ரேடார் அடிப்படையிலான ADAS உடன் மேலும் பாதுகாப்பானதாக மாறும் மஹிந்திரா ஸ்கார்பியோ N
published on மே 02, 2023 02:03 pm by tarun for mahindra scorpio n
- 27 Views
- ஒரு கருத்தை எழுதுக
இருப்பினும், இந்தப் பாதுகாப்பு தொழில்நுட்பம் விரைவில் வர வாய்ப்பில்லை.
-
ஆஸ்திரேலியாவில் டீசல்-ஆட்டோமெட்டிக் வாகனங்களில் சமீபத்தில் ஸ்கார்பியோ N அறிமுகப்படுத்தப்பட்டது.
-
அது தற்போதைய பாதுகாப்பு தரநிலைகளுக்கு இணங்கியிருக்கும் நிலையில், 2025 ஏப்ரல் மாதத்திற்குள் அங்கே ADAS உடன் அது புதுப்பிக்கப்பட்டாக வேண்டும்
-
இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு ஸ்கார்பியோ N ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பதால், எதிர்காலத்தில் நாம் ரேடார் அடிப்படையிலான தொழில்நுட்பத்தைய பெற வாய்ப்புள்ளது.
-
அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், லேன் கீப் அசிஸ்ட், மற்றும் ஆட்டோமெட்டிக் எமர்ஜென்சி பிரேக்கிங் உள்ளிட்ட ADAS அம்சங்களை SUV கொண்டிருக்கும்.
மஹிந்திரா சமீபத்தில் ஸ்கார்பியோ N -ஐ ஆஸ்திரேலிய சந்தையில் அறிமுகப்படுத்தியது, அங்கு ஏற்கனவே ஸ்கார்பியோ கிளாசிக்- அடிப்படையிலான பிக்அப் டிரக் விற்பனையில் உள்ளது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட எஸ்யூவி டீசல்-வாகனம் என்ற போர்வையில் ஆஸ்திரேலிய சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஆஸ்திரேலிய பாதுகாப்பு தரநிலைகளின்படி, ஒவ்வொரு காரும் லேன்-கீப் அசிஸ்ட், லேன்-டிபார்ச்சர் வார்னிங், பிளைன்ட் ஸ்பாட் மானிட்டரிங் மற்றும் ரியர்-கிராஸ் டிராஃபிக் அலர்ட் ஆகியவற்றை கொண்டிருக்க வேண்டியது அவசியம். 2023 ஏப்ரல் மாதத்திலிருந்து விற்பனைக்கு என சான்றளிக்கப்படும் அனைத்து கார்களுக்கும் இந்த விதி பொருந்தும், ஆனால் மார்ச் மாதத்திலேயே பதிவு செய்ததன் மூலம் ஸ்கார்பியோ N -ஐ மஹிந்திரா நிறுவனம் சந்தையில் வெளியிட முடிந்தது. சமீபத்தில், அது ஆறு ஏர்பேகுகள், ESP, ஹில் ஹோல்டு அசிஸ்ட், மற்றும் டயர் அழுத்தக் கண்காணிப்பு அமைப்பு ஆகியவற்றை அதன் பாதுகாப்பு அம்சங்களாக வழங்குகிறது.
மேலும் படிக்கவும்: காணுங்கள்: ஒரு டொயோட்டா ஃபார்ச்சூனர் இரு மஹிந்திரா ஸ்கார்பியோ-க்களைவிட மேம்ப்பட்ட திறன் கொண்டதா ? எங்கள் புதிய ஒப்பீட்டு வீடியோவில் கண்டுபிடிக்கவும்
2025 ஏப்ரல் மாதத்திலிருந்து பின்பற்ற வேண்டிய கூடுதல் வலுவான ஆஸ்திரேலிய தரநிலைகளை பெறும் பொருட்டு, மஹிந்திரா இந்த ADAS(அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்) அம்சங்களுடன் ஸ்கார்பியோ N -ஐ பொருத்தியிருக்க வேண்டும். மஹிந்திரா ஆட்டோமோட்டிவ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் ஆபரேசன்ஸ் மேனேஜர் திரு ஜோய்தீப் மோய்த்ரா இந்த மேம்பாட்டை பற்றி கூறுகையில், "இது தொடர்புடைய ஒரு சுற்றுத் திட்டம் எங்களிடம் உள்ளது, தேவையான காலத்தில் அது நிகழும்." என்று கூறினார்.
இந்தியாவைப் பொருத்தவரை என்பதன் பொருள் என்ன?
இந்த மேம்பாடு, ரேடார் அடிப்படையிலான இந்த பாதுகாப்பு அம்சங்களை மஹிந்திரா ஸ்கார்பியோ N பெறும் என்பதை உறுதிப்படுத்துகிறது. இந்தியாவிலிருந்து கார் ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பதால், இந்தியா-ஸ்பெக் மாடலும் ADAS அம்சங்களைப் பெறும் என்பது தெரிகிறது.
SUV -க்கு ADAS -ஐ சேர்த்தல் என்பது கடினமான பணி அல்ல, ஏனெனில் XUV700 இல் ஏற்கனவே இந்த தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. பிந்தைய காரின் ADAS சூட், தானியங்கி எமர்ஜென்சி பிரேக்கிங், லேன்-கீப்பிங் அசிஸ்ட், ஹை பீம் அசிஸ்ட் மற்றும் அடாப்டிவ் குரூஸ் கன்ட்ரோல் ஆகியவற்றை கொண்டுள்ளது. அதே போன்ற பாதுகாப்பு அம்சங்கள் ஸ்கார்பியோ N- காரிலும் பொருத்தப்படும் என எதிர்பார்க்கலாம்.
மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ள 2.2 லிட்டர் டீசல் மற்றும் 2-லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின்களை இந்தியாவில் ஸ்கார்பியோ N விருப்பத்தேர்வாகப் பெறுகிறது. இருந்தாலும், ஆஸ்திரேலிய-ஸ்பெக் மாடல் டீசல்-ஆட்டோமெட்டிக் சேர்க்கையை நிலையானதாகப் பெறுகிறது. இந்தியா-ஸ்பெக் மாடல் பின்புறம் மற்றும் நான்கு-சக்கர டிரைவ் டிரெயின்களைப் பெறுகிறது ஆனால் ஆஸ்திரேலிய பதிப்பு பிந்தைய அம்சத்தை ஸ்டாண்டர்டாக பெறுகிறது. மேலும், அது டாப்-ஸ்பெக் Z8 மற்றும் Z8L கார் வேரியன்ட்களாக மட்டுமே கிடைக்கிறது, அதேநேரத்தில் நமக்கு Z2, Z4, மற்றும் Z6 கார் வேரியன்ட்களும் கூடுதலாகக் கிடைக்கின்றன.
மேலும் படிக்கவும்: ஆர்வலர்கள் ரூ.15 இலட்சத்திற்குள் வாங்கக்கூடிய முதன்மையான 10 டர்போ-பெட்ரோல் கார்கள் இதோ.
ஆஸ்திரேலியாவில் ஸ்கார்பியோ N ரூ.22.70 லட்சம் முதல் ரூ.24.31 லட்சம் வரை விலையில் விற்கப்படுகிறது, அதேநேரத்தில் நது நாட்டில் அதன் விலை ரூ.13.05 லட்சம் முதல் ரூ.24.52 லட்சம் (எக்ஸ்-ஷோ ரூம்) வரை இருக்கிறது.
மேலும் படிக்கவும்: மஹிந்திரா ஸ்கார்பியோ N ஆன் ரோடுவிலை
0 out of 0 found this helpful