பழுதான ஏர்பேக் கன்ட்ரோலரை சரி செய்ய 17,000க்கும் அதிகமான வாகனங்களை திரும்பப் பெறுகிறது மாருதி சுசுகி
published on ஜனவரி 19, 2023 06:00 pm by ansh for மாருதி கிராண்டு விட்டாரா
- 81 Views
- ஒரு கருத்தை எழுதுக
பாதிக்கப்பட்டப் பகுதியை மாற்றும் வரை அந்த வாகனங்களின் உரிமையாளர்களைக் காரை ஓட்ட வேண்டாம் என்று கார் தயாரிப்பாளர் அறிவுறுத்துகிறார்
-
மொத்தம் 17,362 கார்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன.
-
அல்ட்டோ கே10, எஸ்-பிரெஸ்ஸோ, ஈக்கோ, பிரெஸ்ஸா, பலேனோ மற்றும் கிரான்ட் விட்டாரா ஆகியவை பாதிக்கப்பட்ட மாடல்களாகும்.
-
இந்த மாடல்களின் ஏர்பேக் கன்ட்ரோலரில் சந்தேகத்திற்குரிய தவறு உள்ளது.
-
விபத்தில் ஏர்பேக்குகள் மற்றும் சீட் பெல்ட் ப்ரீடென்ஷனர்கள் செயல்படாமல் போகும் குறைபாடு ஏற்படலாம்.
-
மாருதி வாகனங்களின் உரிமையாளர்களை ஆய்வுக்காகத் தொடர்பு கொள்ளும்.
விற்பனையில் உள்ள 17 மாடல்களில், மாருதி’ ஏர்பேக் கன்ட்ரோலரில் சந்தேகிக்கப்படும் குறைபாடு காரணமாக ஆறு மாடல்கள் திரும்பப் பெறப்பட்டன.. திரும்பப் பெறப்பட்ட 17,362 யூனிட்கள் அல்ட்டோ கே10, எஸ்-பிரெஸ்ஸோ , ஈக்கோ, பிரெஸ்ஸா, பலேனோ மற்றும் கிரான்ட் விட்டாரா , 2022 டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி மற்றும் 2023 ஜனவரி மாதம் 12ஆம் தேதிக்கு இடையில் தயாரிக்கப்பட்டது.
இந்த பாதிக்கப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களை ஆய்வு செய்ய மாருதி நிறுவனத்தால் தொடர்பு கொள்ளப்படுவர். பிழை கண்டறியப்பட்டால், கார் தயாரிப்பாளர் அந்தப் பகுதியை இலவசமாக சரிசெய்வார் அல்லது மாற்றுவார். மாருதி இந்த வாகனங்களின் உரிமையாளர்கள் பிரச்சினையை சரிசெய்யும் வரை அவற்றை ஓட்ட வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
ஏர்பேக் கன்ட்ரோலர் என்றால் என்ன?
ஏர்பேக் கன்ட்ரோலர் அல்லது ஏர்பேக் கன்ட்ரோல் மாட்யூல் என்பது உங்கள் காரில் உள்ள பல சென்சார்களில் இருந்து தரவை எடுக்கும் ஒரு மின்னணு சாதனம் ஆகும் மற்றும் இது விபத்து ஏற்படும் போது ஏர்பேக்குகளை செயல்படுத்த உதவுகிறது. இந்தச் சாதனம் சரியாகச் செயல்படவில்லை என்றால், உங்கள் காரில் உள்ள ஏர்பேக்குகள் தேவைப்படும்போது செயல்படாமல் போகலாம்.
மேலும் படிக்க: ஆட்டோ எக்ஸ்போ 2023 இல் மாருதி சுசுகி காட்சிப்படுத்திய அனைத்து கார்களும் இதோ
கொடுக்கப்பட்ட தேதிகளுக்கு இடையில் தயாரிக்கப்பட்ட இந்த வாகனங்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் வைத்திருந்தால் அல்லது இந்தச் சிக்கலுக்கு கார் தயாரிப்பாளர் மூலம் தொடர்பு கொள்ளப்பட்டால், உங்கள் வாகனத்தை விரைவில் பரிசோதிக்குமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம். கடந்த இரண்டு மாதங்களில் மாருதியின் இரண்டாவது பெரிய திரும்ப பெறுதல் இது.
மேலும் படிக்கவும்: சாலையில் சீறும் கிராண்ட் விட்டாராவின் விலை
0 out of 0 found this helpful