சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

வேரியன்ட் அப்டேட்டை பெறும் Comet EV மற்றும் ZS EV கார்கள்: புதிய வசதிகள் கிடைக்கும் மற்றும் விலையில் மாற்றம் இருக்கும்

எம்ஜி comet இவி க்காக மார்ச் 06, 2024 09:04 pm அன்று rohit ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

காமெட் EV இப்போது 7.4 kW AC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷனை ஹையர்-ஸ்பெக் எக்ஸைட் மற்றும் எக்ஸ்க்ளூஸிவ் வேரியன்ட்களுடன் பெறுகிறது.

  • MG காமெட் EV வேரியன்ட்கள் இப்போது எக்ஸிகியூட்டிவ், எக்ஸைட் மற்றும் எக்ஸ்க்ளூஸிவ் என்று அழைக்கப்படுகின்றன.

  • காமெட் EV -யின் புதிதாக ESC மற்றும் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.

  • MG ZS EV -யின் வேரியன்ட் வரிசையானது எக்ஸிகியூட்டிவ் எக்ஸைட் ப்ரோ எக்ஸ்க்ளூஸிவ் பிளஸ் மற்றும் எசென்ஸ் ஆக மாற்ரியமைக்கப்பட்டுள்ளது.

  • புதிய எக்ஸைட் ப்ரோ வேரியன்ட் பனோரமிக் சன்ரூஃப் 10.1-இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் 6 ஏர்பேக்குகளை பெறுகிறது.

  • இரண்டு MG EV களின் எலக்ட்ரிக் பவர்டிரெய்ன்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

  • காமெட் EV -யின் விலை ரூ.6.99 லட்சம் முதல் ரூ.9.14 லட்சம் வரை இருக்கும்.

  • ZS EV இப்போது விலை ரூ.18.98 லட்சம் முதல் ரூ.24.98 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

MG காமெட் EV மற்றும் MG ZS EV இரண்டின் வேரியன்ட் வரிசையும் இப்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளன. கூடுதல் சில வசதிகளுடன் இப்போது சில புதிய வேரியன்ட்களை பெறுகின்றன. முதலில் மாற்றியமைக்கப்பட்ட மாடல் வாரியான வேரியன்ட் வரிசையை பார்ப்போம்:

எம்ஜி காமெட் புதிய வேரியன்ட்கள்

பழைய வேரியன்ட் பெயர்கள்

ஸ்பீடு

ஸ்போர்ட்

பிளஷ்

புதிய வேரியன்ட் பெயர்கள்

எக்ஸிகியூட்டிவ்

எக்ஸைட் (ஃபாஸ்ட் சார்ஜர் ஆப்ஷனுடன்)

எக்ஸ்க்ளூஸிவ் (ஃபாஸ்ட் சார்ஜர் ஆப்ஷனுடன்)

வேரியன்ட்களை மாற்றியது மட்டுமில்லாமல் MG காமெட் EV -யின் பெயர்களையும் மாற்றியுள்ளது. அவை இப்போது ZS EV -ன் பெயர் போலவே உள்ளன. MG -யின் என்ட்ரி-லெவல் EV ஆனது மிட் மற்றும் டாப்-ஸ்பெக் வேரியன்ட்களுடன் : எக்ஸைட் மற்றும் எக்ஸ்க்ளூஸிவ் ஆகியவற்றுடன் 7.4 kW AC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷனை பெறுவது இதுவே முதல் முறை.

MG காமெட் EV -ன் மாற்றியமைக்கப்பட்ட விலை

வேரியன்ட்

பழைய விலை

புதிய விலை

வித்தியாசம்

எக்ஸிகியூட்டிவ்

ரூ.6.99 லட்சம்

ரூ.6.99 லட்சம்

எக்ஸைட்

ரூ.7.88 லட்சம்

ரூ.7.88 லட்சம்

எக்ஸைட் ஃபாஸ்ட் சார்ஜர் (புதியது)

ரூ.8.24 லட்சம்

எக்ஸ்க்ளூஸிவ்

ரூ.8.58 லட்சம்

ரூ.8.78 லட்சம்

+ரூ 20000

எக்ஸ்க்ளூஸிவ் ஃபாஸ்ட் சார்ஜர் (புதியது)

ரூ.9.14 லட்சம்

வேரியன்ட் பெயர் மாற்றத்துடன் காமெட் EV -யின் டாப்-ஸ்பெக் வேரியன்ட்டின் விலை ரூ. 20000 உயர்ந்துள்ளது. மற்ற வேரியன்ட்களின் விலைகள் அப்படியே உள்ளன.

காமெட் EV -ன் புதிய வேரியன்ட்களில் புதிய வசதிகள்

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட AC ஃபாஸ்ட் சார்ஜ் செய்யும் திறன் கொண்ட காமெட் EV வேரியன்ட்களைத் தவிர, மைக்ரோ-எம்ஜி எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ரியர் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் ஹில்-ஹோல்ட் அசிஸ்ட் போன்ற கூடுதல் பாதுகாப்பு வசதிகளையும் பெறுகிறது. பவர்-ஃபோல்டபிள் ORVMகள், இண்டெகிரேட்டட் இண்டிகேட்டர்ஸ் கொண்ட LED DRLகள் மற்றும் பாடி கலர்டு ORVM -கள் ஆகியவை உள்ளன.

மேலும் படிக்க: MG Comet EV: நீண்ட கால விமர்சனம்

MG ZS EV புதிய வேரியன்ட் வரிசை

பழைய வேரியன்ட்டின் பெயர்

புதிய வேரியன்ட்டின் பெயர்

விலை

எக்ஸிகியூட்டிவ்

எக்ஸிகியூட்டிவ்

ரூ.18.98 லட்சம்

எக்ஸைட்

எக்ஸைட் புரோ

ரூ.19.98 லட்சம்

எக்ஸ்க்ளூஸிவ்

எக்ஸ்க்ளூஸிவ் பிளஸ்

ரூ.23.98 லட்சம்

எக்ஸ்க்ளூஸிவ் ப்ரோ

எசென்ஸ்

ரூ.24.98 லட்சம்

ZS EV -க்கான ஒரே மாற்றம் புதிய பெயர் கொண்ட வேரியன்ட்கள் ஆகும். அதுமட்டுமின்றி எலக்ட்ரிக் எஸ்யூவி -யின் விலை ரூ.18.98 லட்சத்தில் இருந்து ரூ.24.98 லட்சம் வரை இருக்கும். ஹையர்-ஸ்பெக் ZS EV வேரியன்ட்கள் ரூ. 10000 கூடுதலாக செலுத்தினால் டூயல்-டோன் பெயிண்ட் ஆப்ஷனிலும் கிடைக்கும்.

ZS EV எக்ஸைட் புரோ இல் கிடைக்கும் வசதிகள்

MG ஆனது ZS EV -யின் எக்ஸைட் ப்ரோ வேரியன்ட்டை பனோரமிக் சன்ரூஃப் வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்ட் உடன் கூடிய 10.1-இன்ச் டச் ஸ்கிரீன் 7-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பாதுகாப்பைப் பொறுத்தவரை ZS EV எக்ஸைட் புரோ ஆனது 6 ஏர்பேக்குகள், ரிவர்சிங் கேமரா, ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) ஆகியவற்றுடன் வருகிறது.

காமெட் மற்றும் ZS EV -ன் எலெக்ட்ரிக் பவர்டிரெயின்கள் பற்றிய விவரங்கள்

விவரங்கள்

காமெட் EV

ZS EV

பேட்டரி பேக்

17.3 kWh

50.3 kWh

எலக்ட்ரிக் மோட்டார் பவர் அவுட்புட்

42 PS

177 PS

எலக்ட்ரிக் மோட்டார் டார்க் அவுட்புட்

110 Nm

280 Nm

கிளைம்டு ரேஞ்ச்

230 கிமீ வரை

461 கி.மீ

மேலும் படிக்க: MG Hector மற்றும் Hector Plus ஆகிய கார்களின் விலை மாற்றியமைக்கப்பட்டுள்ளது, விலை இப்போது ரூ. 13.99 லட்சத்தில் தொடங்குகிறது!

MG காமெட் EV மற்றும் ZS EV போட்டியாளர்கள்

டாடா டியாகோ EV மற்றும் சிட்ரோன் eC3 ஆகியவற்றுக்கு MG காமெட் EV ஒரு விலை குறைவான மாற்றாகும். எலெக்ட்ரிக் எஸ்யூவியான ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் காருக்கு போட்டியாக உள்ளது. BYD 3 அட்டோ மற்றும் வரவிருக்கும் மாருதி eVX ஆகியவற்றுக்கு MG ZS EV போட்டியாக இருக்கும். மேலும் கீழே உள்ள பிரிவில் இருந்தாலும் கூட டாடா நெக்ஸான் EV மற்றும் மஹிந்திரா XUV400 EV ஆகியவற்றுக்கு மாற்றாக இருக்கும்.

மேலும் படிக்க: MG காமெட் EV ஆட்டோமெட்டிக்

Share via

Write your Comment on M g comet ev

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை