சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

2024 ஏப்ரல் மாதத்தில் மாருதி நெக்ஸா காருக்கு ரூ. 87,000 வரை சலுகைகள் கிடைக்கின்றன

rohit ஆல் ஏப்ரல் 22, 2024 08:09 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
23 Views

மாற்றியமைக்கப்பட்ட சலுகைகள் இப்போது ஏப்ரல் 2024 இறுதி வரை செல்லுபடியாகும்.

  • கிராண்ட் விட்டாராவின் ஸ்ட்ராங்-ஹைப்ரிட் வேரியன்ட்களில் அதிகபட்சமாக ரூ.87,000 வரை தள்ளுபடிகள் கிடைக்கும்.

  • பலேனோவில் ரூ.54,000 வரை தள்ளுபடியைக் கிடைக்கும்.

  • மாருதி ஃபிரான்க்ஸ் காருக்கு ரூ.32,000 வரை தள்ளுபடி கிடைக்கும்.

  • மாருதி ஜிம்னிக்கு ரூ.57,000 வரை தள்ளுபடி கிடைக்கும்.

மாருதி நிறுவனம் அதன் நெக்ஸா வரிசைக்கான மாற்றியமைக்கப்பட்ட சலுகைகள் இப்போது 2024 ஏப்ரல் இறுதி வரை செல்லுபடியாகும் என தெரிவித்துள்ளது. முன்பைப் போலவே புதிய சலுகைகளில் பணத் தள்ளுபடிகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் உள்ளிட்ட பல்வேறு ஆஃபர்கள் அடங்கும். ஏப்ரல் 30 வரை செல்லுபடியாகும் மாடல் வாரியாக புதுப்பிக்கப்பட்ட ஆஃபர்கள் பற்றிய விரைவான பார்வை இங்கே:

பலேனோ

சலுகை

தொகை

பணத் தள்ளுபடி

ரூ.32,000 வரை

எக்ஸ்சேஞ்ச் போனஸ்

ரூ.15,000

கார்ப்பரேட் தள்ளுபடி

ரூ.7,000

மொத்த பலன்கள்

54,000 வரை

  • மாருதி பலேனோ AMT வேரியன்ட்களுக்கு இந்த தள்ளுபடிகள் பொருந்தும்.

  • மேனுவல் கியர்பாக்ஸுடன் ஹேட்ச்பேக்கை வாங்க விரும்பினால் ரொக்க தள்ளுபடி ரூ.27,000 வரை குறைகிறது மற்ற சலுகைகள் மாறாமல் இருக்கும்.

  • எக்ஸ்சேஞ்ச் போனஸுக்கு பதிலாக 20,000 ரூபாய் ஆப்ஷனலான ஸ்கிராப்பேஜ் போனஸையும் வாங்குபவர்கள் தேர்வு செய்யலாம்.

  • அதன் சிஎன்ஜி வேரியன்ட்டை வாங்க விரும்புவோருக்கு மாருதி ரூ. 10,000 ரொக்க தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் அல்லது ஸ்கிராப்பேஜ் போனஸ் என்ற விருப்பத்தை வழங்குகிறது. பலேனோ CNG -யில் கார்ப்பரேட் தள்ளுபடியைப் கிடைக்காது.

  • மாருதி பிரீமியம் ஹேட்ச்பேக்கை ரூ.6.66 லட்சத்தில் இருந்து ரூ.9.88 லட்சம் வரை விற்பனை செய்கிறது.

கிராண்ட் விட்டாரா

சலுகை

தொகை

பணத் தள்ளுபடி

ரூ.30,000 வரை

எக்ஸ்சேஞ்ச் போனஸ்

ரூ.50,000 வரை

கார்ப்பரேட் தள்ளுபடி

ரூ.7,000

மொத்த பலன்கள்

87,000 வரை

  • மாருதி கிராண்ட் விட்டாரா -வின் ஸ்ட்ராங்-ஹைபிரிட் வேரியன்ட்கள் ரூ.18.43 லட்சத்தில் இருந்து தொடங்கும். மேலே உள்ள அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி அதிகபட்ச சேமிப்புடன் கிடைக்கும்.

  • மாருதி எஸ்யூவியின் ஸ்ட்ராங்-ஹைபிரிட் வேரியன்ட்களை மிக உயர்ந்த ஆப்ஷனலான ஸ்கிராப்பேஜ் போனஸ் ரூ 55,000 உடன் வழங்குகிறது.

  • பெட்ரோல்-மட்டும் எஸ்யூவி-யின் ஹையர்-ஸ்பெக் ஜெட்டா மற்றும் ஆஃல்பா வேரியன்ட்களை (AWD உட்பட) தேர்ந்தெடுப்பவர்களுக்கு பணத் தள்ளுபடி ரூ. 5,000 குறைகிறது, அதே நேரத்தில் எக்ஸ்சேஞ்ச் மற்றும் ஸ்கிராப்பேஜ் போனஸ்கள் ஒவ்வொன்றும் ரூ.20,000 குறையும்.

  • மிட்-ஸ்பெக் கிராண்ட் விட்டாரா டெல்டா வேரியன்ட் ரூ.10,000 ரொக்க தள்ளுபடி மற்ற்ம் ரூ.30,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.7,000 கார்ப்பரேட் தள்ளுபடி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

  • மாருதி எஸ்யூவியின் பேஸ்-ஸ்பெக் சிக்மா வேரியன்ட் ரூ.7,000 கார்ப்பரேட் தள்ளுபடியுடன் வழங்குகிறது.

  • கிராண்ட் விட்டாரா ரூ.11 லட்சம் முதல் ரூ.20.09 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

ஜிம்னி

சலுகை

தொகை

பணத் தள்ளுபடி

ரூ.50,000

எக்ஸ்சேஞ்ச் போனஸ்

கார்ப்பரேட் தள்ளுபடி

ரூ.7,000

மொத்த பலன்கள்

ரூ.57,000 வரை

  • மேலே குறிப்பிட்டுள்ள தள்ளுபடிகள் அனைத்தும் மாருதி ஜிம்னி -யின் அனைத்து வேரியன்ட்களிலும் கிடைக்கும்

  • எக்ஸ்சேஞ்ச் போனஸ் அல்லது ஸ்கிராப்பேஜ் போனஸ் இல்லை.

  • ஜிம்னியின் விலை ரூ.12.74 லட்சம் முதல் ரூ.14.95 லட்சம் வரை உள்ளது.

மேலும் படிக்க: 2024 மார்ச் மாதத்தின் அதிகம் விற்பனையான காம்பாக்ட் மற்றும் மிட்சைஸ் மற்றும் ஹேட்ச்பேக்குகளின் பட்டியலில் ஆதிக்கம் செலுத்திய மாருதி நிறுவனம்

ஃபிரான்க்ஸ்

சலுகை

தொகை

பணத் தள்ளுபடி

15,000 வரை

எக்ஸ்சேஞ்ச் போனஸ்

ரூ.10,000

கார்ப்பரேட் தள்ளுபடி

ரூ.7,000

மொத்த பலன்கள்

ரூ.32,000 வரை

  • மாருதி ஃபிரான்க்ஸ் டர்போ வேரியன்ட்களை நீங்கள் தேர்வு செய்தால் மேலே குறிப்பிட்டுள்ள பணத் தள்ளுபடியுடன் கூடுதலாக ரூ. 43,000 மதிப்புள்ள வெலாசிட்டி எடிஷன் ஆக்ஸசரியுடன் கிடைக்கிறது.

  • எக்ஸ்சேஞ்ச் போனஸ் -க்கு பதிலாக ரூ.15,000 ஸ்கிராப்பேஜ் போனஸையும் நீங்கள் தேர்வு செய்யலாம்.

  • மாருதி கிராஸ்ஓவரின் வழக்கமான பெட்ரோல் வேரியன்ட்களை ரூ. 10,000 ரொக்க தள்ளுபடியுடன் வழங்குகிறது. அதே நேரத்தில் ஃபிரான்க்ஸ் CNG எக்ஸ்சேஞ்ச் போனஸ் அல்லது ஸ்கிராப்பேஜ் போனஸுடன் மட்டுமே கிடைக்கும்.

  • ஃபிரான்க்ஸ் காரின் விலை ரூ.7.51 லட்சம் முதல் ரூ.13.04 லட்சம் வரை உள்ளது.

XL6

சலுகை

தொகை

எக்ஸ்சேஞ்ச் போனஸ்

ரூ.20,000

மொத்த பலன்கள்

ரூ.20,000 வரை

  • பெட்ரோல் வேரியன்ட்கள் மட்டுமே மாருதி XL6 20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் வடிவில் பலன்களை பெறுங்கள்.

  • மேலே குறிப்பிட்டுள்ள சில மாடல்களை போலவே, XL6 காரையும் எக்ஸ்சேஞ்ச் போனஸுக்குப் பதிலாக ரூ.25,000 ஆப்ஷனலான ஸ்கிராப்பேஜ் போனஸுடன் பெறலாம்.

  • XL6 -ன் CNG வேரியன்ட்களில் சலுகைகள் எதுவும் கிடைக்காது.

  • 6 இருக்கைகள் கொண்ட மாருதி எம்பிவி காரின் விலை ரூ.11.61 லட்சம் முதல் ரூ.14.77 லட்சம் வரை உள்ளது.

சியாஸ்

சலுகை

தொகை

பணத் தள்ளுபடி

ரூ.20,000

எக்ஸ்சேஞ்ச் போனஸ்

ரூ.25,000

கார்ப்பரேட் தள்ளுபடி

ரூ.10,000

மொத்த பலன்கள்

ரூ.55,000 வரை

  • மேலே குறிப்பிட்டுள்ள பலன்களை நீங்கள் மாருதி சியாஸ் காரின் அனைத்து வேரியன்ட்களிலும் பெறலாம் எக்ஸ்சேஞ்ச் போனஸுக்கு பதிலாக 30,000 ரூபாய் ஆப்ஷனலான ஸ்கிராப்பேஜ் போனஸையும் வாங்குபவர்கள் தேர்வு செய்யலாம்.

  • மாருதி தனது காம்பாக்ட் செடான் காரின் விலை ரூ.9.40 லட்சம் முதல் ரூ.12.29 லட்சம் வரை உள்ளது.

இக்னிஸ்

சலுகை

தொகை

பணத் தள்ளுபடி

ரூ.40,000

எக்ஸ்சேஞ்ச் போனஸ்

ரூ.15,000

கார்ப்பரேட் தள்ளுபடி

ரூ.7,000

மொத்த பலன்கள்

ரூ.62,000 வரை

  • மேலே குறிப்பிட்டுள்ள சலுகைகள் மாருதி இக்னிஸ் காரின் அனைத்து AMT வேரியன்ட்களுக்கும் பொருந்தும்

  • MT வேரியன்ட்களை தேர்வு செய்ய விரும்புவோருக்கு மாருதி ரூ. 35,000 ரொக்கத் தள்ளுபடியுடன் வழங்குகிறது மற்ற தள்ளுபடிகள் மாறாமல் இருக்கும்.

  • நீங்கள் ரூ. 15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸைத் தேர்வு செய்யலாம் அல்லது ரூ. 20,000 ஸ்கிராப்பேஜ் போனஸை தேர்ந்தெடுக்கலாம்.

  • மாருதி இக்னிஸின் விலையை ரூ.5.84 லட்சம் முதல் ரூ.8.11 லட்சம் வரை நிர்ணயித்துள்ளது.

குறிப்புகள்:

  1. ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு கார்ப்பரேட் சலுகைகள் மாறுபடலாம்.

  2. மாநிலம் மற்றும் நகரத்தைப் பொறுத்து ஆஃபர்கள் மாறுபடலாம். மேலும் விவரங்களுக்கு உங்கள் அருகிலுள்ள மாருதி நெக்ஸா டீலரை தொடர்பு கொள்ளவும்.

  3. விலை அனைத்தும் டெல்லி எக்ஸ்-ஷோரூம்-க்கானவை ஆகும்.

மேலும் படிக்க: மாருதி பலேனோ AMT

Share via

Write your Comment on Maruti பாலினோ

explore similar கார்கள்

மாருதி கிராண்டு விட்டாரா

4.5561 மதிப்பீடுகள்இந்த காரை ரேட்டிங் செய்ய
சிஎன்ஜி26.6 கிமீ / கிலோ
பெட்ரோல்21.11 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்

மாருதி ஃபிரான்க்ஸ்

4.5599 மதிப்பீடுகள்இந்த காரை ரேட்டிங் செய்ய
சிஎன்ஜி28.51 கிமீ / கிலோ
பெட்ரோல்21.79 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்

மாருதி ஜிம்னி

4.5384 மதிப்பீடுகள்இந்த காரை ரேட்டிங் செய்ய
பெட்ரோல்16.94 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்

மாருதி எக்ஸ்எல் 6

4.4271 மதிப்பீடுகள்இந்த காரை ரேட்டிங் செய்ய
சிஎன்ஜி26.32 கிமீ / கிலோ
பெட்ரோல்20.97 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்

மாருதி சியஸ்

4.5736 மதிப்பீடுகள்இந்த காரை ரேட்டிங் செய்ய
பெட்ரோல்20.65 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்

மாருதி இக்னிஸ்

4.4634 மதிப்பீடுகள்இந்த காரை ரேட்டிங் செய்ய
பெட்ரோல்20.89 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்

மாருதி பாலினோ

4.4608 மதிப்பீடுகள்இந்த காரை ரேட்டிங் செய்ய
சிஎன்ஜி30.61 கிமீ / கிலோ
பெட்ரோல்22.35 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் ஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புதிய வேரியன்ட்
Rs.6.23 - 10.19 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.4.70 - 6.45 லட்சம்*
எலக்ட்ரிக்புதிய வேரியன்ட்
Rs.7 - 9.84 லட்சம்*
எலக்ட்ரிக்
புதிய வேரியன்ட்
Rs.5 - 8.45 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை