சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

Maruti Swift காரின் விற்பனை இந்தியாவில் 30 லட்சம் என்ற மைல்கல்லை எட்டியுள்ளது

மாருதி ஸ்விப்ட் க்காக ஜூன் 28, 2024 05:46 pm அன்று shreyash ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

ஸ்விஃப்ட் காரின் விற்பனை உலகளவில் 65 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்தியா ஹேட்ச்பேக்கின் மிகப்பெரிய சந்தையாக உள்ளது.

  • ஸ்விஃப்ட் இந்தியாவில் முதன்முதலில் 2005 -ல் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த நவம்பர் 2013 ஆண்டில் முதல் 10 லட்சம் விற்பனையை எட்டியுள்ளது.

  • கடந்த 6 ஆண்டுகளில் 10 லட்சம் விற்பனையை எட்டியுள்ளது.

  • இது புதிய 1.2-லிட்டர் 3 சிலிண்டர் Z சீரிஸ் பெட்ரோல் இன்ஜினை (82 PS/112 Nm) பயன்படுத்துகிறது.

  • 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 5-ஸ்பீடு AMT உடன் கிடைக்கிறது.

  • 9-இன்ச் டச் ஸ்கிரீன், ஆட்டோமெட்டிக் ஏசி மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் போன்ற வசதிகள் உள்ளன.

  • 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC) மற்றும் பின்புற பார்க்கிங் கேமரா ஆகியவை பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்டுள்ளன.

  • தற்போது இதன் விலை ரூ.6.49 லட்சம் முதல் ரூ.9.64 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) உள்ளது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஹேட்ச்பேக் கார்களில் ஒன்றான மாருதி ஸ்விஃப்ட் கார் விற்பனையில் இப்போது 30 லட்சம் என்ற மைல்கல்லை எட்டியுள்ளது. மாருதி முதன்முதலில் 2005 -ஆம் ஆண்டில் ஸ்விஃப்ட்டை அறிமுகப்படுத்தியது. அதன் பிறகு அதற்கு பல ஃபேஸ்லிஃப்ட் மற்றும் ஜெனரேஷன் அப்டேட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் நான்காம் தலைமுறை ஸ்விஃப்ட் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய தோற்றம், மேம்படுத்தப்பட்ட வசதிகள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட பெட்ரோல் இன்ஜின் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஸ்விஃப்ட் இந்தியாவில் 30 லட்சம் விற்பனை மைல்கற்களை எட்டிய ஆண்டு வாரியான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விற்பனை மைல்கல்

ஆண்டு

அறிமுகம்

மே 2005

10 லட்சம்

நவம்பர் 2013

20 லட்சம்

நவம்பர் 2018

30 லட்சம்

ஜூன் 2024

இந்தியாவில் ஸ்விஃப்ட் தனது முதல் 10 லட்சம் விற்பனையை அடைய கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் ஆனது. அடுத்த 5 ஆண்டுகளிலேயே நவம்பர் 2018 -க்குள் 10 லட்சம் விற்பனை மைல்கல்லை மிக வேகமாக எட்டியது. அடுத்த 10 லட்சம் விற்பனை கிட்டத்தட்ட 6 ஆண்டுகளில் எட்டப்பட்டது. ஹேட்ச்பேக் உலகளவில் 65 லட்சத்திற்கும் அதிகமான விற்பனை என்ற மைல்கல்லை எட்டியுள்ளது. அதில் 30 லட்சம் யூனிட்கள் இந்தியாவில் மட்டுமே விற்பனையாகியுள்ளன.

முதல் தலைமுறை ஸ்விஃப்ட் 2005 -ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அதன் விலை ரூ.3.87 லட்சமாக இருந்தது. அந்த நேரத்தில் நல்ல தோற்றம் கொண்ட சில ஹேட்ச்பேக்குகளில் இதுவும் ஒன்றாகவும் இருந்தது. ஓட்டுவதற்கு ஃபன் ஆகவும் நல்ல வசதிகளையும் கொண்டிருந்தது. பின்னர் 2007 ஆம் ஆண்டில், ஸ்விஃப்ட் 1.3-லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷனை பெற்றது. இது மேலும் பிரபலமடைந்தது. மாருதி 2020 வரை டீசல் இன்ஜின் ஆப்ஷனுடன் ஸ்விஃப்ட்டை தொடர்ந்து வழங்கியது. அதன் பிறகு கடுமையான உமிழ்வு விதிமுறைகள் காரணமாக அது நிறுத்தப்பட்டது. டீசல் இன்ஜினின் நிறுத்தப்பட்டாலும் கூட விற்பனையில் பெரிய அளவில் பாதிக்கவில்லை. சந்தையில் அதன் நீண்டகால இருப்பைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது தற்போது ​​ஸ்விஃப்ட் நாட்டில் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக இருக்கிறது.

காரில் என்ன வசதி இருக்கிறது

மாருதி 2024 ஸ்விஃப்ட்டில் 9 இன்ச் டச் ஸ்கிரீன், 6-ஸ்பீக்கர் ஆர்காமிஸ்-டியூன் செய்யப்பட்ட ஆடியோ சிஸ்டம் மற்றும் பின்புற வென்ட்களுடன் கூடிய ஆட்டோமெட்டிக் ஏசி போன்ற வசதிகளுடன் பொருத்தப்பட்டுள்ளது. இது வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற வசதிகளையும் பெறுகிறது. 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP), பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் பின்புற பார்க்கிங் கேமரா ஆகியவை பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

இன்ஜின் டிரான்ஸ்மிஷன்

2024 மாருதி ஸ்விஃப்ட் புதிய 1.2 லிட்டர் 3 சிலிண்டர் Z சீரிஸ் பெட்ரோல் இன்ஜினை பயன்படுத்துகிறது. இது 82 PS மற்றும் 112 Nm அவுட்புட்டை கொடுக்கிறது. இந்த யூனிட் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 5-ஸ்பீடு AMT உடன் இணைக்கப்பட்டுள்ளது. தற்போது ​​மாருதி நான்காம் தலைமுறை ஸ்விஃப்ட்டை CNG பவர்டிரெய்ன் ஆப்ஷனுடன் வழங்கவில்லை. ஆனால் எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்படலாம்.

விலை ரேஞ்ச் போட்டியாளர்கள்

மாருதி ஸ்விஃப்ட் காரின் தற்போதைய விலை ரூ.6.49 லட்சத்தில் இருந்து ரூ.9.64 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி). இது ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் உடன் போட்டியிடும். அதே சமயம் க்கு ஹூண்டாய் எக்ஸ்டர் மற்றும் டாடா பன்ச் -க்கு மாற்றாகவும் இருக்கும்.

மேலும் படிக்க: மாருதி ஸ்விஃப்ட் AMT

Share via

Write your Comment on Maruti ஸ்விப்ட்

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் ஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
எலக்ட்ரிக்
புதிய வேரியன்ட்
Rs.5 - 8.45 லட்சம்*
புதிய வேரியன்ட்
புதிய வேரியன்ட்
Rs.6.16 - 10.15 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.4.70 - 6.45 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை