2024 Renault Duster உலகளவில் வெளியிடப்பட்டது, 2025 ஆண்டில் இந்தியாவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
published on நவ 29, 2023 05:09 pm by shreyash for ரெனால்ட் டஸ்டர் 2025
- 52 Views
- ஒரு கருத்தை எழுதுக
மூன்றாம் தலைமுறை ரெனால்ட் டஸ்டர், டேசியா பிக்ஸ்டர் கான்செப்ட்டில் இருந்து வடிவமைப்பு -க்கான உத்வேகத்தை பெற்றுள்ளது.
-
2024 ரெனால்ட் டஸ்ட்டர் ஆனது CMF-B கட்டமைப்பு தளத்தை அடிப்படையாகக் கொண்டது.
-
மெலிதான ஹெட்லைட்கள், Y வடிவ LED DRL -கள் மற்றும் டெயில் லேம்ப்கள் ஆகியவற்றைப் பெறுகிறது.
-
உள்ளே, புதிய தலைமுறை டஸ்டர் 10.1 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே கொண்டுள்ளது.
-
பாதுகாப்பு கருவியில் பல ஏர்பேக்ஸ்,எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC) மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை அடங்கும்.
-
2025-ல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம்.
ரெனால்ட் நிறுவனத்தின் பட்ஜெட் சார்ந்த பிராண்டான டேசியா, மூன்றாம் தலைமுறை டஸ்டர் காரை உலகளவில் வெளியிட்டது. புதிய எஸ்யூவி CMF-B கட்டமைப்பு தளத்தை அடிப்படையாகக் கொண்டது, இது டேசியா பிக்ஸ்டர் கான்செப்டில் இருந்து வடிவமைப்பு உத்வேகத்தை பெறுகிறது. இது முதலில் 2024 -ல் ஐரோப்பிய சந்தைகளில் வரும், மேலும் 2025 -ல் இந்தியாவில் விற்பனைக்கு வரலாம்.
முதல் தலைமுறை டஸ்டர் இந்தியாவில் 2012 -ல் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் 2022 ஆண்டில் அதன் விற்பனை நிறுத்தப்பட்டது. இந்த கார் நமது சந்தையில் ரெனால்ட் நிறுவனம் வலுவாக கால்பதிக்க உதவியது.
இதையும் பார்க்கவும்: 2024 Renault Duster உலகளவில் வெளியிடப்பட்டது, 2025 ஆண்டில் இந்தியாவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
பிக்ஸ்டர் கான்செப்ட் -டில் இருந்து ஈர்க்கப்பட்ட வடிவமைப்பு
புதிய டஸ்டர் அதன் பாக்ஸி விகிதாச்சாரத்தையும் எஸ்யூவி சில்ஹவுட்டையும் தக்க வைத்துக் கொண்டாலும், அது பிக்ஸ்டர் கான்செப்ட்டில் இருந்து அதன் வடிவமைப்புக்கான உத்வேகத்தைப் பெறுகிறது. இது முற்றிலும் புதிய கிரில் வடிவமைப்பு, ஒய்-வடிவ LED DRL -கள் கொண்ட மெலிதான ஹெட்லைட்கள் மற்றும் ஃபாக் லைட்களுடன் கூடிய பெரிய ஏர் டேம் ஆகியவற்றை பெறுகிறது.
பக்கவாட்டில், ஸ்கொயர் வீல் ஆர்ச்கள் மற்றும் டூயல்-டோன் அலாய் வீல்கள், பக்கவாட்டு கிளாடிங் மற்றும் ரூஃப் ரெயில்களுடன் கரடுமுரடான தன்மையைக் கூட்டி, முரட்டுத்தனமான தோற்றத்தைக் கொடுக்கிறது. புதிய டஸ்டரின் பின்புற டோர் ஹேண்டில்கள் சி-பில்லரில் வைக்கப்பட்டுள்ளன. பின்புறத்தில், இது Y- வடிவ LED டெயில் விளக்குகள் மற்றும் ஒரு முக்கிய ஸ்கிட் பிளேட்டை பெறுகிறது.
இதையும் பார்க்கவும்: 2031-ம் ஆண்டுக்குளாக 5 புதிய ICE மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிடும் மாருதி நிறுவனம்
உள்ளே இருந்து எப்படி தெரிகிறது?
2024 ரெனால்ட் டஸ்ட்டர் -ன் உட்புறம் முழுமையாக புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஏசி வென்ட்கள் இப்போது ஒய் வடிவ இன்செர்ட்களையும் கொண்டுள்ளது. புதிய டஸ்டரில் 10.1 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் ஆகியவை புதிய டஸ்டரில் உள்ள மற்ற அம்சங்களாகும்.
பல ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ஹில் அசிஸ்ட், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்டுள்ளன.
இதையும் பார்க்கவும்: ஒரு காலண்டர் ஆண்டின் இறுதியில் புதிய கார் வாங்குவதன் அனைத்து நன்மைகள் மற்றும் தீமைகள்
புதிய பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
புதிய தலைமுறை டஸ்டர் ஹைப்ரிட் மற்றும் LPG உள்ளிட்ட பல பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் வருகிறது. தேர்வுகளில் 130 PS, 1.2 லிட்டர் பெட்ரோல் பவர்டிரெய்ன் 48 V மைல்ட் ஹைப்ரிட் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது, ஒரு ஸ்ட்ராங் ஹைப்ரிட் 140 PS 1.6-லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் 1.2kWh பேட்டரி பேக் மூலம் இயக்கப்படும் 2 எலக்ட்ரிக் மோட்டார்கள் ஆகியவை அடங்கும். மூன்றாவது பெட்ரோல் மற்றும் LPG கலவையாக இருக்கும்.
புதிய ஜென் டஸ்டரின் இந்தியா-ஸ்பெக் பதிப்பிற்கான பவர்டிரெய்ன்கள் பற்றிய கூடுதல் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
எதிர்பார்க்கப்படும் இந்திய அறிமுகம் மற்றும் போட்டியாளர்கள்
மூன்றாம் தலைமுறை ரெனால்ட் டஸ்டர் இந்தியாவில் 2025 ஆம் ஆண்டில் வெளியிடப்படலாம். இங்கே, இதன் விலை ரூ. 10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் இருக்கலாம். ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக், ஹோண்டா எலிவேட், எம்ஜி ஆஸ்டர், மற்றும் சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் ஆகியவற்றுடன் போட்டியிடும்.
0 out of 0 found this helpful