புதிய Tata Altroz Racer காரின் டீஸர் அதன் எக்ஸாஸ்ட் நோட்டின் ஒரு சிறப்பம்சத்தை வெளிப்படுத்துகிறது
புதிய டாடா ஆல்ட்ரோஸ் ரேசரின் டீஸர் அதன் சன்ரூஃப் மற்றும் ஃப்ரன்ட் ஃபெண்டர்களில் உள்ள தனித்துவமான ரேசர் பேட்ஜ் இரண்டையும் ஹைலைட் செய்து காட்டுகிறது
டாடா ஆல்ட்ராஸ் ரேசரின் முதல் டீஸர் வீடியோ இப்போது வெளியாகியுள்ளது. இது விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என்பதை காட்டுகிறது. டீசரை உன்னிப்பாகப் பார்க்கும்போது, டாடா ஆல்ட்ரோஸின் வரவிருக்கும் ரேசர் எடிஷனுக்கான பல விஷயங்களை இதில் பார்க்க முடிகிறது.
வெளிப்புற வடிவமைப்பு
பாரத் மொபிலிட்டி 2024 குளோபல் எக்ஸ்போ -வில் வைக்கப்பட்டிருந்த மாடலில் காணப்பட்டதைப் போல டீஸர் ஸ்போர்ட்டியர் ஹேட்ச்பேக்கின் பக்கவாட்டு ப்ரொபைலின் புதிய டூயல் டோன் ஆரஞ்சு மற்றும் கருப்பு நிற பெயிண்ட் ஸ்கீம் இதை எடுத்துக்காட்டுகிறது. இது ஒரு தனித்துவமான ரேசர் பேட்ஜை முன் ஃபெண்டர்களில் கொண்டுள்ளது, இது நிலையான ஆல்ட்ரோஸிலிருந்து வித்தியாசமாக தோற்றமளிக்கிறது.
ஆல்ட்ரோஸ் ரேசர் எடிஷனில் பானட்டிலிருந்து தொடங்கி டூயல் வொயிட் லைன்கள் காரின் ரூஃப் வரை நீண்டு, பந்தயக் கொடியால் ஈர்க்கப்பட்ட டிசைனுடன் முடிவடைகிறது. பானட் மற்றும் பில்லர்கள் முழுக்க முழுக்க கருப்பு நிறத்தில் உள்ளது, மிதக்கும் ரூஃப் போன்ற விளைவை இது உருவாக்கும் என்பதையும் டீஸர் உறுதிப்படுத்துகிறது. கூடுதலாக ஆல்ட்ரோஸ் ரேசர் ஆனது, டீசரில் வெளிப்படுத்தப்பட்டுள்ளபடி, சிங்கிள்-பேன் சன்ரூஃப் உடன் வருகிறது.
உட்புறம் மற்றும் வசதிகள்
டீஸர் 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் கியர் லீவரைச் சுற்றி கவனிக்கத்தக்க ஆரஞ்சு கலர் இன்செர்ட்களை ஹைலைட் செய்து அதன் உட்புறத்தின் ஒரு சிறப்பான பார்வையை நமக்குத் தருகிறது. ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, 360-டிகிரி கேமரா, ஆரஞ்சு கலர் ஆம்பியன்ட் லைட்ஸ், 7 இன்ச் முழு டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, வயர்லெஸ் போன் சார்ஜிங் மற்றும் வென்டிலேட்ட்டட் முன் சீட்கள் போன்ற புதிய அம்சங்களையும் ரேஸர் எடிஷன் அறிமுகப்படுத்துகிறது.
கூடுதலாக டீஸர் பிரீமியம் ஹேட்ச்பேக்கின் ஸ்போர்ட்டியர் வேரியன்ட்டின் எக்ஸாஸ்ட் சவுண்டையும் வெளிப்படுத்துகிறது. இந்த மாடல் நிலையான ஆல்ட்ரோஸ் உடன் ஒப்பிடும்போது அதன் எக்ஸாஸ்ட் நோட் மிகவும் ஸ்போர்ட்டியாக ஒலிக்கும் மேலும் அதன் ஸ்போர்ட்டி கவர்ச்சியை மேம்படுத்துகிறது.
மேலும் பார்க்க: டாடா ஆல்ட்ரோஸ் ரேசர் வழக்கமான ஆல்ட்ரோஸை விட 7 கூடுதல் வசதிகளை வழங்குகிறது
பவர்டிரெயின் ஆப்ஷன்கள்
ஆல்ட்ரோஸ் ரேசர் எடிஷனில் நெக்ஸானிலிருந்து பெறப்பட்ட அதிக சக்திவாய்ந்த 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் உள்ளது. இது 120 PS மற்றும் 170 Nm டார்க்கை கொடுக்கும் திறன் கொண்டது. இது ஒரு புதிய 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனை கொண்டிருக்கும் மற்றும் 7-ஸ்பீடு டூயல்-கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனையும் (DCT) பெறலாம்.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
டாடா ஆல்ட்ராஸ் ரேசரின் விலை ரூ.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஹூண்டாய் i20 N லைனுக்கு நேரடி போட்டியாளராக இருக்கும்.
மேலும் படிக்க: ஆல்ட்ரோஸ் ஆன் ரோடு விலை