புதிய Kia Seltos இன்டீரியர் படங்கள் வெளியாகியுள்ளன
க்யா Seltos க்காக மார்ச் 28, 2025 06:16 pm அன்று dipan ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 19 Views
- ஒரு கருத்தை எழுதுக
கியா -வின் லேட்டஸ்ட் அறிமுகமான கியா சிரோஸ் உடன் கேபினில் உள்ள நிறைய விஷயங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளதை ஸ்பை ஷாட்கள் காட்டுகின்றன.
-
புதிய ஸ்பை ஷாட்கள் ஃபிளாக்ஷிப் கியா EV9 போன்ற இருக்கைகள் செல்டோஸில் இருப்பதை காட்டுகின்றன.
-
கியா சிரோஸ் போன்ற டூயல்-டோன் சில்வர் மற்றும் கிரே கலர் சீட் அப்ஹோல்ஸ்டரியுடன் உள்ளது.
-
உட்புற வடிவமைப்பும் நவீன தோற்றமுடைய கேபினுடன் சிரோஸ் போலவே உள்ளது.
-
டாஷ்போர்டு இன்னும் படம் பிடிக்கப்படவில்லை என்றாலும் இது மூன்று ஸ்கிரீன் செட்டப் உடன் வரலாம்.
-
வென்டிலேட்டட் முன் இருக்கைகள், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் டூயல் ஜோன் ஏசி ஆகிய வசதிகள் கிடைக்கலாம்.
-
இதன் பாதுகாப்பு வசதிகள் தொகுப்பில் 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), 360 டிகிரி கேமரா மற்றும் லெவல்-2 ADAS ஆகியவை இருக்கலாம்.
-
தற்போதைய-ஸ்பெக் கியா செல்டோஸை விட சற்று அதிக விலையில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரவிருக்கும் புதிய தலைமுறை கியா செல்டோஸ் சோதனை கார்கள் சர்வதேச நாடுகளில் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. இது பாக்ஸியர் வடிவம் மற்றும் புதிய வடிவமைப்புடன் இந்த கார்கள் கானப்படுகின்றன. இப்போது அதன் உட்புறம் சமீபத்தில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. இது கியா சிரோஸுடன் பகிர்ந்து கொள்ளப்பட்ட சில எலமென்ட்களை காட்டுகிறது. வரவிருக்கும் செல்டோஸின் ஸ்பை ஷாட்கள் மூலம் தெரிய வரும் விஷயங்கள் அனைத்தையும் இங்கே பார்ப்போம்:
ஸ்பை ஷாட்கள் எதை காட்டுகின்றன ?
புதிய தலைமுறை கியா செல்டோஸின் வெளிப்புற வடிவமைப்பின் படங்கள் ஏற்கெனவே வெளியாகியிருந்தாலும் கூட புதிய ஸ்பை ஷாட்கள் ஒரு சதுர ஹவுஸிங்கில் வெர்டிகலான எல்இடி ஹெட்லைட்களை காட்டுகின்றன. வெர்டிகல் ஸ்லேட்டுகள் கொண்ட ஒரு சிறிய கிரில் மற்றும் முன் பம்பரில் ரக்கட் ஆன பிளாக் ஸ்ட்ரிப் ஒன்றும் உள்ளதை பார்க்க முடிகிறது.


முந்தைய சோதனை கார்கள் அலாய் சக்கரங்களைக் கொண்டிருந்தாலும், இந்த ஸ்பைட் மாடலில் 18-இன்ச் விளிம்புகள் மற்றும் ஸ்டைலான வீல் கவர்கள் இருந்தன. பின்புறத்தில் வரவிருக்கும் செல்டோஸ் தற்போதைய-ஸ்பெக் செல்டோஸ் போன்ற எல்இடி எலமென்ட்களுடன் ஒரு முக்கோண டெயில் லைட் அமைப்பை கொண்டுள்ளது. பின்பக்க பம்பரில் முன்புற பம்பரைப் போன்றே பிளாக் ஸ்ட்ரிப் ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்பை ஷாட்கள் புதிய தலைமுறை செல்டோஸின் உட்புறத்தைப் பற்றிய ஒரு பார்வையை கொடுக்கின்றன. இது கியா சிரோஸின் நவீன மற்றும் குறைந்தபட்ச கேபினால் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளது. இருக்கைகள் கியா EV9 காரில் உள்ளதைப் போலவே இருக்கின்றன. ஆனால் ஆரஞ்சு கலர் ஆக்ஸென்ட்களுடன் கூடிய கிரே மற்றும் சில்வர் சீட் அப்ஹோல்ஸ்டரி செட்டப்பை கியா சிரோஸில் உள்ளதை போலவே உள்ளது. பின் இருக்கைகள் மற்றும் பின் டோர்கள் சிரோஸிலிருந்து நிறைய கடன் வாங்கியிருப்பதை போல தெரிகிறது.
டாஷ்போர்டு அமைப்பு விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும் புதிய தலைமுறை செல்டோஸ் சிரோஸ் போன்ற 3 ஸ்கிரீன் செட்டப் உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் வசதிகள் மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பம்
கியா சிரோஸ் போன்ற 12.3-இன்ச் டச் ஸ்கிரீன், ஒரே அளவிலான டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் ஏசி கட்டுப்பாடுகளுக்கான 5-இன்ச் ஸ்கிரீன் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், டூயல்-ஜோன் ஆட்டோ ஏசி மற்றும் வென்டிலேஷன் ஃபங்ஷன் உடன் எலக்ட்ரிக்கலி அட்ஜெஸ்ட்டபிள் முன் இருக்கைகள் ஆகியவற்றையும் இது அப்படியே தக்கவைக்கலாம்.
6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), 360 டிகிரி கேமரா, எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (டிபிஎம்எஸ்) உள்ளிட்ட வசதிகளுடன் புதிய தலைமுறை செல்டோஸின் பாதுகாப்பு வசதிகளின் தொகுப்பு தற்போதைய-ஸ்பெக் மாடலை போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லேன் கீப் அசிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் ஃபார்வர்டு கொலிஷன் வார்னிங் உள்ளிட்ட அம்சங்களுடன், லெவல்-2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) தொகுப்பையும் இது பெறும்.
மேலும் படிக்க: 2,900 -க்கும் மேற்பட்ட போர்ஸ் கூர்க்காவை வாங்கும் இந்திய பாதுகாப்புப் படை.
எதிர்பார்க்கப்படும் பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
வரவிருக்கும் செல்டோஸ் தற்போதைய-ஸ்பெக் மாடலின் அதே இன்ஜின் ஆப்ஷன்களுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரிவான விவரங்கள் இங்கே:
இன்ஜின் |
1.5 லிட்டர் நேச்சுரல் aaஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் |
1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் |
1.5 லிட்டர் டீசல் இன்ஜின் |
பவர் |
115 PS |
160 PS |
116 PS |
டார்க் |
144 Nm |
253 Nm |
250 Nm |
டிரான்ஸ்மிஷன்* |
6-ஸ்பீடு MT, CVT |
6-ஸ்பீடு iMT, 7-ஸ்பீடு DCT |
6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AT |
டிரைவ்டிரெய்ன் |
ஃபிரன்ட் வீல் டிரைவ் (FWD) |
ஃபிரன்ட் வீல் டிரைவ் (FWD) |
ஃபிரன்ட் வீல் டிரைவ் (FWD) |
*CVT = கன்டினியூஸ்லி வேரியபிள் டிரான்ஸ்மிஷன்; iMT = கிளட்ச்லெஸ் மேனுவல் கியர்பாக்ஸ்; AT = டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
வரவிருக்கும் கியா செல்டோஸ் காரின் விலை ரூ. 11.13 லட்சம் முதல் ரூ. 20.51 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய-ஸ்பெக் மாடலை விட சற்று கூடுதல் விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஹூண்டாய் கிரெட்டா, மாருதி கிராண்ட் விட்டாரா, ஹோண்டா எலிவேட், டொயோட்டா ஹைரைடர், ஸ்கோடா குஷாக் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் போன்ற மற்ற காம்பாக்ட் எஸ்யூவி -களுக்கு போட்டியாக இது தொடரும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.