறிமுகப்படுத்தலாம். அதே சமயம் ஸ்லாவியா மற்றும் குஷாக் இரண்டும் 360 டிகிரி கேமரா பொருத்தப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு மாடல்களிலும் உள்ள பாதுகாப்பு வசதிகளில் 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் ஹில்-ஹோல்ட் அசிஸ்ட் ஆகியவை அடங்கும். அப்டேட்களுடன், ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், ஹூண்டாய் வெர்னா மற்றும் ஹோண்டா சிட்டி போன்ற ப்ரைம் செக்மென்ட் போட்டியாளர்களைப் போலவே ஸ்கோடா குஷாக் மற்றும் ஸ்லாவியாவை அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) போன்ற வசதிகளுடன் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

மேலும் பார்க்க: 2025 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ள Skoda Sub-4m எஸ்யூவி -யின் டீசர் அதன் பின்பக்க விவரங்களை காட்டுகிறது

பவர்டிரெய்ன் ஆப்ஷன்களில் எந்த மாற்றங்களும் இருக்க வாய்ப்பில்லை

ஸ்கோடா தற்போதைய பவர்டிரெய்ன் ஆப்ஷன்களை ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட குஷாக் மற்றும் ஸ்லாவியாவுடன் தொடர்ந்து வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரிவான விவரக்குறிப்புகள் கீழே உள்ள அட்டவணையில் வழங்கப்பட்டுள்ளன:

 

இன்ஜின்

 

1-லிட்டர் டர்போ-பெட்ரோல்

 

1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல்

 

 

பவர்

 

 

115 PS

 

 

150 PS

 

 

 டார்க்

 

 

178 Nm

 

 

250 Nm

 

 

டிரான்ஸ்மிஷன்

 

 

6-ஸ்பீட் MT, 6-ஸ்பீட் AT*

 

 

6-ஸ்பீட் MT, 6-ஸ்பீட் DCT**

*AT: டார்க் கன்வர்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்

**DCT: டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்

தற்போதைய விலை மற்றும் போட்டியாளர்கள்

    

 

ஸ்கோடா குஷாக்

 

 

ஸ்கோடா ஸ்லாவியா

 

 

ரூ.10.89 லட்சம் முதல் ரூ.18.79 லட்சம் வரை

 

 

ரூ.10.69 லட்சம் முதல் ரூ.18.69 லட்சம் வரை

விலை விவரங்கள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம்-க்கானவை

குஷாக் மற்றும் ஸ்லாவியாவின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன்கள் அவற்றின் தற்போதைய மாடல்களை விட விலை அதிகமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்டேட்  செய்யப்பட்ட ஸ்கோடா குஷாக், ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஹோண்டா எலிவேட் மற்றும் MG ஆஸ்டர் போன்ற கார்களுடன் தொடர்ந்து போட்டியிடும். இதற்கிடையில், 2026 ஸ்லாவியா ஹோண்டா சிட்டி, வோக்ஸ்வாகன் விர்டஸ், ஹூண்டாய் வெர்னா மற்றும் மாருதி சியாஸ் ஆகியவற்றுடன் தொடர்ந்து போட்டியிடும்.

புதிய கார்கள் தொடர்பான அப்டேட்களுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க: ஸ்லாவியாவின் ஆன் ரோட் விலை

was this article helpful ?

Write your Comment on Skoda ஸ்லாவியா

explore similar கார்கள்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

டிரெண்டிங் சேடன் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience