• English
  • Login / Register

2025 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ள Skoda Sub-4m எஸ்யூவி -யின் டீசர் அதன் பின்பக்க விவரங்களை காட்டுகிறது

published on ஜூலை 16, 2024 05:14 pm by rohit for ஸ்கோடா kylaq

  • 67 Views
  • ஒரு கருத்தை எழுதுக

புதிய ஸ்கோடா எஸ்யூவி -யானது 2025-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது கார் தயாரிப்பாளரின் எஸ்யூவி வரிசையில் என்ட்ரி-லெவல் மாடலாக இருக்கும்.

  • ஸ்கோடா 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஒரு புதிய சப்-4m எஸ்யூவி -யின் அறிமுகத்தைப் பற்றி அறிவித்துள்ளது.

  • சமீபத்திய டிசைன் ஸ்கெட்ச் L- வடிவ LED டெயில் லைட்கள் மற்றும் பின்புறத்தில் 'ஸ்கோடா' பேட்ஜிங்கை காட்டுகிறது.

  • முன்புறம் ஸ்கோடாவின் சிக்னேச்சர் பட்டர்ஃபிளை கிரில் மற்றும் முந்தைய டீசரில் காணப்பட்டது போல ஸ்ப்ளிட்-LED லைட்டிங் செட்-அப் உடன் வருகிறது.

  • 10-இன்ச் டச்ஸ்க்ரீன், சன்ரூஃப் மற்றும் ஆறு ஏர்பேக்குகள் ஆகிய வசதிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • இது குஷாக் எஸ்யூவியில் இருந்து சிறிய 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் வருகிறது.

  • அறிமுகமானது 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் விலை 8.50 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சப்-4m எஸ்யூவியின் வளர்ச்சி பற்றிய அப்டேட்டை கொடுத்த பிறகு, ஸ்கோடா இப்போது அதன் வரவிருக்கும் கியா சோனெட்டின் போட்டியாளரின் புதிய வடிவமைப்பு டீசரை வெளியிட்டது. அதன் ரியர் ப்ரொபைல் ஒரு கண்ணோட்டத்தை வழங்குகிறது. ஸ்கோடா சப்-4m எஸ்யூவி -யின் பல டெஸ்ட் கார்கள் ஏற்கனவே டெஸ்ட் டிரைவின் போது படம்பிடிக்கப்பட்டிருந்தன, அப்போது அவை முழுவதுமாக மூடப்பட்டிருந்தன.

பின்பக்க விவரங்களுடன் டீசர் வெளியானது

சமீபத்திய டீசர் சிறிய ஸ்கோடா எஸ்யூவிக்கான இன்வெர்ட்டட் ‘L’ வடிவ LED டெயில் லைட்களை காட்டுகிறது. டெயில்கேட்டில் உள்ள ஸ்கோடா எழுத்துகள் குஷாக் எஸ்யூவியில் உள்ளது போன்றே இதிலும் உள்ளன.

Skoda sub-4m SUV front design sketch teaser

முந்தைய டீசர்கள் மற்றும் பல ஸ்பை ஷாட்கள் மற்ற டிசைன் விவரங்கள் பற்றிய ஒரு சிறிய பார்வையை வழங்கியுள்ளன. இதில் சிக்னேச்சர் ஸ்கோடா பட்டர்ஃபிளை கிரில் மற்றும் முன் ஃபாசியாவுக்கான ஸ்ப்ளிட்-LED லைட்டிங் செட்-அப் ஆகியவை அடங்கும்.

எதிர்பார்க்கப்படும் கேபின் மற்றும் வசதிகள்

Skoda Kushaq's 10-inch touchscreen

குஷாக்கின் அதே 2-ஸ்போக் ஸ்டீயரிங் மற்றும் 10-இன்ச் டச்ஸ்கிரீன் யூனிட் கொண்ட சிறிய ஸ்கோடா எஸ்யூவியுடன் ஒற்றுமைகள் உட்புறத்திலும் இருக்கும் என்று நாம் எதிர்பார்க்கலாம். வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், சன்ரூஃப், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் வென்டிலேட்டட் முன் சீட்கள் ஆகியவை எதிர்பார்க்கப்படும் மற்ற வசதிகளாக இருக்கின்றன.

பாதுகாப்பை பொறுத்தவரை இந்தக் காரில் 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) போன்றவற்றை ஸ்கோடா வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பார்க்க: இந்த 7 படங்களின் மூலம் Xiaomi SU7 எலக்ட்ரிக் செடானைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள்

ஒரே ஒரு இன்ஜின் ஆப்ஷனை மட்டுமே பெற வாய்ப்புள்ளது

புதிய ஸ்கோடா சப்-4m எஸ்யூவி குஷாக்கிலிருந்து 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் யூனிட்டுடன் (115 PS/178 Nm) மட்டுமே வழங்கப்படும் என்று நம்புகிறோம். இது 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்

Skoda sub-4m SUV rear spied

ஸ்கோடா சப்-4m எஸ்யூவி ஆனது 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அதன் உலகளாவிய அறிமுகத்திற்கு தயாராக உள்ளது, அதன் விற்பனை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை 8.50 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் எனத் தெரிகிறது. இது மாருதி பிரெஸ்ஸா, கியா சோனெட், டாடா நெக்ஸான், மஹிந்திரா XUV 3X0, ஹூண்டாய் வென்யூ, ரெனால்ட் கைகர், நிஸான் மேக்னைட் மற்றும் சப்-4m கிராஸ்ஓவர்களான மாருதி ஃபிரான்க்ஸ் மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் டெய்சர் ஆகியவற்றிற்கு மாற்றாகவும் இது இருக்கும்.

புதிய கார்கள் தொடர்பான அப்டேட்களுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்து கொள்ளுங்கள்.

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Skoda kylaq

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience