Skoda Kylaq காரின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன
ஸ்கோடா கைலாக் குஷாக் மற்றும் ஸ்லாவியா கார்களில் உள்ள அதே 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் வரும்.
-
கைலாக் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட உடன் ஸ்கோடாவின் என்ட்ரி லெவல் எஸ்யூவி -யாக இருக்கும்.
-
இது 6 வே அட்ஜெஸ்ட்டபிள் முன் இருக்கைகளை வென்டிலேஷன் ஃபங்ஷன் மற்றும் ஆல் LED லைட்டிங் செட்டப் ஆகியவற்றை கொண்டிருக்கும்.
-
பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக) மற்றும் மல்டி கொலிஷன் பிரேக்ஸ் ஆகியவை இருக்கும்.
-
இது 3,995 மிமீ நீளம் மற்றும் 2,566 மிமீ வீல்பேஸ் மற்றும் 189 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது.
-
இதன் விலை ரூ.8.50 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக நவம்பர் 6, 2024 அன்று ஸ்கோடா கைலாக் அதன் உலகளாவிய அறிமுகத்துக்கு தயாராகி வருகிறது.ஸ்கோடா நிறுவனம் இப்போது சப்-4எம் எஸ்யூவியின் சில புதிய விவரங்களை வெளியிட்டுள்ளது. இதில் பவர்டிரெய்ன் ஆப்ஷன், அளவுகள் மற்றும் சில வசதிகள் உள்ளன. அந்த விவரங்களைப் பார்ப்போம்:
ஸ்கோடா கைலாக்: என்ன விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன?
ஸ்கோடா கைலாக் ஒரு சப்-4m எஸ்யூவி ஆகும். இது இந்தியாவை மையமாகக் கொண்ட MQB-A0-IN கட்டமைப்பு தளத்தை அடிப்படையாகக் கொண்டது. இது அதன் ஸ்லாவியா மற்றும் குஷாக் ஆகிய கார்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் அளவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
நீளம் |
3,995 மி.மீ |
அகலம் |
இன்னும் வெளியிடப்படவில்லை |
உயரம் |
இன்னும் வெளியிடப்படவில்லை |
வீல்பேஸ் |
2,566 மி.மீ |
கிரவுண்ட் கிளியரன்ஸ் |
189 மி.மீ |
இந்த எஸ்யூவி -யின் உயரம் மற்றும் அகலம் ஆகிய விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இதைப் போன்ற பிரபலமான மாடல்களான மாருதி பிரெஸ்ஸா மற்றும் டாடா நெக்ஸான் ஆகியவற்றின் ஒப்பிடுகையில் நீளம் ஒன்றாகவே உள்ளது. அதே சமயம் கைலாக் பிரெஸ்ஸாவை விட 66 மி.மீ நீளமான வீல்பேஸ் மற்றும் நெக்ஸானை விட 68 மி.மீ பெரிய வீல்பேஸை கொண்டுள்ளது. மறுபுறம் இரண்டு போட்டியாளர்களின் கிரவுண்ட் கிளியரன்ஸ் கைலாக்கை விட சிறப்பாக உள்ளது.
கைலாக் ஆனது வென்டிலேஷன் ஃபங்ஷன், 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக) மற்றும் மல்டி-கோலிஷன்-பிரேக்கிங் சிஸ்டம் கொண்ட 6-வே அட்ஜெஸ்ட்டபிள் முன் இருக்கைகளைக் கொண்டிருக்கும் என்பதையும் ஸ்கோடா உறுதிப்படுத்தியுள்ளது. ஸ்லாவியா-குஷாக் கார்களில் காணப்படும் கைலாக் 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் (115 PS/ 178 Nm) வரும் என்பதையும் ஸ்கோடா உறுதிப்படுத்தியுள்ளது. இந்த இன்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் (டார்க் கன்வெர்டர் மாற்றி) ஆப்ஷனும் கொடுக்கப்படலாம்.
மேலும் படிக்க: 2024 ஆண்டி மீதியில் வெளியிடப்படவுள்ள கார்கள் என்ன தெரியுமா ?
ஸ்கோடா கைலாக்: ஒரு கண்ணோட்டம்
ஸ்கோடா கைலாக் -ன் டீஸர் முன்பு வெளியிடப்பட்டது, அது காரின் வெளிப்புறத்தை பற்றிய ஒரு பார்வையை கொடுத்தது. மற்ற ஸ்கோடா கார்களை போலவே சிக்னேச்சர் பட்டர்ஃபிளை கிரில், ஸ்பிலிட்-ஹெட்லேம்ப் டிசைன் மற்றும் ரேப்பரவுண்ட் எல்இடி டெயில் லைட்டுகள் ஆகியவை இதில் உள்ளன.
இந்த சப்காம்பாக்ட் எஸ்யூவி -யின் உட்புறத்தை ஸ்கோடா இன்னும் காட்டவில்லை என்றாலும். குஷாக்கில் காணப்படுவது போன்ற டேஷ்போர்டு அமைப்பைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்பார்க்கப்படும் அம்சங்களில் 10-இன்ச் டச் ஸ்கிரீன், சிங்கிள்-பேன் சன்ரூஃப், 360-டிகிரி கேமரா மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் ஆகியவை இதில் இருக்கும்.
ஸ்கோடா கைலாக்: விலை மற்றும் போட்டியாளர்கள்
ஸ்கோடா கைலாக் காரின் விலை ரூ.8.50 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது டாடா நெக்ஸான், மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, சோனெட், மஹிந்திரா XUV 3XO, நிசான் மேக்னைட், மற்றும் ரெனால்ட் கைகர் போன்ற கார்களுடன் போட்டியிடும். மேலும் இது மாருதி ஃபிரான்க்ஸ் மற்றும் டொயோட்டா டெய்சர் போன்ற போன்ற சப்-4m கிராஸ்ஓவர்களுடனும் போட்டியிடும்
கார் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
Write your Comment on Skoda kylaq
Something I didn't like in Skoda and VW is the placement of Turn indicator and wiper controls. They are as per German left hand drive system and not as per indian system.
- View 2 replies Hide replies
- பதில்