5 டோர் மஹிந்திரா மீண்டும் சோதனையின் போது தென்பட்டுள்ளது… உற்பத்திக்கு தயாராகவுள்ளதை போல தெரிகிறது
modified on நவ 27, 2023 05:34 pm by rohit for மஹிந்திரா தார் ராக்ஸ்
- 25 Views
- ஒரு கருத்தை எழுதுக
5-டோர் மஹிந்திரா தார் 2024 -ல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதன் விலை ரூ. 15 லட்சத்தில் இருந்து தொடங்கலாம் (எக்ஸ்-ஷோரூம்).
-
இந்த மாடலில் LED ஹெட்லைட்கள் மற்றும் டெயில்லைட்கள், அலாய் வீல்கள் மற்றும் சிங்கிள்-பேன் சன்ரூஃப் ஆகியவை இருந்தன.
-
இதன் கேபினில் பெரிய டச் ஸ்க்ரீன், டூயல் ஜோன் கிளைமேட் ஏசி மற்றும் பின்புற ஏசி வென்ட்கள் இருக்கும்.
-
மஹிந்திரா 3-டோர் தார் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களுடன் ஆனால் மாற்றியமைக்கப்பட்ட அவுட்புட்களுடன் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ரியர் வீல் டிரைவ் (RWD) மற்றும் 4 வீல் டிரைவ் (4WD) ஆகிய இரண்டு ஆப்ஷன்களுடன் வழங்கப்பட வேண்டும்.
2024 நெருங்கி வருவதால், பல புதிய கார்கள் (நிறைய எஸ்யூவி -கள் உட்பட) எங்கள் சந்தையில் விற்பனைக்கு காத்திருக்கின்றன. அந்த பட்டியலில் ஒரு எஸ்யூவி 5-டோர் மஹிந்திரா தார், இது பலமாக உருவம் மறைக்கப்பட்டு பலமுறை சோதனையின் போது படம் பிடிக்கப்பட்டுள்ளது. மஹிந்திராவின் நீளமான ஆஃப்-ரோடரின் மற்றொரு சோதனை கார் மீண்டும் படம் பிடிக்கப்பட்டுள்ளது, உற்பத்திக்குத் தயாராக உள்ளதை போல தெரிகிறது.
கவனிக்கப்பட்ட விவரங்கள்
எஸ்யூவி -யானது உற்பத்திக்கு தயாராக இருக்கும் LED ஹெட்லைட்கள் மற்றும் டெயில்லைட்கள், புதிதாக வடிவமைக்கப்பட்ட கிரில், அலாய் வீல்கள் மற்றும் ஹாலோஜன் ஃபாக் லைட்ஸ் உடன் காணப்பட்டது. முந்தைய ஸ்பை ஷாட்களில் பார்த்தது போல் இது சிங்கிள்-பேன் சன்ரூஃப் மற்றும் வட்ட LED DRL -களையும் கொண்டிருந்தது. 5-டோர் மாடலுக்காக செய்யப்பட்ட மற்ற திருத்தங்களில் கூடுதல் டோர்கள் மற்றும் நீளமான வீல்பேஸ் ஆகியவை அடங்கும்.
கேபின் விவரங்கள் ?
எஸ்யூவியின் வெளிப்புறம் மட்டும் புதியதாக இருக்காது 3-டோர் எடிஷன் -னில் இருந்து முழுமையாக வேறுபட்டு இருக்கும். ஆனால் அதன் உட்புறத்திலும் வேறுபாடுகள் இருக்கும். ஒரு பழைய ஸ்பை ஷாட், ஒரு பெரிய டச் ஸ்கிரீன் (அநேகமாக ஸ்கார்பியோ N -லிருந்து) இருப்பதைக் குறிக்கிறது, புதிய கேபின் தீம் இருக்கும்.
பெரிய டச் ஸ்கிரீன் மற்றும் சன்ரூஃப் தவிர, 5-டோர் தார் டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் பின்புற ஏசி வென்ட்களையும் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பாதுகாப்பு வலையில் ஆறு ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ரிவர்சிங் கேமரா மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) ஆகியவை அடங்கும்.
ஹூட்டின் கீழ் வழக்கமான பவர்டிரெய்ன்கள் கொடுக்கப்படலாம்
மஹிந்திரா தற்போதைய 3-டோர் மாடலில் அதே 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 2.2-லிட்டர் டீசல் இன்ஜின்களுடன் நீண்ட வீல்பேஸ் தார் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இருப்பினும் அதிக அவுட்புட்களுடன். இரண்டு யூனிட்களும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை பெற வாய்ப்புள்ளது. 5-டோர் தார் ரியர்-வீல் டிரைவ் (RWD) மற்றும் 4-வீல் டிரைவ் (4WD) ஆகிய இரண்டு ஆப்ஷன்களுடன் வரலாம்.
இதையும் படியுங்கள்: ஒரு காலண்டர் ஆண்டின் இறுதியில் புதிய கார் வாங்குவதன் அனைத்து நன்மைகள் மற்றும் தீமைகள்
விலை மற்றும் போட்டியாளர்கள்
5-டோர் மஹிந்திரா தார் ஆரம்ப விலை ரூ.15 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி ஜிம்னி மற்றும் வரவிருக்கும் 5-டோர் ஃபோர்ஸ் கூர்க்கா ஆகிய கார்களுக்கு மாற்றாக இருக்கும்.
மேலும் படிக்க: தார் ஆட்டோமெட்டிக்