மஹிந்திரா வாடிக்கையாளர்களிடையே 2023 ஏப்ரல் மாதம் அதிகரித்த டீசல் வேரியன்ட்கள் மீதான விருப்பம்
published on மே 15, 2023 08:23 pm by ansh for மஹிந்திரா தார்
- 33 Views
- ஒரு கருத்தை எழுதுக
நான்கு எஸ்யூவி களும் பெட்ரோல் இன்ஜின் தேர்வைப் பெற்றாலும், டீசல் இன்ஜின் தான் சிறந்த விருப்பமாக உள்ளது.
மஹிந்திரா, அதன் முரட்டுத்தனமான கட்டமைப்பு மற்றும் சக்திவாய்ந்த எஸ்யூவி களுக்கு எப்போதும் பெயர் பெற்ற பிராண்டாகும், அதன் மிகவும் பிரபலமான மாடல்களுடன் சக்திவாய்ந்த டர்போ-பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களின் தேர்வை அது வழங்குகிறது. ஆனால் வாடிக்கையாளர்கள் எந்த இன்ஜின்களை விரும்புகிறார்கள்? 2023 ஏப்ரல் மாதத்திற்கான கார் தயாரிப்பாளரின் தார், XUV300, ஸ்கார்பியோ (s) மற்றும் XUV700 ஆகியவற்றின் விரிவான விற்பனைத் தரவைப் பற்றி இங்கே பார்ப்போம்.
தார்
|
|
|
|
2,294 |
4,298 |
|
858 |
1,004 |
பிரபலமான மஹிந்திரா கார்களைப் பற்றி பேசும்போது, மஹிந்திரா தார் கார்கள் அதில் கட்டாயம் இடம் பெறும் . அதிக டார்க் கொண்ட டீசல் கார்களுடன் ஒப்பிடும் போது ஆஃப்-ரோடரின் பெட்ரோலில் இயங்கும் கார் வேரியன்ட்கள் அவ்வளவு பிரபலமாக இல்லை. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், தார் டீசல் வேரியன்ட்கள்களுக்கான தேவை கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்துள்ளது. மற்றும் பெட்ரோல் வேரியன்ட்கள்களின் தேவையை விட அது நான்கு மடங்கு அதிகம். புதிய 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் மிகவும் மலிவு விலையில் தார் புதிய RWD வேரியன்ட்களை அறிமுகப்படுத்தியதே இந்த வளர்ச்சிக்கு காரணமாக இருக்கலாம்.
|
|
|
|
72.78% |
81.06% |
|
27.22% |
18.94% |
ஒரு வருட காலப்பகுதியில், லைஃப்ஸ்டைல் எஸ்யூவி யின் பெட்ரோல் கார் வேரியன்ட்கள் விற்பனையில் 8 சதவீதத்திற்கும் அதிகமான வீழ்ச்சியைக் கண்டன. இரண்டு பவர் ட்ரெய்ன்களுக்கும் மொத்த விற்பனை அதிகரித்தாலும், 2023 ஏப்ரல் மாதத்தில் டீசல் வேரியன்ட்கள் 80 சதவீதத்திற்கும் அதிகமான விற்பனையைப் பெற்றன.
ஸ்கார்பியோ N மற்றும் ஸ்கார்பியோ கிளாசிக்
|
|
|
|
2,712 |
9,125 |
|
0 |
442 |
கடந்த ஆண்டு இதே காலத்தில் , மஹிந்திரா நிறுவனம் முந்தைய தலைமுறை ஸ்கார்பியோவை மட்டுமே விற்பனையில் வைத்திருந்தது, இது டீசல் பவர்டிரெய்னுடன் மட்டுமே வந்தது. எஸ்யூவி இப்போது இரண்டு வடிவங்களில் வழங்கப்படுகிறது: ஸ்கார்பியோ கிளாசிக் மற்றும் ஸ்கார்பியோ N, பிந்தையது டர்போ-பெட்ரோல் இன்ஜின் தேர்வுடன் வழங்கப்படும். இருப்பினும், இந்த பெயர்ப்பலகைக்கான அதிக எண்ணிக்கையிலான விற்பனை டீசல் வேரியன்ட்கள்களில் இருந்து வருகிறது.
மேலும் படிக்கவும்: ரேடார் அடிப்படையிலான ADAS உடன் கூடுதல் பாதுகாப்பானதாக மாறும் மஹிந்திரா ஸ்கார்பியோ
|
|
|
|
100% |
95.38% |
|
0% |
4.62% |
புள்ளிவிவரங்கள் குறிப்பிடுவது போல, ஸ்கார்பியோவின் பெட்ரோல் வேரியன்ட்கள் அடிப்படையில் ஒரு அரிதான தேர்வுகளாகும். ஸ்கார்பியோ கிளாசிக் மற்றும் ஸ்கார்பியோ N இன் டீசல் வேரியன்ட்கள் 2023 ஏப்ரல் மாதத்தில் 95 சதவீதத்திற்கும் அதிகமான விற்பனையைப் பெற்றன.
XUV700
|
|
|
|
2,839 |
3,286 |
|
1,655 |
1,471 |
XUV700இன் மொத்த விற்பனை ஆண்டுக்கு சுமார் 5 சதவீதம் அதிகரித்துள்ளது. டீசல் கார் வேரியன்ட்களின் விற்பனை உயர்ந்ததையும், பெட்ரோல் கார் வேரியன்ட்களின் விற்பனை குறைந்ததையும் இங்கு பார்க்கலாம்.
|
|
|
|
63.17% |
69.07% |
|
36.83% |
30.93% |
எஸ்யூவியின் பெட்ரோல் கார் வேரியன்ட்கள் தற்போது விற்பனையில் 30 சதவீதத்தை மட்டுமே கொண்டுள்ளன.
XUV300
|
|
|
|
2,035 |
2,894 |
|
1,874 |
2,168 |
இந்த பட்டியலில் உள்ள ஒவ்வொரு மாடலையும் போலல்லாமல், XUV300 பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டு வேரியன்ட்களுக்கும் மிகவும் சீரான தேவையை கொண்டுள்ளது. இருப்பினும், 2022 ஏப்ரல் மாதத்தை விட 2023 ஏப்ரல் மாதத்தில் விற்பனை இடைவெளி தெளிவாக அதிகரித்துள்ளது, ஏனெனில் டீசல் கார் வேரியன்ட்கள் விற்பனையில் அதிக பங்கில் உள்ளன .
|
|
|
|
52.05% |
57.17% |
|
47.95% |
42.83% |
சப்காம்பாக்ட் எஸ்யூவி இடத்தில், XUV300 டீசல் விருப்பத்தை வழங்கும் சில எஸ்யூவிகளில் ஒன்றாகும், இது அதன் விற்பனையில் பாதிக்கும் மேலானதாகத் தொடர்கிறது.
மேலும் படிக்கவும்: விரைவில் மீண்டும் வரவேண்டும் என நாங்கள் விரும்பும் 7 பிரபலமான கார் பெயர்கள்
மேலே உள்ள விற்பனைத் தரவுகளின்படி, மஹிந்திரா வாடிக்கையாளர்கள் எந்த மாடலை வாங்கினாலும், டீசல் கார் வேரியன்ட்கள்களின் மீது கூடுதலான விருப்பம் வைத்து இருப்பதாக நாங்கள் உறுதியாகக் கூறலாம். ஆனால் கீழேயுள்ள விமர்சனங்களில் நீங்கள் எந்த பவர்டிரெய்னை விரும்புகிறீர்கள், ஏன் என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
மேலும் படிக்கவும்: தார் டீசல்