சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

MG Windsor EV-இன் பேட்டரி-அஸ்-எ-சர்வீஸ் (BaaS) ரெண்டல் புரோகிராம் பற்றிய முழு விவரங்கள்

எம்ஜி விண்ட்சர் இவி க்காக செப் 13, 2024 05:41 pm அன்று anonymous ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

விண்ட்சர் EV-இன் விலை பேட்டரி பேக்கின் விலையை விலக்குகிறது. அதற்கு பதிலாக, பேட்டரியின் பயன்பாட்டிற்கு நீங்கள் தனித்தனியாக பணம் செலுத்துகிறீர்கள். இதைப் பற்றி இந்தக் கட்டுரையில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.

MG விண்ட்சர் EV இந்தியாவில் அறிமுக விலையான ரூ.9.99 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இது டாடா பஞ்ச் EV உடன் போட்டியிடும் வகையில் இதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அதன் விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்கள் அதை டாடா நெக்ஸான் EV மற்றும் மஹிந்திரா XUV400-க்கு போட்டியாக நிலைநிறுத்துகின்றன. MG ஒரு தனித்துவமான "பேட்டரி-அஸ்-எ-சர்வீஸ்" என்ற வாடகை திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் அத்தகைய கவர்ச்சிகரமான விலையில் வழங்க முடிகிறது.

இந்தச் சேவை எதைக் குறிக்கிறது? அதைத்தான் இந்தக் கட்டுரையில் நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம்.

MG பேட்டரி-அஸ்-எ-சர்வீஸ் (BaaS) விளக்கப்பட்டுள்ளது

  • காரின் பேட்டரி பேக்கின் விலையை சேர்க்காமல் விண்ட்சர் EV-க்கான போட்டி விலையை MG அடைந்துள்ளது.

  • அதற்கு பதிலாக, பேட்டரி பேக்கின் பயன்பாட்டிற்கு ஏற்ப நீங்கள் அதற்க்கான பணத்தை செலுத்துகிறீர்கள், இதன் விலை ஒரு கிலோ மீட்டருக்கு ரூ. 3.5 ஆக உள்ளது.

  • இந்த கான்செப்ட் ஆனது நமது வீட்டிலுள்ள RO வாட்டர் ப்யூரிஃபையர்களுக்கு பயன்படுத்தப்படும் வாடகை அணுகுமுறையைப் போன்றது, இங்கு நீங்கள் சொந்தமாக RO மெஷினை வாங்கவில்லை, ஆனால் அதைப் பயன்படுத்துவதற்கான வாடகையை மட்டும் செலுத்துகின்றீர்கள்.

  • இதன் மூலம் நமக்கு கிடைக்கக்கூடிய பலன் என்னவெனில், வழக்கமான EV-களை விட விண்ட்சர் EV மிகக் குறைந்த விலையில் நமக்கு கிடைக்கின்றது.

  • இருப்பினும், பேட்டரி பேக்கை பயன்படுத்துவதற்கான கூடுதல் செலவை நீங்கள் நிர்வகிக்க வேண்டும்.

  • வாடிக்கையாளர்கள் பேட்டரி பேக்கை குறைந்தபட்சம் 1,500 கி.மீ ரீசார்ஜ் செய்ய வேண்டும், அதன் விலை ரூ. 5,250 (ரூ. 3.5 x 1500 கி.மீ).

  • சார்ஜிங் செலவுகள் பேட்டரி வாடகைக் கட்டணத்தில் இருந்து வேறுபட்டவை என்பதை நினைவில் கொள்ளவும்.

  • ஆரம்பகட்ட சார்ஜிங் செலவினங்களைக் குறைக்க, MG ஆனது ஒரு வருடத்திற்கு தங்கள் நெட்வொர்க் மூலம் இலவச ஃபாஸ்ட் சார்ஜிங்கை அதன் ஆரம்ப கட்ட வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது (இந்தச் சலுகையின் மூலம் பயனடையப்போகும் வாடிக்கையாளர்களின் சரியான எண்ணிக்கையை MG குறிப்பிடவில்லை).

  • MG முதல் உரிமையாளருக்கு வாழ்நாள் உத்தரவாதத்தை வழங்குகிறது, ஆனால் கார் விற்கப்பட்டால், உத்தரவாதமானது 8 ஆண்டுகள் அல்லது 1.6 லட்சம் கிமீ ஆகும், எது முதலில் வருகிறதோ அதுவாகும்.

மேலும் படிக்க: MG Windsor EV: டெஸ்ட் டிரைவ்கள், முன்பதிவு மற்றும் டெலிவரி காலக்கெடு விளக்கப்பட்டுள்ளது

MG விண்ட்சர் EV பற்றிய ஒரு கண்ணோட்டம்

காமெட் EV மற்றும் ZS EV ஆகியவற்றைத் தொடர்ந்து விண்ட்சர் EV ஆனது MG மோட்டார் இந்தியாவின் மூன்றாவது எலக்ட்ரிக் கார் ஆகும். இது முன் மற்றும் பின்புறம் இரண்டிலும் இணைக்கப்பட்ட LED லைட்டிங் கூறுகளுடன் தனித்துவமான ஸ்டைலிங் மற்றும் குறைந்தபட்ச ஸ்டைல் மாற்றங்களைக் கொண்டுள்ளது. குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்களாக விண்ட்சரின் 18-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள் மற்றும் ஃப்ளஷ்-ஃபிட்டிங் டோர் ஹேன்டில்கள் உள்ளன.

உள்ளே, விண்ட்சர் EV இரண்டு ஸ்கிரீன்கள் உடன் மினிமலிஸ்டிக் டாஷ்போர்டை கொண்டுள்ளது: 15.6-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் 8.8-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே. கேபின் மாறுபட்ட காப்பர் கலர் எலெமென்ட்களுடன் கருப்பு நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. ரியர் சீட்டில் பயணிகளின் வசதிக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது, சாய்வு சீட்கள் 135 டிகிரி வரை அட்ஜஸ்ட் செய்யக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விண்ட்சர் EV ஆனது டூயல் ஸ்கிரீன்கள், வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், 256-கலர் சுற்றுப்புற லைட்கள், பனோரமிக் கிளாஸ் ரூஃப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் காற்றோட்டமான முன் சீட்கள் போன்ற அம்சங்களை உள்ளடக்கியது. பாதுகாப்பிற்காக, இதில் ஆறு ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.

MG விண்ட்சர் EV: பவர்டிரெய்ன் ஆப்ஷன்

MG விண்ட்சர் EV-யின் விரிவான விவரங்கள் இதோ:

விவரங்கள்

MG விண்ட்சர் EV

பவர்

136 PS

டார்க்

200 Nm

பேட்டரி பேக்

38 கிலோவாட்

MIDC கிளைம்டு ரேஞ்ச்

331 கி.மீ

ஃபாஸ்ட் சார்ஜிங் 10 முதல் 80 சதவீதம் வரை (50 கிலோவாட்)

55 நிமிடங்கள்

MG விண்ட்சர் EV: போட்டியாளர்கள்

MG விண்ட்சர் EV-இன் ஆரம்ப விலையில் அதை டாடா பஞ்ச் EV-க்கு இணையாக சந்தையில் போட்டியிடுகிறது. இருப்பினும், அதன் விவரங்கள் மற்றும் வசதிகளின் மூலம் விண்ட்சர் மஹிந்திரா XUV400 மற்றும் டாடா நெக்ஸான் EV-க்கு மாற்றாக உள்ளது.

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற கார்தேகோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

மேலும் படிக்க: Windsor EV ஆட்டோமேட்டிக்

Share via

Write your Comment on M g விண்ட்சர் இவி

explore மேலும் on எம்ஜி விண்ட்சர் இவி

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
Rs.18.90 - 26.90 லட்சம்*
Rs.7 - 9.84 லட்சம்*
Rs.17.49 - 21.99 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை