சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

நெக்ஸ்ட்-ஜென் Maruti Swift முதல் Mercedes AMG C43 வரை: 2023 நவம்பர் -ல் வெளியான புதிய கார்கள்

ஸ்கோடா குஷாக் க்காக டிசம்பர் 01, 2023 04:58 pm அன்று shreyash ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

கூடுதலாக மாஸ்-மார்க்கெட் மாடல் அப்டேட்களின் உலகளாவிய அறிமுகங்களும், மெர்சிடிஸ்-பென்ஸ் மற்றும் லோட்டஸ் இரண்டிலிருந்து பிரீமியம் பிரிவுகளில் வெளியீடுகள் இருந்தன.

2023 ஆம் ஆண்டின் பரபரப்பான பண்டிகைக் காலம் நிறைவடைந்துவிட்டது, புதிய கார்கள், சில ஸ்பெஷல் எடிஷன்கள் மற்றும் ஃபேஸ்லிஃப்ட்களுடன் சிலர் எதிர்பார்த்ததை விட அதிகமான வாகனங்களால் நிரம்பியது. பட்டியலில் 3 உலகளாவிய வெளியீடுகள் மற்றும் ஃபோக்ஸ்வேகன் மற்றும் ஸ்கோடா கார்களின் ஸ்பெஷல் எடிஷன்கள் உள்ளன, அதே நேரத்தில் லோட்டஸ் இந்தியாவில் எலக்ட்ரிக் எஸ்யூ -வியுடன் அறிமுகமானது. நவம்பர் மாதத்தில் அறிமுகமான மற்றும் வெளியான அனைத்து மாடல்களின் சுருக்கமான விவரங்களும் இங்கே.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் விர்ட்டஸின் ஸ்பெஷல் எடிஷன்

volkswagen taigun மற்றும் Volkswagen Virtus இரண்டு கார்களுக்கும் நவம்பர் 2023 -ல் ஸ்பெஷல் எடிஷன்கள் கிடைத்தன. டைகுன் எஸ்யூவி ஆனது 2 புதிய பதிப்புகளை பெற்றது. டிரெயில் மற்றும் சவுண்ட் - அதே நேரத்தில் விர்ட்டஸ் ஆனது சவுண்ட் எடிஷனை மட்டுமே பெற்றது. டிரெயில் எடிஷன் என்பது டைகுனின் ஆஃப்-ரோடு ஃபோகஸ்டு பதிப்பாகும் பாடி டீக்கால்ஸ், பிளாக்-அவுட் ஃப்ரண்ட் கிரில், ஆல் பிளாக் நிற இன்டீரியர் மற்றும் ரூஃப் ரேக் போன்ற ஒப்பனை மாற்றங்களை மட்டுமே பெறுகிறது. எஸ்யூவி -யின் இந்த ஸ்பெஷல் எடிஷன் டைகன் GT மேனுவல் வேரியன்ட்டை போன்றே விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மறுபுறம், டைகுன் மற்றும் விர்ட்டஸின் சவுண்ட் எடிஷன் -கள் டாப்-ஸ்பெக் 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் வேரியன்ட்களுடன் மட்டுமே வழங்கப்படும் இசை சார்ந்த ஸ்பெஷல் எடிஷன்கள். இவை சப்வூஃபர் மற்றும் சி-பில்லரில் ஸ்பெஷல் பாடி டீக்கால்களுடன் வருகின்றன. சவுண்ட் எடிஷன் -களுக்கான விலை ரூ. 15.52 லட்சத்தில் இருந்து தொடங்குகின்றன (எக்ஸ்-ஷோரூம் பான் இந்தியா).

ஸ்கோடா குஷாக் ஸ்லாவியா எலிகன்ஸ் எடிஷன்கள்

ஸ்கோடா இன்னும் அறிமுகப்படுத்தியுள்ளது குஷாக் மற்றும் ஸ்லாவியாவின் மற்றொரு பதிப்பு, அதாவது 'எலிகன்ஸ்' பதிப்பு. இரண்டு மாடல்களின் இந்த சிறப்புப் பதிப்பில் ஒரு தனித்துவமான டீப் பிளாக் வெளிப்புற ஷேடு மற்றும் சில எக்ஸ்ட்ரீயர் மற்றும் உட்புற ஆட் ஆன்களுடன் கிடைக்கும், சுமார் ரூ. 20,000 பிரீமியம். எலிகன்ஸ் பதிப்பு இரண்டு கார்களின் டாப்-ஸ்பெக் 'ஸ்டைல்' வேரியன்ட்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது, அவற்றின் 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மட்டுமே கிடைக்கும்.

இதையும் பார்க்கவும்: ஸ்கோடா குஷாக் எலிகன்ஸ் எடிஷன் டீலர்ஷிப்களுக்கு வருகிறது

நியூ-ஜென் மாருதி ஸ்விஃப்ட் அறிமுகமானது

சுஸூகி ஜப்பானில் புதிய தலைமுறை Swift மாடலை அறிமுகப்படுத்தியிருந்தது, ஜப்பான் மொபிலிட்டி ஷோவில் வைக்கப்பட்ட கான்செப்ட்டை தொடர்ந்து. புதிய சுஸுகி ஸ்விஃப்ட் புதுப்பித்த வடிவமைப்பு மற்றும் புதிய கேபினைப் பெறுவது மட்டுமல்லாமல், புதுப்பிக்கப்பட்ட 1.2-லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினையும் பெறுகிறது. அதன் உலகளாவிய அறிமுகத்திற்குப் பிறகு, சோதனை காரான புதிய தலைமுறை ஸ்விஃப்ட் இந்திய சாலைகளில் சுற்றிக் கொண்டிருந்ததையும் பார்க்க முடிந்தது, மற்றும் இது 2024 முதல் பாதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்றாம் தலைமுறை ரெனால்ட் டஸ்டர் வெளியிடப்பட்டது

2024 Renault Duster உலகளவில் வெளியிடப்பட்டது, 2025 ஆண்டில் இந்தியாவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய டஸ்டர் கார் தயாரிப்பாளரின் புதிய CMF-B இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டது, இது டேசியா பிக்ஸ்டர் கான்செப்டில் இருந்து வடிவமைப்புக்கான உத்வேகத்தை எடுத்துக் கொள்கிறது. ஐரோப்பா-ஸ்பெக் டஸ்டர், மைல்ட்-ஹைப்ரிட், ஸ்ட்ராங்-ஹைப்ரிட் மற்றும் எல்பிஜி உள்ளிட்ட பல புதிய பவர்டிரெய்ன் ஆப்ஷன்களை வழங்குகிறது.

இந்தியாவில் கடைசியாக விற்கப்பட்ட பழைய இந்தியா-ஸ்பெக் ரெனால்ட் டஸ்ட்டர் காரை புதிய டஸ்ட்டர் காருடன் ஒப்பிட்டு பார்த்துள்ளோம்.

புதிய தலைமுறை ஸ்கோடா சூப்பர்ப் உலகளவில் அறிமுகமானது

நான்காவது தலைமுறை skoda superb உலக அளவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட வடிவமைப்பு, முற்றிலும் புதிய கேபின் மற்றும் பெட்ரோல், டீசல் மற்றும் கலப்பினங்கள் உட்பட பல்வேறு புதிய பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன். செடான் எஸ்டேட் மற்றும் செடான் பதிப்புகள் இரண்டிலும் அறிமுகமாகியிருந்தாலும், ஸ்கோடா சூப்பர்ப் செடான் பதிப்பை மட்டுமே இந்தியா பெறும். ஜூன் 2024 -ல் ஸ்கோடா புதிய தலைமுறை சூப்பர்ப் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தலாம். இதன் விலை ரூ. 36 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் பார்க்கவும்: 5 டோர் மஹிந்திரா மீண்டும் சோதனையின் போது தென்பட்டுள்ளது… உற்பத்திக்கு தயாராகவுள்ளதை போல தெரிகிறது

ஹூண்டாய் டுக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் குளோபல் வெளியீடு

Hyundai Tucson -க்கு ஒரு மிட்லைஃப் அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது மேலும் சமீபத்தில் உலகளவில் வெளியிடப்பட்டது. மாற்றங்கள் புதிய வடிவிலான வெளிப்புற வடிவமைப்பு மற்றும் புதுப்பிக்கப்பட்ட கேபின் ஆகியவற்றை உள்ளடக்கியது. ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட டுக்ஸான் எஸ்யூவிக்கான பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் கிடைப்பதை ஹூண்டாய் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. 2024 -ன் இரண்டாம் பாதியில் அல்லது 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படும் டுக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் முதலில் ஐரோப்பிய சந்தைகளில் அறிமுகமாக உள்ளது.

மெர்சிடிஸ்-AMG C43 அறிமுகப்படுத்தப்பட்டது

புதிய Mercedes-AMG C43 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, ஆனால் 4-டோர் செடான் அவதாரத்தில் வந்துள்ளது. புதிய AMG C43 செடான் ஒரு அவுட்புட் குறைக்கப்பட்ட இன்ஜினை கொண்டுள்ளது, ஆனால் ஃபார்முலா 1- லிருந்துபெறப்பட்ட டர்போசார்ஜிங் தொழில்நுட்பம் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இது முன்பை விட மிகவும் சக்தி வாய்ந்ததாக இந்த காரை மாற்றுகிறது. இதன் விலை ரூ.98 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பான் இந்தியா) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Mercedes-Benz GLE ஃபேஸ்லிஃப்ட் அறிமுகப்படுத்தப்பட்டது

இந்தியாவில் Mercedes-Bnez GLE ஃபேஸ்லிஃப்ட் அறிமுகப்படுத்தப்பட்டது. பிப்ரவரி 2023 இல் அதன் உலகளாவிய அறிமுகத்திற்குப் பிறகு இங்கே அறிமுகமானது. GLE ஃபேஸ்லிஃப்ட்டில் மாற்றங்கள் நுட்பமாகவே இருக்கின்றன, மேலும் இது புதுப்பிக்கப்பட்ட பவர்டிரெய்ன் ஆப்ஷன்களையும் கொண்டுள்ளன. GLE ஃபேஸ்லிஃப்ட்டின் விலை ரூ. 96.40 லட்சம் முதல் ரூ. 1.15 கோடி (எக்ஸ்-ஷோரூம் பான் இந்தியா) வரை இருக்கும்.

இதையும் பார்க்கவும்: தோனியின் கேரேஜில் சேர்ந்த தனித்துவமான Mercedes-AMG G 63 எஸ்யூவி

லோட்டஸ் எலென்ட்ரே எஸ்யூவி அறிமுகப்படுத்தப்பட்டது

பிரிட்டிஷ் கார் தயாரிப்பு நிறுவனமான லோட்டஸ், அதன் பிரீமியம் எலக்ட்ரிக் பெர்ஃபாமன்ஸ் எஸ்யூவியான எலெட்ரே மூலம் இந்திய சந்தையில் நுழைந்தது. இது ஒரு ஆக்ரோஷமான தோற்றம் மற்றும் ஸ்போர்ட்டியான உட்புறங்களை கொண்டுள்ளது. எலெட்ரே எஸ்யூவியின் விலை ரூ.2.55 கோடி முதல் ரூ.2.99 கோடி வரை இருக்கிறது. லோட்டஸ் இந்தியாவில் தனது முதல் டீலர்ஷிப்பை புதுதில்லியில் தொடங்கியுள்ளது.

வோல்வோ EM90 எலக்ட்ரிக் MPV -யின் உலகளாவிய அறிமுகம்

Volvo அதன் புதிய ஆல் எலக்ட்ரிக் MPV, EM90 உடன் ஆடம்பர MPV பிரிவில் நுழைந்தது. EM90 ஆனது 116 kWh பேட்டரி பேக்கை கொண்டுள்ளது, இது 738 கி.மீ. CLTC (சீனா லைட் டியூட்டி வெஹிகிள் டெஸ்ட் சைக்கிள்) ரேஞ்ச் -ஐ கொண்டுள்ளது. EM90 எலக்ட்ரிக் MPV முதலில் சீனாவில் வெளியிடப்படும், அதைத் தொடர்ந்து மற்ற உலக சந்தைகளில் வெளியிடப்படும்.

மேலும் படிக்க: ஸ்கோடா குஷாக் ஆன் ரோடு விலை

Share via

Write your Comment on Skoda குஷாக்

explore similar கார்கள்

ஸ்கோடா குஷாக்

பெட்ரோல்18.09 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புதிய வேரியன்ட்
Rs.2.84 - 3.12 சிஆர்*
புதிய வேரியன்ட்
பேஸ்லிப்ட்
Rs.1.03 சிஆர்*
புதிய வேரியன்ட்
Rs.11.11 - 20.50 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.13.99 - 24.89 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை