கியாவின் புதிய எஸ்யூவிக்கு சைரோஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது
published on நவ 11, 2024 08:03 pm by rohit for க்யா syros
- 119 Views
- ஒரு கருத்தை எழுதுக
கியா -வின் எஸ்யூவி வரிசையில் சைரோஸ் ஆனது சோனெட் மற்றும் செல்டோஸ் இடையே விற்பனைக்கு கொண்டு வரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சமீபத்திய டீஸரில் LED DRL -களுடன் வெர்டிகலாக உள்ள 3-பாட் LED ஹெட்லைட்களை பார்க்க முடிகிறது.
-
முந்தைய டீஸர்கள் ஃபிளேர்டு வீல் ஆர்ச்கள், நீளமான ரூஃப் ரெயில்கள் மற்றும் எல் வடிவ டெயில் விளக்குகள் ஆகியவை இருக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.
-
கேபின் டூயல்-டோன் தீம் மற்றும் 2-ஸ்போக் ஸ்டீயரிங் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
டூயல் டிஜிட்டல் டிஸ்பிளேக்கள், வென்டிலேட்டட் சீட்கள் மற்றும் 6 ஏர்பேக்குகள் ஆகியவை இந்த காரில் இருக்கும்.
-
கியா சோனெட்டின் அதே இன்ஜின் ஆப்ஷன்களுடன் இதை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
விரைவில் இந்த கார் அறிமுகமாகமாகவுள்ளது; விலை ரூ.9 லட்சத்தில் இருந்து தொடங்கலாம் (எக்ஸ்-ஷோரூம்) என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய எஸ்யூவியின் டீஸர் ஸ்கெட்ச்கள் வெளியிடப்பட்டுள்ளன மேலும் இதற்கு கியா சைரோஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தியாவில் கார் தயாரிப்பாளரால் டிரேட்மார்க் செய்யப்பட்ட 'சைரோஸ்' என்ற பெயர் - அதன் எஸ்யூவி -களுக்கு 'S' என்ற எழுத்தில் பெயரிடும் பிராண்டின் நடைமுறைக்கு ஏற்றபடி உள்ளது. இந்த புதிய கியா எஸ்யூவி -யை பற்றி இதுவரை தெரிந்த விவரங்கள் அனைத்தும் இங்கே:
கியா சைரோஸ் வடிவமைப்பு
சமீபத்தில் வெளியிடப்பட்ட வடிவமைப்பு ஓவியங்களின் அடிப்படையில் சைரோஸ் உயரமான, மிரட்டலான தோற்றத்தை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். இதன் வடிவமைப்பானது கியா EV9 எலக்ட்ரிக் எஸ்யூவி மற்றும் கியா கார்னிவல் ஆகிய இரண்டு கார்களிலும் இருந்து பெறப்பட்டுள்ளது. பெயரை உறுதிப்படுத்தும் சமீபத்திய டீஸரில் நீண்ட LED DRL -கள் மற்றும் செங்குத்தான 3-பாட் LED ஹெட்லைட்களை பார்க்க முடிகிறது.
வெளிப்புறத்தில் பெரிய விண்டோ பேனல்கள், ஒரு ஃபிளாட் ரூஃப் மற்றும் சி-பில்லரில் ஜன்னல் பெல்ட்லைனில் ஒரு கிங்க் ஆகியவை அடங்கும். டீஸர் ஸ்கெட்ச் -கள் வீல் ஆர்ச்சுகள், ஸ்ட்ராங் ஷோல்டர் லைன் மற்றும் ஃப்ளஷ் டைப் டோர் ஹேண்டில்கள் நீளமான ரூஃப் ரெயில்கள், எல்-வடிவ டெயில் லைட்ஸ் மற்றும் நிமிர்ந்த டெயில்கேட் ஆகியவற்றைக் காட்டின.
கியா சைரோஸ் கேபின் & கருவிகள்
கேபின் விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை என்றாலும் சோனெட் மற்றும் செல்டோஸ் எஸ்யூவிகளை போன்று இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். எனவே கியா இதற்கு டூயல்-டோன் இன்ட்டீரியர் தீம் -ஐ கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம். அதே நேரத்தில் ஆன்லைனில் வெளியான சில ஸ்பை ஷாட்கள் 2-ஸ்போக் ஸ்டீயரிங் இருப்பதை காட்டுகின்றன.
இரண்டு கியா எஸ்யூவிகளிலும் ஆட்டோ க்ளைமேட் கன்ட்ரோல், பனோரமிக் சன்ரூஃப், வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் போன்ற டூயல் டிஸ்பிளே செட்டப்பை கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள், ரிவர்சிங் கேமரா மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) ஆகியவை இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
மேலும் பார்க்க: 2024 அக்டோபரில் அதிகம் விற்பனையான டாப் 15 கார்களை பாருங்கள்
கியா சைரோஸ் இன்ஜின் & கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள்
சைரோஸின் பவர்டிரெய்ன் தேர்வுகளை கியா இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும். சோனெட்டின் அதே இன்ஜின்-கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் கியா எஸ்யூவி -யை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம். அவற்றின் விவரங்கள் பின்வருமாறு:
விவரங்கள் |
1.2-லிட்டர் N/A பெட்ரோல் |
1-லிட்டர் டர்போ-பெட்ரோல் |
1.5 லிட்டர் டீசல் |
பவர் |
83 PS |
120 PS |
116 PS |
டார்க் |
115 Nm |
172 Nm |
250 Nm |
டிரான்ஸ்மிஷன் |
5-ஸ்பீடு MT |
6-ஸ்பீடு iMT*/ 7-ஸ்பீடு DCT^ |
6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு iMT, 6-ஸ்பீடு AT |
*iMT - இன்டெலிஜென்ட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் (கிளட்ச்லெஸ் மேனுவல்)
^DCT - டூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்
கியா சைரோஸ் காரின் விலை மற்றும் போட்டியாளர்கள்
கியா சைரோஸின் ஆரம்ப விலை ரூ.9 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என எதிர்பார்க்கிறோம். இதற்கு இந்தியாவில் நேரடி போட்டியாளர்களாக எந்த கார்களும் இருக்காது.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.