Skoda Slavia மற்றும் Kushaq ஆகியவை இரண்டு கார்களும் இப்போது ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகளுடன் வருகின்றன.
published on மே 02, 2024 05:32 pm by shreyash for ஸ்கோடா ஸ்லாவியா
- 65 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஸ்லாவியா மற்றும் குஷாக் ஆகியவற்றின் பேஸ்-ஸ்பெக் ஆக்டிவ் மற்றும் மிட்-ஸ்பெக் ஆம்பிஷன் வேரியன்ட்களின் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டுள்ளது.
ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் ஸ்கோடா குஷாக் போன்ற மாடல்கள் இப்போது ஸ்டாண்டர்டான பாதுகாப்பு வசதிகளில் ஒன்றாக ஆறு ஏர்பேக்குகளுடன் வழங்கப்படுகின்றன. இருப்பினும் இந்த பாதுகாப்பு அப்டேடின் காரணமாக ஸ்லாவியா மற்றும் குஷாக் ஆகியவற்றின் விலை ரூ.35,000 வரை அதிகரித்துள்ளது. மேலும் விவரங்களை தெரிந்து கொள்வதற்கு முன் கீழே உள்ள அட்டவணையில் இரண்டு கார்களின் புதிய விலை விவரங்களை பார்ப்போம்:
ஸ்கோடா ஸ்லாவியா
வேரியன்ட் |
பழைய விலை |
புதிய விலை |
வித்தியாசம் |
1-லிட்டர் டர்போ-பெட்ரோல் மேனுவல் |
|||
ஆக்டிவ் |
ரூ.11.53 லட்சம் |
ரூ.11.63 லட்சம் |
+ ரூ. 10,000 |
ஆம்பிஷன் |
ரூ.13.43 லட்சம் |
ரூ.13.78 லட்சம் |
+ ரூ. 35,000 |
ஸ்டைல் |
ரூ.15.63 லட்சம் |
ரூ.15.63 லட்சம் |
மாற்றம் இல்லை |
1-லிட்டர் டர்போ-பெட்ரோல் ஆட்டோமேட்டிக் |
|||
ஆம்பிஷன் |
ரூ.14.73 லட்சம் |
ரூ.15.08 லட்சம் |
+ ரூ. 35,000 |
ஸ்டைல் |
ரூ.16.93 லட்சம் |
ரூ.16.93 லட்சம் |
மாற்றம் இல்லை |
1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் மேனுவல் |
|||
ஸ்டைல் |
ரூ.17.43 லட்சம் |
ரூ.17.43 லட்சம் |
மாற்றம் இல்லை |
1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் DCT |
|||
ஸ்டைல் |
ரூ.18.83 லட்சம் |
ரூ.18.83 லட்சம் |
மாற்றம் இல்லை |
ஸ்கோடா குஷாக்
வேரியன்ட் |
பழைய விலை |
புதிய விலை |
வித்தியாசம் |
1-லிட்டர் டர்போ-பெட்ரோல் மேனுவல் |
|||
ஆக்டிவ் |
ரூ.11.89 லட்சம் |
ரூ.11.89 லட்சம் |
+ ரூ. 10,000 |
ஓனிக்ஸ் |
ரூ.12.79 லட்சம் |
ரூ.12.89 லட்சம் |
+ ரூ. 10,000 |
ஆம்பிஷன் |
ரூ.14.19 லட்சம் |
ரூ.14.54 லட்சம் |
+ ரூ. 35,000 |
ஸ்டைல் |
ரூ.16.59 லட்சம் |
ரூ.16.59 லட்சம் |
மாற்றம் இல்லை |
1-லிட்டர் டர்போ-பெட்ரோல் ஆட்டோமேட்டிக் |
|||
ஆம்பிஷன் |
ரூ.15.49 லட்சம் |
ரூ.15.84 லட்சம் |
+ ரூ. 35,000 |
ஸ்டைல் |
ரூ.17.89 லட்சம் |
ரூ.17.89 லட்சம் |
மாற்றம் இல்லை |
1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் மேனுவல் |
|||
ஸ்டைல் |
ரூ.18.39 லட்சம் |
ரூ.18.39 லட்சம் |
மாற்றம் இல்லை |
1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் DCT |
|||
ஸ்டைல் |
ரூ.19.79 லட்சம் |
ரூ.19.79 லட்சம் |
மாற்றம் இல்லை |
பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தியதை தொடர்ந்து, ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் ஸ்கோடா குஷாக் ஆகிய இரண்டின் பேஸ்-ஸ்பெக் ஆக்டிவ் வேரியன்ட்களின் விலை இப்போது ரூ.10,000 அதிகரித்துள்ளது. இதே போல் இந்த மாடல்களின் மிட்-ஸ்பெக் ஆம்பிஷன் வேரியன்ட்களின் விலை ரூ.35,000 வரை அதிகரித்துள்ளது. இரண்டு கார்களின் டாப்-ஸ்பெக் ஸ்டைல் வேரியன்ட்களிலும் ஏற்கனவே 6 ஏர் பேக்குகளுடன் வருவதன் காரணமாக அவற்றின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
மேலும் பார்க்க: மே 2024-இல் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் 3 புதிய கார்கள்
இதர வசதிகள்
வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 10 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்,டிரைவருக்கான 8 இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே, க்ரூஸ் கன்ட்ரோல், ஆட்டோமேட்டிக் ஏசி மற்றும் சன்ரூஃப் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் குஷாக் மாடல்கள் வருகின்றன. கூடுதலாக இந்த மாடல்களில் வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் ஆப்ஷன்களுடன், பவர்டு மற்றும் வென்டிலேட்டட் முன் சீட்டுகளும் உள்ளன.
ஸ்கோடா குஷாக் மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா இரண்டிலும் உள்ள பாதுகாப்பு வசதிகளில் ஹில் ஹோல்ட் வித் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) மற்றும் ரியர் வியூ கேமரா ஆகியவை அடங்கும். குளோபல் NCAP கிராஷ் டெஸ்டில் இந்த இரண்டு மாடல்களும் 5-ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பவர்டிரெயின் ஆப்ஷன்கள்
ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் ஸ்கோடா குஷாக் ஆகிய இரண்டு கார்களும் இரண்டு டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகின்றன, அவற்றின் விவரங்கள் பின்வருமாறு:
இன்ஜிசன் |
1-லிட்டர் டர்போ-பெட்ரோல் |
1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் |
பவர் |
115 PS |
150 PS |
டார்க் |
178 Nm |
250 Nm |
டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீட் MT, 6-ஸ்பீட் AT |
6-ஸ்பீட் MT, 6-ஸ்பீட் DCT |
1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆக்டிவ் சிலிண்டர் டியாக்டிவேஷன் டெக்னாலஜியுடன் வருகிறது. இது பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்போது நான்கு சிலிண்டர்களில் இரண்டை அணைத்து செயல்திறன் மற்றும் காரின் மைலேஜை அதிகரிக்கிறது.
போட்டியாளர்கள்
ஹோண்டா சிட்டி, ஃபோக்ஸ்வேகன் விர்ட்டஸ், ஹூண்டாய் வெர்னா மற்றும் மாருதி சியாஸ் போன்ற மாடல்களுடன் ஸ்கோடா ஸ்லாவியா போட்டியிடுகிறது. மறுபுறம் ஃபோக்ஸ்வேகன் டைகுன், கியா செல்டோஸ், ஹூண்டாய் கிரெட்டா, மாருதி சுஸூகி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், ஹோண்டா எலிவேட் மற்றும் சிட்ரோன் C3 ஏர்கிராஸ் போன்ற கார்களுக்கு போட்டியாக குஷாக் உள்ளது.
மேலும் படிக்க: ஸ்கோடா ஸ்லாவியா ஆட்டோமேட்டிக்
0 out of 0 found this helpful