• English
  • Login / Register

புதிய Honda Amaze VX வேரியன்ட் 7 படங்களில் விளக்கப்பட்டுள்ளது

published on டிசம்பர் 13, 2024 10:17 pm by kartik for ஹோண்டா அமெஸ்

  • 12 Views
  • ஒரு கருத்தை எழுதுக

இந்த மிட்-ஸ்பெக் வேரியன்ட்டின் விலை ரூ.9.09 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. ஆட்டோ ஏசி, வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் லேன் வாட்ச் கேமரா போன்ற வசதிகளை கொண்டுள்ளது.

புதிய தலைமுறை ஹோண்டா அமேஸ் அண்மையில் இந்தியாவில் அறிமுகமானது. இதன் டெலிவரிகள் ஜனவரி 2025 -ல் தொடங்கவுள்ளன. இது 3 வேரியன்ட்களில் கிடைக்கிறது: V, VX மற்றும் ZX. இங்கே புதிய ஹோண்டா அமேஸின் மிட்-ஸ்பெக் VX வேரியன்ட்டை 7 விரிவான படங்களில் விளக்கியுள்ளோம். அமேஸ் சீரிஸில் பணத்திற்கு சிறந்த மதிப்பை கொடுக்கும் சிறந்த வேரியன்ட்களில் இதுவும் ஒன்றாக உள்ளது. இது ஒருவருக்குத் தேவையான அடிப்படை வசதிகளுடன் வருகிறது.

முன்பக்கம்

புதிய ஹோண்டா அமேஸ் VX எலிவேட் போன்ற கிரில் மற்றும் குரோம் ஸ்ட்ரிப் முழுவதுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இது டபுள்-பேரல் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்களை கொண்டுள்ளது, எலிவேட்டில் இருப்பதை போன்ற எல்இடி புரொஜெக்டர் ஃபாக் லைட்ஸ்களும் உள்ளன.

பக்கவாட்டு தோற்றம்

புதிய ஹோண்டா அமேஸின் VX வேரியன்ட் 15-இன்ச் சில்வர் அலாய் வீல்கள், பாடி டோர் ஹேண்டில்கள் மற்றும் டர்ன் இன்டிகேட்டர்களுடன் கூடிய பவர்-ஃபோல்டிங் ORVM -களுடன் வருகிறது. நீங்கள் உற்று நோக்கினால் VX வேரியன்ட் லைன் வாட்ச் பாதுகாப்பு கேமராவை கொண்டுள்ளது. இது இடது ORVM -க்கு கீழே உள்ளது.

விஎக்ஸ் 6 வண்ணங்களில் கிடைக்கிறது: அப்சிடியன் ப்ளூ, ரேடியன்ட் ரெட் மெட்டாலிக், பிளாட்டினம் ஒயிட் பேர்ல், கோல்டன் பிரவுன் மெட்டாலிக், மெட்ராய்டு கிரே மெட்டாலிக் மற்றும் லூனார் சில்வர் மெட்டாலிக்.

பின்புறம்

அமேஸ் VX வேரியன்ட்டின் பின்பக்கம் ஹோண்டா சிட்டி காரில் இருந்து நிறைய விஷயங்களை பெறுகிறது. எல்இடி டெயில் லைட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன என்றாலும் கூட அதன் தனித்துவமான கவர்ச்சிக்காக வெவ்வேறு லைட்டிங் எலமென்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பின்புற பம்பர் மேல் மாடலை போலவே உள்ளது, ரிஃப்ளெக்டர்களும் உள்ளன.

இதே போன்று படிக்க: 2024 ஹோண்டா அமேஸ் வேரியன்ட் வாரியான வசதிகள் விளக்கப்பட்டுள்ளன

இன்ட்டீரியர்

புதிய ஹோண்டா அமேஸின் மிட்-ஸ்பெக் வேரியன்ட், கேபினுக்கு டூயல்-டோன் பிளாக் மற்றும் பெய்ஜ் கலர் கலவையுடன் உள்ளது. ஃபுளோட்டிங் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் ஏசி கன்ட்ரோல்கள் ஆகியவற்றுடன் டேஷ்போர்டு எலிவேட் போலவே உள்ளது. டேஷ்போர்டில் கடினமான பிளாஸ்டிக் மற்றும் டாஷ்போர்டின் மேல் மற்றும் கீழ் பாதியை பிரிக்கும் வகையில் சிறிய குரோம் பீஸ் உள்ளது.

ஆனால் இந்த வேரியன்ட்டில் கேபின் முழுவதும் கான்ட்ராஸ்ட் சில்வர் கொடுக்கப்படவில்லை ஆனால் அது ஹையர் எண்ட் மாடலில் வழங்கப்படுகிறது. மேலும் இந்த வேரியன்ட்டில் ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்டரி மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: 2024 டிசம்பர் மாதம் சப்காம்பாக்ட் எஸ்யூவி -களுக்கான காத்திருப்பு கால விவரங்கள்

வசதிகள்

மிட்-ஸ்பெக் VX வேரியன்ட் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 8-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 7-இன்ச் செமி-டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் 6-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் ஆகியவற்றை கொண்டுள்ளது. இது பின்புற வென்ட்கள், PM 2.5 ஏர் ஃபியூரிபையர், வயர்லெஸ் சார்ஜிங், ஸ்டீயரிங்கில் உள்ள ஆடியோ கன்ட்ரோல்கள், புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் மற்றும் கனெக்டட் கார் டெக்னாலஜி கூடிய ஆட்டோ ஏசி ஆகியவற்றை கொண்டுள்ளது.

பாதுகாப்புக்காக ஹோண்டா அமேஸ் விஎக்ஸ் வேரியன்ட்டில் 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், கேமராவுடன் கூடிய பின்புற பார்க்கிங் சென்சார்கள், ISOFIX சைல்டு சீட் ஆங்கர்கள் மற்றும் லேன்வாட்ச் கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. VX வேரியன்ட் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) எதுவும் இல்லை. அந்த வசதி டாப்-எண்ட் வேரியன்ட்டில் மட்டுமே கிடைக்கும்.

இன்ஜின்

ஹோண்டா அமேஸில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது, இது 90 PS மற்றும் 110 Nm அவுட்புட்டை கொடுக்கிறது. மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது CVT கியர் பாக்ஸ் உடன் 19.46 கி.மீ/லி மைலேஜுடன் வருகிறது. 

விலை மற்றும் போட்டியாளர்கள்

புதிய ஹோண்டா அமேஸ் VX வேரியன்ட்டின் மேனுவல் டிரான்ஸ்மிஷனுக்கான விலை ரூ.9.09 லட்சம் ஆக உள்ளது. அதே நேரத்தில் சிவிடி கியர்பாக்ஸின் விலை ரூ.9.99 லட்சம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது மாருதி டிசையர், ஹூண்டாய் ஆரா, மற்றும் டாடா டிகோர் போன்றவற்றுக்கு போட்டியாக இது இருக்கும்.

விலை விவரங்கள் அனைத்தும் அறிமுகம், டெல்லி, எக்ஸ்-ஷோரூம் -க்கானவை

இதையும் பாருங்கள்: ஸ்கோடா கைலாக்: நீங்கள் வாங்க வேண்டிய சிறந்த வேரியன்ட் எது?

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

மேலும் படிக்க: ஹோண்டா அமேஸ் ஆன் ரோடு விலை

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Honda அமெஸ்

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending சேடன் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • ஆடி ஏ5
    ஆடி ஏ5
    Rs.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: மார, 2025
  • டெஸ்லா மாடல் 2
    டெஸ்லா மாடல் 2
    Rs.45 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜூல, 2025
  • வோல்க்ஸ்வேகன் id.7
    வோல்க்ஸ்வேகன் id.7
    Rs.70 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2025
×
We need your சிட்டி to customize your experience